35. வீழும் இருவர்க்கு இனிதே


மெஸ்ஸி எதுவும் பேசாமலிருப்பது ஷிவா மனதை உறுத்தியது.

மெஸ்ஸி, நாம் காலையில் சென்னைக்கு செல்ல வேண்டும். நினைவுறுத்தினான்.

யெஸ் டியர்… பட்  ஐ ரிகால்டு அகெய்ன் அபௌட் த நேட்சர் ஆஃப் இன்பா…

அவன் வாழ்க்கையில் அவனுடைய சிந்தனையில் உனக்கு சிக்கல்கள் என்பது என்னவாக இருக்கக்கூடும்?

காமசூத்ரா கொடுத்த தேசம் இது ஷிவா. இங்கே பெண்கள் எப்படி பார்க்கப்பட்டு இருக்க வேண்டும்?

அவர்கள் எத்தகைய மனநிலையில் கொண்டாடப்பட்டு இருக்க வேண்டும்? ஆனால் அனைத்தும் இங்கே தலைகீழாக இருக்கிறது என்றாள் மெஸ்ஸி.

உண்மைதான் மெஸ்ஸி உன் கேள்வி.

ஒரே ஒரு நூலில் மஞ்சள் தடவி அதை தாலி என்பார்கள். அதன் மீது பெண்கள் கொள்ளும் நம்பிக்கைகள் பற்றி அதில் உணர்வுகள் கொள்ளும் புனிதம் பற்றி நீ பார்த்திருக்க முடியாது மெஸ்ஸி. அதே போல் அதுவே அவர்களுக்கு சமூகத்தில் பாதுகாப்பை உருவாக்குகிறது.

அப்படி கோடிக்கணக்கான பெண்கள் இங்கே பாலியல் பற்றி அதன் உளவியல் மூலக்கூறுகள் பற்றியெல்லாம் ஆழமாக யோசித்து நேரம் கடத்தாமல் வாழ்வில் சுதந்திரமாகவும் நல்ல நிம்மதியாகவும் வாழ்ந்து வருவதை நாம் புரிந்து கொள்ள வேண்டும் மெஸ்ஸி. ஆனால் பெண்ணிய பார்வையில் இதுதான் PATRIARCHY அல்லது MISOGYNY.

அப்படி கடந்து போகலாமா ஷிவா? அவன் பூச்சி என்கிறானே? காமத்தை உருவாக்கும் மனது ஒரு பூச்சியாகி விடுமா? அறிவை பூச்சி எனலாமா?

பெருமளவில் என்பதுபோல் எங்கோ சிலர் என்ற விதிவிலக்குகள் எல்லாம் விட்டுட்டு நாம் வெறும் சமூக ஆய்வாக பார்க்கலாமா ஷிவா?

காஃப்கா The Metamorphosis நாவலை ஒரு பூச்சியை முன் வைத்துதான் எழுதினார். நம் மரபை கடத்துகின்ற விந்து என்பதும் சொல்லப்போனால் ஒரு புழுவின் அம்சம்தானே கொண்டிருக்கிறது?

இது எந்த மாதிரியான ஆய்வு ஷிவா?

ஆய்வு இல்லை. விமரிசனம். காமம் ஏன் வணிகமாக்கப்பட்டு அல்லது அதில் ஏன் வணிகத்தை திறம்பட திணித்து வைத்து இருக்கிறார்கள்?

இப்படி ஒரு உடல் சார்ந்த எளிய குறுகிய கால இன்பத்தை ஆபாசம் குற்றம் என்று யார் ஏன் கற்பித்தார்கள்? இது கூட ஒரு ஆய்வுதான் சமூகத்துக்குள் மெஸ்ஸி.

இப்படி கற்பிக்கப்பட்ட அதே விஷயம் கலையாக உளவியலாக மருத்துவமாக சந்தையில் நுகர்வுசார் மூலப்பொருளாக மாற்றப்பட்டு வெகு சாதாரண மனிதர்களின் மனதில், எண்ணத்தில் யாரும் எளிதில் அறியாதவண்ணம் சாமர்த்தியமாக புகுத்தப்பட்டது எப்படி ஷிவா?

மெஸ்ஸிக்கு  இன்னும் இப்படி நிறைய கேட்க வேண்டும் என்று தோன்றியது. ஆனால் கேள்விகளை விடவும் பார்க்கும் யதார்த்தம் அவளை திணற செய்தது. அவளுடைய எல்லா கேள்விகளுக்கும் சில பதில்களும் அவளிடமே இருப்பது போல் தோன்றின. அந்த பதில்கள் எந்த களைப்பும் இல்லாமல்  மாறிக்கொண்டே வந்தன.

இப்போது மெஸ்ஸி கேள்விகளை மாற்றி கேட்க துவங்கினாள்.

ஷிவா, என் அப்பா வயது கொண்ட உன்னிடம் எது உறவு வைத்துக்கொள்ள என்னை தூண்டியது?

உனக்கு என்னோடு உடல் சார்ந்த உறவு வைத்துக்கொள்ள இப்போது தயக்கம் வருகிறதா மெஸி?

இல்லை. எப்போதும் அதைச்செய்ய நான் மகிழ்ந்து விரும்புகிறேன். ஆனால் காரணம் சொல்ல வேண்டும் நீ.

Florence Henderson என்ன சொல்றார்னா “There is no age limit on the enjoyment of sex. It keeps getting better.”

இன்னொரு கோணத்தில் இத்தகைய உறவானது Oedipus complex  ஆகவும் இருக்கலாம் என்றான்  ஷிவா.

இன்னும் விளக்கமாக?

இன்டெலக்க்ஷுவல், கரேஜ், மிஸ்டரி, அச்சிவ்மெண்ட்,  அட்வென்ட்சர் இப்படி பல ஆர்வங்களில் திறமைகளில் ஆண்கள் மட்டுமே முன்னிலையில் வரும்போது அந்த மாதிரி வாய்ப்புகள் பெரிதும் இல்லாதபோது பெண்ணும் அதில் அதீத ஆர்வமும் அக்கறையும் கொள்கிறாள்.

ஆனால் ஒரு பெண்ணுக்கான தேடல் கற்றல் அதற்கான தொடர்புகள் அது சார்ந்த பயணங்கள் பொருளாதாரம் எல்லாம் கடுமையான வரையறைக்குள் முடக்கப்பட்டவை.

அவள் குடும்பத்தால் அல்லது அவளுடைய உறவுகளால் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறாள். ஒரு அலகில், ஒரு சமூக பார்வையில் அது பாதுகாப்பை நிலையானது போல் உறுதி செய்யும்போது  மறைமுகமாக அவளுக்கு ஒரு ஆவலை உண்டாக்கி அனைத்தையும் மீறிப்பார்க்கவும் ஒரு தூண்டுதல் தரலாம்.

அதில் தோற்கும்போது  அந்த மாதிரியான வெற்றிகளை பின்னொரு நாளில் அவள் அல்லது அவன் இன்னோரு நபரிடம் காணும்போது அவனை அல்லது அவளை சொந்தமாக்கி கொள்ள விரும்பலாம். அப்படி கூட நமது உறவும் இருக்க வாய்ப்பு உள்ளது மெஸ்ஸி.

அப்படியெனில் என் அம்மா? டென்னிசன்?

The female version of the Oedipus complex. I mean Electra complex.

ஷிவா, கூர்ந்து பார்க்கும்போது இவை எல்லாம் மனம் சார்ந்த சிக்கல்தானே? நியோ ஃபிராய்டியம்தானே? பதில் ஆமென்றால் மருத்துவத்தின் மூலம் குணம் செய்யலாம் அல்லவா?

நிச்சயமாக, அதை நீ விரும்புகிறாயா?

இல்லை. ஒருபோதும் இல்லை என்று கூறி அவன் இதழ்களில் நீண்டநேரம் மெஸ்ஸி முத்தமிட்டாள். அவன் கைகள் கொண்டு தன் மார்பில் அழுத்தி இறுக்கினாள்.

ஷிவா சில நிமிடத்தில் விலகி அவளை சோபாவில் அமர வைத்தான். பின்னர் இருவரும் ஆர்டர் செய்திருந்த Carlsberg Elephant strong Malt பியரையும் Steak, Pizza மற்றும் Sausageயும் சாப்பிட்டு கொண்டே பேச துவங்கினார்கள்.

மெஸ்ஸி, நீ தியோடர் அடர்னோவின் சில கட்டுரைகள் படிக்க வேண்டும். அதில் முக்கியமானது ‘பண்பாட்டு தொழிற்சாலைகள்’.

அதை வணிகத்தோடு மட்டும் ஈடுபடுத்தி கொள்ளாமல் பாலுறவோடும் சேர்த்து பொருத்தி பார்க்க வேண்டும்.

நிச்சயமாக ஷிவா.

மெஸ்ஸி, முரண் உறவுகள் குறித்து உனக்கு அதன் slang terms தெரியுமா?

சொல்லேன் ஷிவா… அது என்னென்ன?

“Sugar daddy” or “Sugar mama”

Sugar baby.

Gold digger

Trophy wife

தெளிவாக சொல்லேன் ஷிவா…

சொல்றேன் தெரிந்து வைத்துக்கொள்.

முதிய அல்லது நடுத்தர வயது கொண்ட பெண் இளம் வயது ஆணோடு விருப்பம் கொண்டால் அவள் cougar or puma.

அதுவே நடுத்தர வயது ஆணாக இருந்தால் அவனுக்கு boytoy, toyboy,  himbo, gigolo, or cub னு சொல்வாங்க. இந்த உறவுகள் எல்லாம் அப்படியே ரிவர்ஸ் ஆர்டர்ல இருந்தால் Rhino அப்பறம் trout and manther னு சொல்வாங்க.

வயதான ஆண் இளம்பெண்ணோடு விருப்பம் கொண்டால் அவனுக்கு kitten or panther னு பெயர். அப்பறம் இன்னும் cradle-snatcher, cradle robber னு கூட சொல்வாங்க என்றான் ஷிவா.

அப்போ ஷிவா, நீ எனக்கு என்ன ஆவே செல்லக்குட்டி என்றாள் மெஸ்ஸி.

இந்திய சொல்லாடலில் நான் உன் அத்தான் போதும் என்றான் ஷிவா.

ம்ம்ம்ம்…. அந்த வார்த்தை அழகானது.

உன் முன்னர் கேள்விகளை திரும்பவும் இப்போது பேசலாமா மெஸ்ஸி நாம்?


  1. [Oedipus complex? According to the controversial concept, children view the same-sex parent as a rival. Specifically, a boy feels the need to compete with his father for the attention of his mother, or a girl will compete with her mother for the attention of her father.]

2.  [Electra complex? According to Greek mythology, Electra was the daughter of Agamemnon and Clytemnestra. When Clytemnestra and her lover, Aegisthus, killed Agamemnon, Electra persuaded her brother Orestes to help her kill both her mother and her mother’s lover.]

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.