36. பதியின் கலங்கிய மீன்


மெஸ்ஸியின் கேள்விகள் எளிதானவை. காமம் ஏன் போக பொருளாகி போனது இன்று என்று கேட்கிறாள். ஷிவாவுக்கு அதற்கான பதில் தெரியும்.

காமம் சந்தையாக்கப்பட்டது குறித்த  முழுக்கதையும் மெஸ்ஸிக்கும் ஏன் நமக்கும் நன்றாக தெரியும்.

ஒரு சில சொற்களை படங்களை கொண்டு  தேடுபொறியில் அலசி வடிகட்டினால் வந்து விழுந்து விடும் அத்தனை தகவல்களும் படங்களுடன்.

காமம் வெறும் சிற்றின்பம் மட்டும் அல்ல. அதற்குள் இதழ்கள், திரைப்படம், ஓவியம், இரண்டு விதமான இணையம், செயலிகள், கலைகள், வணிகம், அரசியல், குடும்பம், தேசவிரோதம், பன்னாட்டு சதிகள், தீவிரவாதம், போதை மருந்துகள், மதம், ஜாதி, கல்வி, பண்பாடு எல்லாம் கலந்து மலிந்து குவிந்து கிடக்கின்றது.

வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் ஆண்களை பெண்களும் பெண்களை ஆண்களும் சீர்குலைக்கவும் மட்டம் தட்டவும் தயங்குவதே இல்லை.

இந்த பிரிவில் இந்த எரிச்சலில் ஈகோவில் காமம் சார்ந்த எதுவுமே மிக வேகமாக வளர முடியும். இவை உரம்.

காமத்துக்கு உரம் ஒருவன் மனதில் ஒருத்தியும், ஒருத்தி மனதில் ஒருவனும் விடாது எதிர்ப்பை தூண்டுவது.

அந்த எதிர்ப்பு என்பது பகையல்ல. நினைவுறுத்துவது. வாயேன், இன்னும் இங்கிருக்கிறேன் என்பது. ஒரு ஜீவன் அன்பை நிராகரித்தால் அது ஜீவனே அல்ல. காதல் நிலத்தில் களர் எப்படி முளைக்கும்?

ஷிவா பியரை பருகிக்கொண்டே இதைத்தான் மெஸ்ஸியிடம் சொன்னான் ஒரே வார்த்தையில்… Postsexualism.

ஆனால், காமம் என்றவொன்றின் பெயரால் உருவாக்கப்படும் வர்த்தகம் உலக அளவில் இன்றைக்கு பல பில்லியன்கள். அது எழுத்து அல்லது படம் என்று வரும்போதும் மில்லியன் கணக்கில் சந்தை மதிப்புகள் உண்டு. இதுவே லாகிரி போதையுடன் கலந்து கொள்ள இன்னும் பண மதிப்பு உயரும்.

உண்மைதான் ஷிவா, ஆனால் இந்த போதை அல்லது பெண்கள் எல்லாம் அதை விரும்பும் எல்லோருக்கும் அதே போலவே கிடைத்து விடாது அல்லவா?

நீ சொல்வது சரிதான். ஆனால் மறைமுக வணிகம் ஒன்று உண்டு தெரியுமா?

அந்த வணிகம் அனைத்திலும் இருக்க கூடியதுதான்.

ஷிவா மொபைலில் ஒரு வெப்சைட்டை இயக்கினான். அதில் ஒரு படத்தை பிளே பண்ணவும் உருவங்கள் கோணலாகவும் நீளமாகவும் தெரிந்தது. இரு பெண்கள் இணையும் உடலுறவு காட்சி. எனினும் முழுமையாக பார்க்க முடியாத அளவுக்கு கோணலான தெளிவின்மை.

மெஸ்ஸி, இதை நீ தெளிவாக பார்க்க விர்ஷுவல் ரியாலிட்டி டூல் வேண்டும். அது மிக சாதாரண இரண்டு லென்ஸ் மட்டுமே கொண்ட பிளாஸ்டிக் டப்பா. ஆனால் அது தரும் அனுபவம் வேறு விதத்தில் இருக்கும்.

விர்ஷுவல் ரியாலிட்டி மிஷினுக்கு வேறு நிறைய பங்களிப்புகள் இருந்தாலும் இதை இங்கே உருவாக்கியது யார் என கேட்டான்.

கேப்பிடலிசம்? இலுமிநாட்டிஸ்? அல்லது கார்பொரேட்ஸ்? டெக்னாலஜி? சயன்ஸ்?

ஷிவா சிரித்தான்.

தன்னிடமிருந்த உருசு விர்ஷுவல் ரியாலிட்டியில் மொபைலை திணித்து படத்தை இயக்கி அதை மெஸ்ஸியின் கண்களுக்கு நேராக பொருத்தி அதன் பெல்ட்டை அவள் தலைக்கு பின்புறமாக இறுக்கி பிணைத்தான்.

சற்று நேரம் கழித்து அதை உருவி எடுத்த மெஸ்ஸி வியப்பாய்  யூ.. டாம்ன்… வாட் என் …… என்றாள்.

வாங்க தோன்றுகிறதா மெஸ்ஸிக்கு…

நோப். யூ ஆர் ஹியர் மேன்.

உன்னிடம் இருக்கும் கிளுகிளுப்பான எல்லா சாதனங்களையும் இன்ன பிற பொம்மைகளையும் இப்படித்தான் ஒரு மனச்சரிவில் வாங்கியிருப்பாய் மெஸி.

ஒரு பொருள் அல்லது படம் அல்லது கதை இவற்றில்தான் பாலுறவில் அனார்க்கிஸம் என்பது உருவாகிறதா?

பெடரல் மெஸ்ஸி. ஒன்றுக்கொன்று நாம் காரணங்களை வகுத்துக்கொண்டே போக அவை தமது எல்லைகள் தாண்டி விரிவடையும். தத்துவம் ஆகி விடும்.

நீ  Michel Foucault எழுதிய The History of Sexuality என்னும் புத்தகத்தை படித்து பார்த்தால் மேற்கத்திய நாடுகளில்  நான்கு நூற்றாண்டுகள் பாலியல் அடக்குமுறை பற்றியும் அதனால் உருவான பல்வேறு  பின்விளைவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள முடியும்.

ஷிவா, இந்தியசூழலில்…?

இப்போது க்ளோபலைசேஷன் ஆனபின் ஒரே கிராமம்தானே இந்த உலகம். ஏதோ ஒரு விதத்தில் நாம் பாலுணர்வை பற்றி யோசித்து கொண்டே இருக்கிறோமே.

ஆய்வுகள் இருக்கிறதா ஷிவா?

வேடிக்கையாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஏழு நொடிக்கு ஒருமுறை நாம் செக்ஸ் குறித்து சிந்திக்கிறோம் என்ற வதந்தி உண்டு தெரியுமா?

இல்லை ஷிவா, அதைப்பற்றி முழுக்க சொல்லேன் எனக்கு…

இதை ஆய்வு செய்ய ஒஹாயோ மாகாண பல்கலைக்கழகத்தில் டெர்ரி ஃபிஷர் மற்றும் அவரது ஆய்வுக்குழு ‘கிளிக்கர்ஸ்’ என்ற கருவியை தங்கள் ஆய்வுக்காக பயன்படுத்தினார்கள்.

மேலும், நம்முடைய மனதில் தோன்றும் அளவற்ற எண்ணங்களை கணக்கிட அறிவியல்பூர்வமான முறை ஒன்றை உளவியலாளர்கள் பின்பற்றுகின்றனர். அதற்கு பெயர் “எக்ஸ்பீரியன்ஸ் சேம்பிளிங்”.

இதன்படி, ஒரு நாளில் ஓர் ஆண் சராசரியாக 19 முறை பாலியல் உறவு குறித்து யோசிப்பது தெரிய வந்துள்ளது. அதுவே பெண் ஒரு நாளில் 10 முறை பாலியல் உறவு குறித்து சிந்திக்கிறாள்.

இன்னொரு ஆய்வில், ‘பாலியல் ஆசை அதிகம் உள்ள பெண்கள் பலர், புத்திசாலியாகவும், உதவி செய்யும் குணமும், அன்பாகவும், மேலும் நேர்மையான பண்புகளோடும் இருக்கிறார்கள்’ னு தரவு கிடைச்சிருக்கு.

அப்போ நான்? என்று கேட்டுக்கொண்டே மெஸ்ஸி சின்ன கொட்டாவியை விடவும் ஷிவா அருகில் வந்து தூங்கு மெஸ்ஸி. இப்பொழுது நேரம் ஆயிற்று என்றான்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.