52. தன்நோய்க்கு தானே மருந்து


நிவோனி: பாலியல் படங்கள் நானும் பார்க்க கூடியவன்தான். உங்கள் கருத்தை பதிவு செய்யுங்கள் கேட்போம்.

சவரிமுத்து: நீங்கள் விரும்பி பார்க்கும் நபர்?

நிவோனி: இப்படி கேட்டால்…? ஒரு வெப் சைட்டில் சென்று ஏதோ தோன்றுவதை பார்க்கிறோம். அதில் யாராக இருந்தால் என்ன?

சவரிமுத்து: Kay Parker?

நிவோனி: தெரியாது.

சவரிமுத்து: Taboo:Sacred, Don’t Touch னு புக் எழுதினாங்க.

நிவோனி: ஓஹ். எழுத்தாளரா? எந்த கன்ட்ரி?

சவரிமுத்து: அவங்க டாப் மோஸ்ட் போர்ன் ஆக்ட்ரெஸ். பிரிட்டிஷ். இப்ப அமெரிக்கால இருக்காங்க. அவங்க பாலியல் நடிகையாக சக்கைப்போடு போட்டாங்க. Taboo படம் ஒரு முக்கியமான படம். இது உதாரணத்துக்கு சொன்னேன்.

Golden age of porn னு கூகிள் பண்ணினா பெரிய கட்டுரை வரும். அதில் இப்படி எல்லா படமும் பத்தின முழு தகவல்கள் இருக்கு. அதோட முழு ஹிஸ்டரியும் இருக்கு. முடிஞ்சா படிங்க. முடிஞ்சால் அந்த படங்களும் பாருங்க.

மெஸ்ஸி: எல்லோரும் குடும்பமா இருந்து பார்க்க முடியுமா?

சவரிமுத்து: அது அவங்கவங்க வசதியை பொறுத்தது. கட்டில் சண்டையில்தான் இந்த மாதிரி படங்களே ஆரம்பிக்கும்.

நிவோனி: செக்ஸ் படம் பார்ப்பதை நீங்க ஆதரிப்பீங்களா? பார்க்கலாமா?

சவரிமுத்து: நீங்க ஏன் பார்க்கறீங்க?

நிவோனி: நான் ரெகுலர் இல்லை. ஒரு சோர்வான மனநிலையில்தான் அதை நான் பார்க்கிறேன்.

சவரிமுத்து: அப்போ அது விரக்தியான மனநிலைன்னு சொல்லலாமா?

நிவோனி: சொல்லலாம். எனக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. ஆனால் வழிபாட்டில் ஈடுபாடு இல்லை. பிரார்த்தனை செய்வதில் கவனம் கொள்ள மாட்டேன். ஆக அந்த இடத்தை இந்த படங்கள் நிரப்பி விடலாம்.

சவரிமுத்து: ஒரு சப்ஸ்ட்டியூட். ஓகே. அதில் எந்த காட்சியை எந்த மாதிரியான கோணத்தை எவ்வளவு நேரம் ரசீப்பீங்க?

நிவோனி: Intrusive question. ஓகே. நான் ஆழ்ந்து பார்க்க மாட்டேன். அது ஓடிட்டு இருக்கும். நான் சும்மா என்னவோ யோசிச்சிட்டுத்தான் இருப்பேன். ஆஃப் பண்ணினா காட்சி மறந்து போய்டும்.

சவரிமுத்து: ஏன்னா உங்களுக்கு அடுத்து வேலை பொறுப்புன்னு நிறைய இருக்கும். அதான் முக்கியத்துவம் அப்படி அதுக்கு தர முடியல.

நிவோனி: இருக்கலாம்.

சவரிமுத்து: மெஸ்ஸி, வனம் நீங்க?

வனக்குயில்: என்னை விட்டுடுங்க. அது ட்ரிக் எதுவும் இருக்கான்னு மட்டும் தொழில்படுத்திதான் பார்ப்பேன். கவர்ச்சி எல்லாம் அதில் இல்ல.

மெஸ்ஸி: ஷிவா சொல்ற படங்கள். அது பெரும்பாலும் பாலியல் சிக்கல் அதன் அறம் அதன் குழப்பம் அதன் ஒளிப்பதிவு இசை மட்டும்தான் பார்ப்பேன்.

சவரிமுத்து: மெஸ்ஸி சொன்னதுதான் என் தேடல்களும். அதுதான் அதை பார்க்கும் முறையும் கூட.

நிவோனி: அப்போ பார்க்கலாம். அதுதான் உங்களோட கருத்தா?

சவரிமுத்து: ஆமாம். ஆனால் அப்படி எல்லோரும் பார்க்கலாமா? பார்க்கும் எல்லோருக்கும் மனநிலை அப்படித்தான் இருக்குமா? இப்படியும் கேள்விகள் நம் முன்னாடி இருக்கு. அதை தவிர்க்கவும் கூடாது.

உடல் சார்ந்த மயக்கம், உறுப்புகளின் வனப்பு, வேகத்தில் இருக்கும் ஆச்சர்யம், நெடுநேரம் இயக்கம் இது இது எல்லாம் கடைந்தெடுத்த வணிகப்பொய் னு அதில் நடிக்கறவங்க பலமுறை ஸ்டேட்மெண்ட் கொடுத்தாச்சு.

“Porn is practically ubiquitous,” னு Ana Bridges சொன்னது எனக்கு பிடிச்ச க்யோட்.

அதில் ஏதோ ஒரு செயல், செய்கை, சொல், காட்சி நமக்கு நினைவுறுத்தும் ஏதோ ஒன்றுதான் அதில் இருக்கும் நமது கவர்ச்சியையும் மயக்கத்தையும் தூண்டிட்டே இருக்கும். அப்படித்தான் அந்த படங்கள் நமக்குள் நாம் அறியாது ஊடுருவி பாயுது.

மெஸ்ஸி: Pornography is the attempt to insult sex, to do dirt on it. டி ஹெச் லாரன்ஸ் சொன்னது இது.

சவரிமுத்து: Sports is to war as pornography is to sex. அப்டின்னும் சொல்லி இருக்காங்க.

வனக்குயில்: Pornography tells lies about women. But pornography tells the truth about men. இப்படியும் சொல்லி இருக்காங்க.

நிவோனி: எல்லாம் விடுங்க. சார் அந்த படம் பார்த்தால் என்ன? உங்க அறிவியல் பார்வைகளில் சொல்லுங்க.

சவரிமுத்து: நன்மைகள் னு பார்த்தால் அதை விரல் விட்டு எண்ணிடலாம். அதுவும் ரொம்ப பொருட்படுத்த முடியாத அளவில் இருக்கு.

மெஸ்ஸி: எக்ஸ்ப்ளெய்ன் பண்ணுங்க.

சவரிமுத்து: ஹெல்த் பார்வையில் சேஃப்டி அது. எய்ட்ஸ் வராது. பார்ப்பதால் கொஞ்சம் கவலைகள் குறையுது. நம்மளோட அஃரஸிவ் டெண்டன்சி குறையும். லிபிடோ டெவலப் ஆகும்.

புதுசா கல்யாணம் ஆனவங்களுக்கு ஒரு வித சப்போர்ட் பண்ணும். மாஸ்டெர்பேட் செய்ய தூண்டல் தருவதால் தற்காலிக திருப்தி நிச்சயம் கிடைக்கும். Ethical porn னு இப்ப ஒரு கான்செப்ட் உருவாகிட்டு இருக்கு.

திருமணம் முடிந்து மூன்று பிள்ளைகள் பெற்றெடுத்த கப்பில்ஸ் பலர் இவற்றை எல்லாம் பார்ப்பதை புள்ளி விவரங்கள் எடுத்து பார்க்கும்போது நமக்கு இன்னும் வேறு மாதிரி முடிவுகள் கிடைச்சிருக்கு.

நிவோனி: அப்பாடா… அப்போ அதை நாம் பாக்கலாம்.

சவரிமுத்து: ஆனால் நெகட்டிவ்ஸ்தான் நிறைய இருக்கே.

மெஸ்ஸி: பாக்கலாமா? கூடாதா?

சவரிமுத்து: பார்க்க கூடாது. அது போலி. பார்க்க பார்க்க புத்தி பேதலிக்கும். நமக்கு ஒரு ஷேடோ லைஃப் உருவாகும். யாரை பார்த்தாலும் அந்த மாதிரி பார்க்க தோணும். ரியலா அதுல எந்த ஒரு ஸீனும் மனதில் பதிய போவது இல்லை. யாரோ ரெண்டு பேர் செய்யறதை பார்க்க அதில் என்ன டேஸ்ட் இருக்கு?

ஒருத்தி கூட ஒருத்தன் கூட நீ அதை செய். ஒரு அர்த்தம் இருக்கு. ஏன் அதை விட்டுட்டு எவனோ எவளோ செய்யறதை நீ வெட்டியா உக்கார்ந்து பார்க்கிறே? உன்னை எது இப்படி பார்க்க தூண்டுது ன்னு யோசிச்சா காமம் சார்ந்த ஆசையை விடவும் ஏதோ ஒரு கோபம் இயலாமைதான் உனக்கு உள்ளே ஓடிட்டு இருக்கும். அது வெளியில் தெரியாது.

அதை தணிக்கத்தான் இந்த போர்ன் ஜில்னெஸ்ல உக்காரும் ஆசை வருது. செக்ஸ் படம் பாக்க பாக்க அதிலேயே உக்கார உக்கார கோபமும் ஆத்திரமும் வெளியில் தெரியாமல் கவனத்தில் வராமல் பல மடங்கு அதிகரிக்கும்.

நிவோனி: அவ்ளோதான் இருக்கா?

சவரிமுத்து: teens, pre teens வயதினர் மூளையில் இந்த படங்கள் நிறைய பாதிப்பை உருவாக்கும்.

நம்ம மூளையில் க்ரே மேட்டர் பகுதியில் ஆழ்ந்த தாக்குதலை உண்டாக்கும்போது சீக்கிரமே cognitive அதாவது அறிவாற்றலை பாதிக்கும்.

சமூகத்தில் இருந்து பிளவுபடுவோம். எரிச்சல், கோபம், கவலை, பயம் எல்லாம் அடிக்கடி அல்லது எப்பவுமே இருக்கும்.

மற்ற மனிதர்கள் நமக்கு வெறும் dressed ஆப்ஜெக்ட் மாதிரி தெரிவாங்க. அதாவது மனிதர்களை ஒரு செக்ஸ் பொம்மையாக மட்டுமே பார்ப்போம்.

நம்ம பழக்க வழக்கங்கள் முழுக்க மாற ஆரம்பிக்கும். தேவை இல்லாத ரிஸ்க் எடுக்க வைக்கும். சில அபாயகரமான விஷயங்களை செய்ய தூண்டும்.

குற்ற உணர்ச்சி, அவமானம் இது மனசை பாடாப்படுத்தும். சுயமரியாதை இழக்கலாம். நம் நம்பிக்கை லட்சியம் நெறிகள் எல்லாம் சேதப்படுத்தி கொள்வோம்.

சரியா தூக்கம் வராது. தலை வலிச்சிட்டே இருக்கும். சோர்வா இருப்போம். நம்மை நாம் கேர் எடுத்துக்க மாட்டோம்.

இப்படியே பார்த்து பழகி போய்ட்டா நாம் நம்மை அறியாமல் தீவிரமாக அடிக்ட் ஆகிட வாய்ப்பு ரொம்ப அதிகம்.

மூட் டிஸ் ஆர்டர் ஆகும்போது பெர்சனல் லைஃப் போய்டும். பேமிலியில் காட்டிய அட்டாச்மெண்ட் போய்டும். பொருளாதார பாதிப்புகள் உருவாகும். ஆன்மீகம் சார்ந்தவை போய்டும்.

முழு அடிமையா ஆகும்போது வெறும் சாதரணமான போர்ன் படங்களை தாண்டி மனசு கேக்கும். க்ரேவிங் வந்துடும். அது வரும்போது நாம் நம்மை முழுக்க இழந்து இருப்போம்.

ஆக்ஸுவலி, சொன்னது கம்மிதான். இது நபருக்கு நபர் மாறுபடலாம்.

மெஸ்ஸி: இவ்ளோ இருக்கா? அப்போ நீங்க மட்டும் பார்ப்பது? உங்களுக்கு இந்த பாதிப்பு இல்லையா?

சவரிமுத்து: ஹிஸ்டரி.

வனக்குயில்: என்ன சவரி. குழப்பரீங்க?

சவரிமுத்து: நான் ஒரு படத்த பார்த்துட்டு போய்ட மாட்டேன். அதுல யார் நடிச்சது யார் எடுத்தது அவங்க பின்னணி என்ன?

இந்த படம் எடுக்க நோக்கம் என்ன? எல்லாம் இன்டர்நெட் ல படிப்பேன். அந்த படமெல்லாம் ஓசி சைட்ல வராது. காசு கொடுத்து மெம்பர் ஆகணும்.

அதை பார்த்துட்டு சிலர் எழுதும்போது தில்லாலங்கடியா எழுதுவாங்க. சாதாரண குடும்ப கதையில் கூட ஜாதி மதம் குடும்ப செக்ஸ் னு எழுதிட்டு அப்பறம் செக்ஸ் ரொம்ப தப்புன்னு மெல்ல ஹிப்னடைஸ் பண்ணுவாங்க.

ஒரு தப்பை செய் னு எழுதறது, செய்யாதே ன்னு எழுதறது… ரெண்டுமே perspective ல ஒண்ணுதான்.அது என்ன மைய கருத்தோ அதை படிக்கறவங்க மனதில் அப்படியே பதிய வைக்கணும்.

தர்க்க அறிவு இல்லாத ஒருவன் எந்த விஷயத்தை படிச்சாலும் நாசாமாத்தான் போவான். அதான் நானும் போகட்டும் னு எழுதறேன். திருந்தவா போறானுங்க இவனுங்க…

அதான் திரும்ப சொல்றேன், இங்கே உண்மையான பாலியல் நுகர்வு என்பது தடுக்கப்படுது. அது இருக்கும் வரை எல்லா இடத்திலும் ஒரு பாலியல் அசம்பாவிதம் நடந்துட்டுத்தான் இருக்கும்.

பேப்பரில் வரும். அதை படிச்சிட்டு உச் கொட்டிட்டு சாபம் விட்டு வீட்டுக்குள்ள உக்கார்ந்து கதை எழுதி போய்ட்டே இருக்க வேண்டியதுதான்.

நிவோனி: பாதிப்பை உணர்ந்த பாவம் பெண்கள் சாபம்தானே விட முடியும்? வீட்டை விட்டு வெளியில் வர முடியாதபோது…

சவரிமுத்து: ஏன் வர முடியாது?

வனக்குயில்: அதான் பிள்ளையை படிக்க வைக்கணும், புருசனுக்கு பண்ணனும், செய்யணும்.. காய் வாங்கி எலும்பு கறி வாங்கி சமைச்சு அடுப்பு தொடைச்ட்டு வீடு பெருக்கி வேலையெல்லாம் முடிச்சிட்டு டீவீ எல்லாம் பார்த்துட்டு ஒளிஞ்ச நேரத்தில் இப்படி சாபம் மட்டும்தானே விட முடியும்?

சவரிமுத்து: ஓஹ்.. நீங்க சாபம் விட்டா நாங்க அழிஞ்சு போய்டுவோமா…

வனக்குயில்: எழுதி பேசி பாடி ஆடி அதை மீடியாவில் பதிவு செய்யறோம் இல்ல…?

சவரிமுத்து: அதை ஒரு நாயும் சீந்தாது னு தெரிஞ்சுட்டுதான் பண்ணனும். இது ஏன்னா எந்த மீடியா எவ்வளவு தூரம் பவர்புல்னு எங்களுக்கு தெரியும்.

செக்ஸ் பத்தி ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஒரு காட்சி கூட எடுக்காமல் முழுசா படத்தை பண்ணிட்டு இல்லை ஒரு நாவல் எழுதிட்டு எப்பவும் செக்ஸை மட்டுமே கன்ஸ்யூமர்ஸை யோசிக்க வைக்கிற தேட வைக்கிற திறமையும் எங்களுக்கு இருக்கு.

செக்ஸ் மட்டும் இல்லை, காதலை கூட ரொம்ப உன்னதமாக்கி எழுதி வாசகர்களை ஒரு பாக்கெட் நாவல் லெவலுக்கு கீழே இறக்கி கொலாப்ஸ் பண்ண வைக்கவும் முடியும்.

குரூப் டான்ஸில் ஆடும் பெண்கள் ஏன் தொப்பிளை மாரை நிறுத்தாமல் குலுக்கி குலுக்கி காட்டணும்? அந்த படத்து நடிகன், இயக்குனன் தன் வீட்டு பொம்பளையை இப்படி ஆட விட்டுத்தான் மூடு ஏத்திட்டு பண்ண போவானா? இல்லையே.

உனக்கு எங்கே தொட்டா நிக்காம ஒழுகும் னு எங்களுக்கு தெரியும். அங்கேதான் சொல்லாமே அடிப்போம். அடிச்சிட்டும் இருக்கோம். நீ ஊரை திருத்தறேன் னு எழுத ஆரம்பிக்கறதே இந்த ஊரை மொத்தமா கெடுக்க மட்டும்தான். வனம், நாம எத்தனை பார்த்து இருக்கோம்.

மெஸ்ஸி: தீர்வு?

சவரிமுத்து: திறந்த மனதோடு பளீர்னு சொன்னால் தீர்வு இல்லை. வழி இருக்கு.

மெஸ்ஸி: என்ன அது?

சவரிமுத்து: திட்டம் போட்டு சூழ்நிலை உணர்ந்து செக்ஸ் பண்ணுங்க. எப்பவும் மாட்டிக்காமே பண்ணுங்க. நல்லா என்ஜாய் பண்ணுங்க.

போட்டோ அனுப்பினால் முகத்தை காட்டாமல் க்ளோஸ் அப் போட்டு அனுப்பி சந்தோசமா ரசிங்க. அப்பறம் கவனமா அழிச்சிடுங்க. இதுக்கு நல்ல நல்ல ஆப்ஸ் இருக்கு… படத்தை பதுக்கி வைக்க, அழிக்க ன்னு. அதையெல்லாம் தெரிஞ்சு வச்சுட்டு இனிக்க இனிக்க மேட்டர் பண்ணுங்க.

கடவுள் கண்ணை எல்லாம் குத்திட்டு போக மாட்டார். ஆணோ பெண்ணோ பரஸ்பரம் மரியாதை கொடுத்து இங்கிதமா மேட்டர் பண்ணுங்க. சந்தோசமா இருங்க.

எல்லோரும் சிரித்தனர். அப்போது ஒரு ஆள் கதவை திறக்க வனக்குயில் முகம் கடுமையாக மாறியது.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.