மெஸ்ஸி: கேட்டதுக்கு சொல்லுங்க சார்.
சவரிமுத்து: செக்ஸ் சாட்லே இருந்து ஆரம்பிச்சு ஒன்னு ஒண்ணா போவோம். இப்ப sexting சொல்ற சாட். முதலில் அதோட அறிவியல் என்னன்னு பார்க்கலாம்.
அப்படி என்ன இருக்கு அந்த மைண்ட் ப்ளோயிங் கான்வர்சேஷனில்?
பொதுவா “talking dirty is nothing more than sexual prelude. It’s all about the sex.” னு அதை மங்களகரமா சொன்னாலும் உண்மையில் அதில் என்ன வசீகரம்?
வனக்குயில்: எனக்கு தெரிஞ்சு ஒரு கிக். அது என்னன்னு ஆர்வம் இருக்கிற புதுசா முலை ஊறும் பொண்ணும் சின்னதா சாமான் இருக்கிற ஒரு பொடிப்பயலும் வெட்டியா பேசி பேசி அவங்களோட கற்பனைக்கு ஏற்ப மாறி மாறி தீனி போடறது. அவ்வளவுதான்.
சவரிமுத்து: அப்பறம்?
வனக்குயில்: குடும்ப பெண்களும் இதில் இருக்காங்க. அப்படியெல்லாம் ஒன்னும் இல்லைன்னு சும்மா சொல்லிட்டு கடந்து போக முடியாது.
ஒரு மன அழுத்தம் இல்லாட்டி வீட்டில் இருக்கும் பிரச்னை. அதுவும் இல்லன்னா புருஷன் கூட நல்ல உறவில் இல்லாதது. இப்படி ஒண்ணுமே இல்லனா உருப்படியா செய்ய வேலை இல்லாமல் நல்லா முரட்டு தீனியா நொங்கி தின்னுட்டு கொழுப்பு வச்சு அரிப்பெடுத்து இருக்கிறது இப்படி பல காரணங்கள் சொல்ல முடியும். பிரியாணி அபிராமி கேஸை நாம் அவ்ளோ லேசில் மறக்க முடியுமா?
மெஸ்ஸி: அறிவியல் என்ன சொல்லுது?
சவரிமுத்து: ஒரு ஜோர்னல்ல படிச்சேன். அதை சொல்றேன். Sexual arousal அதாவது பாலியல் தூண்டல் என்பது நம்ம உடலில் இல்ல. நம்ம மூளையில் இருந்துதான் அது துவங்குது.
டோபமைன் னு ஒரு என்ஸைம் சுரக்குது. இது நாம் பார்க்கும் அரை நிர்வாண படம் இல்ல ஒரு கெட்ட வார்த்தை இல்லாட்டி நம்ம ஆளோட குரல் இல்லாட்டி அவன்/ அவள் போட்டு கொள்ளும் வாசனை திரவியம் இவை எல்லாம் மூளைக்குள் காமம் குறித்த சிந்தனைகள் மற்றும் ஆர்வத்தை ட்ரிக்கர் பண்ணி மெல்ல ஆனால் ஸ்ட்ராங்கா தூண்டி விடுது.
இதே மாதிரிதான் sexting. அதுவும் இந்த மாதிரி போதையை கொடுக்கும். இது ஒரு வகையில் exchange of racy messages னு சொல்லலாம்.
இதுல சாட்டிங் இரண்டு பேருக்கும் ஒரு எல்லையற்ற இன்பம் தரக்கூடியது.
The whispers, moans, and screams accompanied by dirty talk are all processed by the brain’s hearing center, including the temporal lobe, the frontal lobe, and the occipital lobe னு அந்த கட்டுரையை அதன் ஆசிரியர் முடிக்கிறார்.
மெஸ்ஸி: அப்போ காதல்? ஒருதலை காதல், தோல்வி, பிரிவுத்துன்பம் னு பலர் அதீதமான உணர்வில் சிக்கி தடுமாறி போறாங்க. சயன்ஸ் எப்படி பார்க்கும்?
சவரிமுத்து: உங்களுக்கு அந்த உணர்வு வந்து இருக்கா? சார் உங்க தோழமை. ஸ்க்யூஸ்மீ ஆஸ்கிங், ஒருவேளை பிரிவு வந்தால் தாங்க முடியுமா?
மெஸ்ஸி: நிச்சயம் முடியாது. ஆனால், மேலே என்ன சொல்றதுன்னு தெரியல.
சவரிமுத்து: விட்டுங்க. உங்களோட ஏஜ் ஃபேக்டர்லதான் கேட்டேன். காதலோட அறிவியல் ஹார்மோன் தொடர்புதான்.
மெஸ்ஸி: எக்ஸ்ப்ளென் பண்ணுங்க.
சவரிமுத்து: இப்ப பார்த்தா மூளையோட பயோ கெமிஸ்ட்ரி லதான் இந்த காதல் சமாச்சாரம் எல்லாம் நடக்குது.
காதல் காமம் எல்லாம் அகடு முகடு இந்த CREST TROUGH னு சொல்வாங்க இல்ல. அந்த மாதிரிதான்.
ஆண்களுக்கு Estrogen பெண்களுக்கு Testosterone. இந்த ஹார்மோன்கள் காமத்தை நிர்வகிக்கும்.
அதே மாதிரி பால் ஈர்ப்புக்கு Adrenaline, Dopamine, and Serotonin. கூடுதலா இந்த மூன்று சிப்பாய்களும் சேர்ந்தா நமக்கு புதுமையான இல்ல உற்சாகமான தருணங்களில் நல்லா சுரந்து வயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க வைக்கும்.
என் ஆளு அப்ப ஒரு கவிதை ஒன்னு சொல்லுங்க ன்னு கேப்பா பாரு வனம்… அப்படி இருக்கும் எனக்கு.
மெஸ்ஸி: அவ்வளவுதானா?
சவரிமுத்து: இல்லை. Oxytocin and Vasopressin னு நம்ம மூளையில் ரெண்டு கூர்க்கா ஹார்மோன்ஸ் இருக்கு. ஒருத்தரை நாம் நீண்டகாலம் நமது நினைவில் யௌவனமாக வைத்திருக்க இவங்க ரெண்டு பேரும் முக்கியம்.
தாய் மகவு கொஞ்சல் நம்முடைய கட்டிப்பிடி வைத்தியம் எல்லாத்துக்கும் ஆக்சிடோஸின்தான் தளபதி.
ஆக ஓர் காதல் ஹார்மோன் சேட்டை. நாம் அதை நல்லா புரிஞ்சுக்கணும். ஒரு தத்துவஞானி, கவிஞர்கள் சொல்வதை அறிவியல் ரசிக்கும். ஏற்று கொள்ளாது.
வனக்குயில்: டர்ட்டி வேர்ட்ஸ் அதான் கெட்ட வார்த்தைகள் கூடவா இப்படி?
சவரிமுத்து: இப்ப பொண்ணுங்களே அதை ஆசை ஆசையா ஆண்களை சொல்லச்சொல்லி அதை கேட்டு கூடவே அவங்களும் சொல்லி உச்சம் ஆர்கஸம் எல்லாம் அடைய ஆரம்பிச்சுட்டாங்க.
நிவோனி: அதுக்கும் அறிவியல் இருக்கா?
சவரிமுத்து: Certainty. Dirty talk stimulates the amygdala, which is the fear center of the brain and controls excitement and pleasure.
இப்ப ஒரு உதாரணமா “I want to take a bite out of that juicy tomato” னு நீங்க சொல்லுங்க. ஒண்ணும் தோணாது. அதையே தமிழில் கொஞ்சம் மாத்தி சொன்னா ஏகமா கிக் வருது. அது எப்படி?
ஜெர்மனில் இருக்கும் ஒரு மோசமான கெட்ட வார்த்தை நம்மை பாதிக்காது. ஆனா தமிழில் ஏதாச்சும் அப்படி ஒரு வார்த்தையை சொன்னால் மூளையில் சுர் னு ஒன்னு வருது இல்ல? அது ஏன்? கிளர்ச்சி அல்லது கோபம் வர என்ன காரணம்?
2005 ல ஒரு ஆராய்ச்சி பண்ணினாங்க ஹார்மோன் பத்தி. அதுலே ஒரு ரிசல்ட் கிடைச்சது. அதாவது two parts of the hypothalamus — the preoptic area and the suprachiasmatic nucleus — are responsible for sexual pleasure.
ரெண்டு பேர் டபுள் மீனிங் ல பேசறது சாட்ல கெட்ட வார்த்தை பேசறது எல்லாம் இருவருக்கும் அதிகமான உணர்வை தூண்டிவிடும் னு ரிசல்ட் சொல்லுது.
இன்னும் பல பல ஆய்வுகள் உளவியல், நரம்பியல் சார்ந்து நடந்துட்டுதான் இருக்கு. அதிலும் பல முடிவுகள் கிடைச்சு இருக்கு.
அதுல முடிவா நாம் மனரீதியாகவே அந்த வார்த்தைகளை விரும்பறோம் னு சொல்றாங்க. இது சாட் ல மட்டும் இல்ல இன்டெர்கோர்ஸ் நடக்கும்போதும்…
நிவோனி: கெட்ட வார்த்தை பேசுவோம் னு எழுத்தாளர் பெருமாள்முருகன் முன்னாடி ஒரு புத்தகம் எழுதி போட்டு இருக்கார். படிச்சிருக்கேன்.
மெஸ்ஸி: ஓ…கிரேட். இங்கிலிஷ்ல அதுக்கு encyclopedia அப்பறம் dictionary கூட இருக்கு.
வனக்குயில்: இப்போதான் முதலில் சாட் அப்பறம் போட்டோ ஷேர் பண்றது அப்பறம் ஆடியோ கால் கடைசியா வீடியோ கால் பண்ணி ஒருத்தரை ஒருத்தர் பார்த்துட்டே செய்துக்கறது னு வந்தாச்சு இல்ல.
சவரிமுத்து: அது எல்லாம் பிரச்னையில் கூட முடியும் இல்லையா?
வனக்குயில்: ஏன், கொலை இல்லாட்டி தற்கொலையில் கூட முடிந்ததும் உண்டு. கல்யாணத்தில் போய் முடிந்ததும் உண்டு. இந்த முரண்கள் கூட முக்கியம்.
சவரிமுத்து: ஆம். சில நெறிகள் உண்டு. யார் கூட எப்போ எப்படி எந்தவித பாதுகாப்பு இருக்குன்னு எல்லாம் உறுதி செய்துட்டு அப்பறம்தான் முடிவு செய்ய வேண்டும். இதில் இன்னும் கூட சில வக்கிரங்கள் கூட உண்டு.
மெஸ்ஸி: அது எப்படி? என்ன?
சவரிமுத்து: வனம், கொண்டித்தோப்பு பூமாலை தெரியுமா ஆரப்பாளையக்காரி தனிஷாவை தெரியுமா உனக்கு?
வனக்குயில்: ஆமா. எரி சாராயம் கடத்தி அதை விக்கிற ஆளுங்கதானே.
சவரிமுத்து: அவங்கதான். பொழுது போகாமே இந்த ரெண்டு பேரும் ஊர்லே இருக்கும் ஆட்களை தூண்டி விட்டு சாட் பண்ணி அதை எனக்கு மாமா இதை பாருங்க னு screenshot எடுத்து அனுப்பி வைப்பாங்க.
வனக்குயில்: சரி. அதுல என்ன இப்ப?
சவரிமுத்து: அதுலே சாட் பண்ற மாதிரியே இந்த ரெண்டு பேரும் கூடவே இருக்கும் பார்ட்னரை மெல்ல காய்ச்சி எடுப்பாங்க.
முக்கியமா அவங்க ஜாதியை வச்சு மதத்தை வச்சு வீட்டு ஆளுங்களை வச்சு… மனசுக்குள் ஒரு வக்கிரத்தை பேசி பேசி தூண்டுவாங்க.
வனக்குயில்: அது எப்படி? அவங்க கூட பேசரவங்களுக்கு சந்தேகம் வருமே?
சவரிமுத்து: சென்டிமென்டலா பேசி பேசி மயக்கிருவாங்க. அது ஈஸிதான். ஒரு பெண் அளவற்ற செல்லம் கொடுத்து வளர்ந்து இருந்தால் ஒரு ஆண் கடுமையான முறையில் வளர்க்கப்பட்டு இருந்தால் ரொம்ப ஈஸியா நாம் இந்த எதிர்ப்பை உருவாக்க முடியும். வளைக்க முடியும் அந்த பார்ட்னர்களை.
அவங்க பேசற விதத்தை வச்சு ஒரு பொறுக்கி பயல் நாலு நாளில் அவளை மடக்கி போடுவான். சில லெஸ்பியன்ஸ், gays கூட இதேமாதிரி அலைவரிசையில் வருவாங்க.
தன் வீட்டுக்குள்ள எவன் ஒருவன் அக்கா தங்கைக்கு எப்போ பார்த்தாலும் அட்வைஸ் பண்ணிட்டு அவங்களை ரொம்ப கூர்மையா கண்காணிச்சு கண்ட்ரோல் பண்றானோ அதில் பல பேர் இப்படி பொறுக்கி பயலுவதான்.
அவங்களோட மொபைல் போன் வாங்கி டைப்பிங் பண்ணி பார்த்தா அதோட கீ போர்ட்ல நிறைய கெட்ட வார்த்தை என்ட்ரி ஆகி இருக்கும். அதை வச்சே நாம ஈஸியா கண்டுபிடிக்க முடியும். அதுக்குத்தான் ரொம்ப பேர் விவரமா தங்கிலிஷ் யூஸ் பண்ணுவாங்க. எல்லாமே சின்ன சின்ன கணக்குத்தான்.
ஒரு பொண்ணு தன் அக்கா மார்பை அவ தூங்கும்போது படம் எடுத்து அனுப்பி இருக்கான்னா பாரேன். ஒருத்தன் அவன் அம்மா உள்பாவாடையை போட்டுட்டு படம் எடுத்து அனுப்பி இருக்கான். இதெல்லாம் அவங்க என்கிட்ட பார்வர்ட் பண்ணி அனுப்பினாங்க.
நிவோனி: ஏன் இப்படி?
சவரிமுத்து: அதான் சமூக கோபம்னு நான் சொல்றேன்.
வனக்குயில்: புரியலையே…
சவரிமுத்து: பல அடுக்கு கொண்டது நம் சமூகம். ஒருத்தன் பட்டினியில் மட்டும் சாகும்போது ஒருத்தன் ஜீரணம் ஆகாமே சாவான். பட்டினின்னா அது வெறும் உணவு சார்ந்தது மட்டும் இல்லை இப்ப. ஆடம்பரம், அங்கீகாரம், வசதி, வாய்ப்பு இப்படி பலவும் அதில் அடக்கம்தான்.
அவற்றை இழந்த மற்றும் இல்லாத ஒருவன் மற்றும் ஒருவளுக்கு இதை கேட்டா உன்னோட விதி கர்மா தலையெழுத்து னு சொல்லி நாம் மட்டும் நல்லா தின்னுட்டு பட்டினி கிடக்கும் ஒரு மனிதன் கிட்டே பொய்களை அள்ளி விட்டுட்டு போவோம்.
ஆனால் அவன்/அவள் போக மாட்டாங்க. நிப்பான். பார்த்துட்டேதான் இருப்பான். அவனோட சோகம் கோபமா மாறும். உள்ளே ஒரு எரிச்சல் மண்டி புகையும்.
நம்மளை ஏன் பீ மாதிரி பாக்கிறாங்க னு அவன் யார்கிட்டே போய் கேக்க முடியும்? கேட்டாலும் என்ன சொல்ல போறாங்க? அந்த பொறுமை முடிவுக்கு வரும்போது அவனும் இப்படி ஒரு எதிர் முடிவுக்கு போவான்.
அப்படியான நபர்கள் எங்களிடம் அதாவது நம்மை மாதிரியான சமூக எதிரிகளிடம் வருவாங்க. அதாவது நாமதான் அவனை தயாரிக்கறோம். உருவாக்குகிறோம்.
வனக்குயில்: பிறகு?
சவரிமுத்து: வெறி ஏறும்.
மெஸ்ஸி: யாருக்கு?
சவரிமுத்து: கடுவனுக்கும் ஏறும். அதே போல பொட்டைக்கும் விஷமா ஏறும்.
ஆனால் அவங்களோட இந்த வெறியை அதன் பின் விளைவை நாம தாங்க மாட்டோம். அந்த சக்தி நமக்கு இல்லை.
ஏன்னா அவனையும் அவளையும் இந்த சமூகத்துக்கு வெளியில் தூக்கி வீசி எறிஞ்சதே நாம்தான். அவங்களோட சமூக கலகம் தன்னை புறக்கணிப்பதில் தொடங்கி தன்னையே அவமதிப்பதில் துவங்கி அப்பறம் இந்த சமூகத்தை அவமதிக்க தொடங்குவாங்க.
நிவோனி: So?
சவரிமுத்து: அவனுக்கு இந்த சாட் கூட ஒரு களம். அவனுக்கு அது போதை. இந்த சமூகத்தை அவன் முடிஞ்சவரை குதறி எடுக்க ஆசையோட அங்கே வருவான். நான் ஆணை மட்டும் சொல்லலை. அதோடவே பெண்ணையும் சேர்த்தே சொல்றேன்.
வனக்குயில்: இப்ப புரியுது.
சவரிமுத்து: பல சாட் ல இருக்ககூடிய எல்லா கெட்ட வார்த்தைகளும் அவங்க இந்த சமூகத்தை நோக்கி ஆவேசமா சொல்றதுதான். கூடவே இதில் ஒரு மனத்திருப்தி அவங்களுக்கு.
மெஸ்ஸி: இதில் என்ன திருப்தி?
சவரிமுத்து: “Talking dirty can enhance sex because it’s another layer of sexual behavior beyond physical sexual acts.”
இந்த இன்பக்கருத்தை அவன் வேறொரு கோணத்தில் அணுகுவான். அவன் அந்த பெண் கிட்டே நெருங்க முடியாமல் ரியலா அவளை அனுபவிக்க முடியாமல் கூட இருக்கலாம். சமூக கட்டுப்பாடு காரணமா…
இது அவனுக்கும் தெரியும். என் கூட போனில் செய்டி. ஆனால் உனக்கு நல்ல மாப்பிள்ளை வந்தா நீ கட்டிக்கன்னு அவன் சொல்வான். அதே மாதிரிதான் அவளும் சொல்வாள், உனக்கு ஒரு நல்ல பொண்டாட்டி வந்தா நீ அவளை கட்டிட்டு போய்டுடா ன்னு.
அவளோ பெரிய பணக்கார பொண்ணு மாதிரி பாவனை காட்டலாம். ஆனால் அவன் அவளை துளித்துளியா பார்த்து படிச்சு ரசிச்சு எல்லாம் முடிச்சிருப்பான். அவனுக்கு இந்த விஷயத்தில் நோக்கமெல்லாம் எப்பவும் அவளோ காதலோ இல்லை. இது பெண்களுக்கும் இந்த காலத்தில் பொருந்தும். பெண் பாவம் பொல்லாதது என்பது நீர்த்து போன ஒரு பழமொழி மட்டுமே.
மெஸ்ஸி: வேறு யார்? வேறு என்ன?
சவரிமுத்து: பேரெண்ட்ஸ். பெற்றோர். அவங்கதான் சப்ஜெக்ட்க்கு முதல் தலைமுறை. அதாவது அவன் அப்பா ஒரு மூத்த தலைமுறை இல்லையா?
அதை பழி வாங்க அவனுக்கு இந்த கலகம், எதிர்ப்பு, மீறல் எல்லாமே தனக்கானதோர் நல்ல வாய்ப்புன்னு நினைப்பான்.
வனக்குயில்: இது சாத்தியமா?
சவரிமுத்து: பூமாலை, தனிஷாவும்தான் இதுக்கு எக்ஸாம்பிள்ஸ்…
நிவோனி: அப்போ காதல் இருக்காது?
சவரிமுத்து: இந்த காலத்தில் என்ன சார் காதலாவது மயிராவது? இப்ப நான் கூட்டிட்டு வந்தேனே பொண்டாட்டின்னு ஒருத்தியை…
மெஸ்ஸி: yes..
சவரிமுத்து: அவ இப்ப கவுன்சிலரோட இருப்பா. நான்தான் அவளை அனுப்பி வச்சேன். சந்தோசமா போயிருக்கா. நானும் கவுன்சிலரோட பொண்டாட்டியை சாட் லே எல்லாம் பார்த்து இருக்கேன். இப்ப கூட நான் அவளோட போக முடியும். அந்த மீசை முறுக்கி கவுன்சிலர் என்னை என்ன செய்வான்?
வனக்குயில்: கம்னு மூடிட்டு இருப்பான். அவன் படிக்க தெரியாத கரை வேட்டி கட்ற அரசியல்வாதிதானே.
நிவோனி: கம்னு ஒருத்தன் பார்ப்பான். அவன் தன்ஆத்திரத்தை இப்படித்தான் தணிப்பான்னு சொன்னீங்களே…
சவரிமுத்து: ஆமாம்.
நிவோனி: அது எந்த ஜாதி? எந்த வகையறா ஆட்கள்ன்னு கொஞ்சம்….
சவரிமுத்து: சாரே, இங்கே ஒவ்வொரு குடிமகனுக்கும் இரண்டு ஜாதி இருக்கு. ஒன்னு தானா பிறப்பில் வருவது. அடுத்த இன்னொன்னு இந்த சமூகம் வளர்ந்தபின் அவனுக்கு தருவது.
ரெண்டாவது ஜாதி அடையாளம் கொஞ்சம் முக்கியம். உதாரணமா இப்ப ரோஜா காலனியில் இருக்கும் என் நண்பன் இளம்பூ விழியன் பிறந்தபோது சொறி சிரங்கொடதான் வாழ்க்கை நடத்தினான். அப்போ அவன் ஜாதி வேற.
படிச்சான். சொச்ச மார்க் எடுத்துட்டு பாஸ் பண்ணி அரசாங்க வேலைக்கு போனான். அங்கே பைசல் பண்ற தொழிலை நல்லா கத்துக்கிட்டு ஒரு பூணுல் போடறவக வீட்டு பெண்ணையும் கல்யாணம் பண்ணினான். இப்ப நல்லா செட்டில் ஆகிட்டான் வாழ்க்கையில்.
ரோஜா காலனி பக்கம் வர்றதே இல்லை. அந்தஸ்து வந்ததாலே அந்த பக்கம் தலை வச்சு கூட படுக்க மாட்டான். அவன் அப்பாரை நான் அதே சொறி சிரங்கொட போன வாரம் டாஸ்மாக் ல பார்த்தேன். இதான் இப்ப நவீன ஜாதி அடுக்கு முறை.
கவர்மெண்ட் சலுகைன்னா நான் ஏழை எனக்கு கொடுன்னு காரில் வந்து ஜாதி சான்றிதழ் வாங்கிட்டு போவான்.
அவனை நீ டேய் பிச்சைக்காரா ன்னு கூப்பிட்டா நான் ஆண்ட பரம்பரைன்னு துள்ளுவான். இந்த அதிகார பேடித்தனம் இந்தியா முழுக்க இருக்கு.
அப்புறம் முதல் ஜாதி சொன்னேனே. அதுதான் முக்கியம். பொறப்புல வரும். பசி ஜாதி. இதுக்கு மனிதர் எல்லா ஜாதி மதத்திலும் நிறைய உண்டு. ரொம்ப பெரிய மெஜாரிட்டி ஜாதி இதுதான். இவங்க முழிச்சா எல்லாமே மாறும். ஆனால் எழுவத்தி நாலு வருஷமா விடிஞ்சது தெரியாமல் தூங்கறாங்க. ஒருவேளை அரசியல் சார்பு இல்லாமல் அவங்க முழிச்சிட்டா..
வனக்குயில்: நாம இருக்க முடியாது.
எல்லோரும் சிரிக்கிறார்கள்.
You must be logged in to post a comment.