50. மாய மகளிர் முயக்கு


மெஸ்ஸி: இன்டர்நெட்டில் வரும் எல்லா பதிவுகளையும் ஆபாசம் னு கடந்து போக முடியுமா? அது தட்டையான அணுகுமுறை இல்லையா?

பாலியல் பற்றிய அபத்தம் கட்டுக்கதை விரசம் வம்பளப்பு அரட்டை எல்லாம் இருந்தாலும் ஆரோக்கியமான கட்டுரைகள் வெளி வரவே செய்யுது. என் அமெரிக்க பார்வையில் இதை நான் உறுதியாக சொல்ல முடியும்.

வனக்குயில்: அவை எந்த மொழி எந்த பிரதேசம் என்ன நோக்கத்தில் இருக்குன்னு பார்க்கணும் மெஸ்ஸி. செக்ஸ் பத்தி ரொம்ப மேலோட்டமா மறைச்சு பேசினா அது காமத்தை நோக்கி கூட்டிட்டு போகும்.

அதே சமயத்தில் செக்ஸ் பத்தி ரொம்ப விரிவா பேச ஆரம்பிச்சா அந்த சப்ஜெக்ட் மெடிக்கல் பாராமெடிக்கல் சைக்காலஜி னு இன்னொரு தளத்தில் பயணிக்கும். போக, உங்க நாட்டில் ஸ்பான்சர் அதுக்கு அதிகம். ஆனால் இங்கே அப்படி இல்லை.

நிவோனி: சவரி உங்க கருத்து என்ன?

சவரிமுத்து: நான் இந்த இடத்தில் ரெண்டு பேர் கருத்துக்களையும் மதிக்கறேன். ஆனால் இதுக்குள்ள புவியியல் வேறுபாடு இருக்கு. அதையும் விரிவா பேசணும். நேரம் இப்ப இல்லையே…

மெஸ்ஸி: இருக்கு. நீங்க பேசுங்க சார்.

வனக்குயில்: எழுத்தாளரே சொல்லுங்க கேப்போம். ரம் நிறைய இருக்கு. ஒரு லார்ஜ் எல்லோருமே இப்ப சாப்பிடலாம்.

(அனைவரும் மதுவை பகிர்ந்து குடித்து கொண்டே பேசுவதை தொடர்கின்றனர்)

சவரிமுத்து: இப்ப அமெரிக்கா உள்பட மொத்த மேற்கத்திய நாடுகளில் மொழியில் பிரிவு இருந்தாலும் ஆங்கிலம் பரவலான தொடர்பு மொழி.

தேவன் ஏசுவாக இருந்து மக்களை ரட்சிக்கிறார். யூரோ டாலர் சந்தையை மதிப்பிழந்து போகாமல் காப்பாற்றி வருகிறது. ஐ. நா, உலக வங்கி, மெடிக்கல் கவுன்சில் எல்லாம் மேற்கில் இருக்கு.

ஆனால் மிடில் ஈஸ்ட், ஆப்ரிக்கா, ஆசிய கண்டங்கள் இப்படி இல்லை. அதற்கான முயற்சிகள் நடந்துட்டே இருந்தாலும் அது சமநிலையை தரலை.

அதேபோல் எல்லா வித வேறுபாடுகளும் அப்படினா மொழி இன ஜாதி இப்படி எல்லா வேறுபாடுகளும் இங்கே இருக்கு.

இதில் எப்படி பாலியலில் ஒருவரின் கருத்தை நாம் இணையம் மூலமாக நம்பிக்கை கொண்டு படிக்க முடியும்?

நிவோனி: நீங்க இதை அறிவியல் இல்லாது சமூகவியல் கொண்டு பேசறீங்க.

சவரிமுத்து: ஆமாம். டாக்டர் வேலையை நீங்க பார்த்தால் மெஸ்ஸிக்கு கோபம் வருமே (என்ற சவரியை பார்த்து மெஸ்ஸி புன்னகைத்தாள்.) சமூகவியலாகவே நாம் தொடர்ந்து பேசலாம்.

வனக்குயில்: எப்படி எது எந்த தளத்தில் பேசினாலும் அது பின் நவீனத்துவ பார்வையில் தன்னையே discourse செய்து கொள்ளும். ஸோ, நாம் அதையே தொடர்வோம்.

சவரிமுத்து: இப்ப இங்கே இருக்கும் தொழில்நுட்ப வளர்ச்சி நமக்கு தெரியும். அதேபோல் நமது தத்துவ வறட்சியையும் மறக்க கூடாது.

ஒரு மிடில் கிளாஸ் அம்பியோ, பய புள்ளையோ, செல்லாகுட்டியோ எப்படியாச்சும் techies ஆகனும்தான் தவியா தவிப்பான். யாரு? அவங்களோட பேரெண்ட்ஸ்.

ஸ்கூல் காலேஜ் னு அனுப்பி வச்சு தம் பிள்ளைகளை கோர் ப்ராடெக்ட்டா ரெடி பண்ணி ஒரு இடத்தில் ஜாப் னு உக்கார்த்தி ஜாதகத்தை தூக்கிட்டு சந்தையில் ஏலத்தை ஆரம்பிப்பானுங்க. ஆனால் பாலியல் உரிமை என்பதன் தளமும் அதன் விரிவும் ஆழமும் வேறு.

வனக்குயில்: அதை விளக்குங்கள்.

சவரிமுத்து: செக்ஸ் முழு சுதந்திரமான ஒன்னு. அது லேட்டஸ்ட் சமூகவியலை விட லாங் லாங் எகோ மரபியல் வழி வந்தது.

நிவோனி: அது உண்மைதான்.

சவரிமுத்து: செக்ஸ் உலக அளவில் நாம் பார்த்தால் pre historic ல துவங்கி இன்னிக்கி postmordaism வரைக்கும் எந்தவிதமான மாற்றத்தை முன் வைத்து வந்து இருக்குன்னு பார்த்தால் அது ஒரு வலிமையான எதிர்ப்பை மட்டுமே இந்த சமூகத்தில் பதிவு செய்துட்டு இருக்கு.

நிவோனி: உதாரணம்?

சவரிமுத்து: இதுக்கு ஒரு சம்பவத்தை எனக்கு நடந்ததை சொல்றேன்.

மிஸ்பாஹ் னு ஒரு பொண்ணு. இப்ப காஷ்மீரில் இருக்கா. ரொம்ப ரொம்ப கட்டுப்பாடான குடும்பம். தன்னோட தெருவில் ஊரில் என்ன நடக்குதுன்னு தெரியாது. ஆனால் உலகத்தில் என்ன நடக்குதுன்னு நல்லாவே தெரியும். காரணம் மொபைல். அவள் பேரழகி, நல்ல புத்திசாலி, அழகியல் தேடல் மிக்கவள்.

ஆன்லைன் ல பழக்கம் ஆகிட்டா எனக்கு. ஓரிரு முறை ஆன்லைன் ஹாட் சாட் ல உச்சம் அடைந்து பின் தனக்கு பெட்ரூம் செக்ஸ்தான் பிடிக்கும் னு சொன்னாள். நான் எப்பவும் வற்புறுத்த மாட்டேன்.

ஒருநாள் அவகிட்ட கேட்டேன். யார் கூட செய்தால் உனக்கு பிடிக்கும் னு?

பிச்சைக்காரன் யாரும் கிடைத்தால்… நான் நிச்சயம் அவரோடு செய்வேன்னு சொன்னாள்.

வனக்குயில்: என்ன இப்படி? விபரீதமான ஒரு தேடல்?

சவரிமுத்து: நானும் கேட்டேன். அதுக்கு அவ என்ன சொன்னா தெரியுமா?

ஒரு பிச்சைக்காரன் எல்லா விளிம்புக்கும் அப்பால் துரத்தப்பட்ட மனிதன். அவன் முழு பாலியல் தேவையும் முடக்கப்பட்டு பின்னர் ஒரு எளிய பூவை போல் ஏதேனும் கோவில் அல்லது மசூதியில் தனது உணவு குறித்து மட்டுமே நிற்பதை அதற்காகவே வாழ்வதை நாம் எப்பவும் பாக்க முடியும்.

அவர்களுக்கு அதிகாரம், ஆடம்பரம், வசதி, ஒழுக்கம் குறித்த எந்தவிதமான போலியான மற்றும் அசலான கருத்துக்கள் எதுவும் இருக்க முடியாது. ஆனால் அவர்கள் மனதுக்குள்ளும் காமம் ஒரு சுனாமி போல் உறங்கி கொண்டிருக்கும்.

சரியான விகிதத்தில் தூண்டினால்  நம் மீது அவர்களை எழுச்சி கொள்ள செய்தால் அவர்கள் உடல் உறவால் நமக்கு தரக்கூடிய அந்த பேரின்பத்துக்கு எந்த விலையும் கொடுக்க முடியாது.

என்னை இறுக்கி வைத்திருக்கும் இந்த முட்கள் நிரம்பிய கட்டுப்பாடுகளை அவரோடு சேர்ந்து நாள் முழுக்க காமத்தின் கதவை சுக்கலாய் உடைத்து சிதைப்பேன் ன்னு சொன்னாள்.

நிவோனி: ஆன காமத்தை மதங்கள் காம உணர்வை நேர்ப்படுத்தின. அதில் உள்ள பிணக்கை நெறிப்படுத்தின.

சவரிமுத்து: அப்படித்தான் சொல்வாங்க. அப்போ ஏசு காலத்தில் கூட விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண்கள் உண்டு. அந்த கதை நமக்கும் தெரியும். படிச்சிருக்கோம்.

மெஸ்ஸி: அங்கே மட்டும்தானா?

சவரிமுத்து: இந்நிலை ஆசிய ஆப்பிரிக்க கண்டத்திலும் உண்டு. ஆனால் பாதிப்பு என்னவோ பெண்களுக்கு மட்டும்தானே.

வனக்குயில்: இன்னிக்கு மாறிடுச்சி இல்ல எல்லாமே. அன்னிக்கு பிரபுக்கள், கவுண்ட்டிகள், குறுநில அரசர்கள் முதல் ஜமீன்தார் வரை அவங்களோட கையாள் வரை உருவாக்கின பாலியல் அடக்குமுறை இப்ப இல்லையே.

சவரிமுத்து: ஆனால் அந்த நீண்ட மரபின் பிரதிபலிப்பு இன்னும் இருக்கே.

மெஸ்ஸி: என்ன சொல்றீங்க?

சவரிமுத்து: எல்லா வரலாறும் பொய் னு சொல்றேன். வரலாற்றின் தந்தையான ஹெரோடோடஸ் கண்ட கனவு வேற.

ஆனால் நம் அகடமிக்ஸ் உருவாக்கின ஹிஸ்டரியோகிராபி வேற. இப்போ நாம் இன்டர்நெட்டில் படிக்கிற மீம்ஸ் ஹிஸ்டரி வேற. இதுவும் நம்ம பாலியல் சிந்தனை, உரிமைகளையும் அரசியலோடு சேர்த்து ரொம்பவும் பாதிக்குது.

வனக்குயில்: தெளிவுபடுத்துங்க.

சவரிமுத்து: நம்ம இணையவாலாக்கள் அக்கபோர்தான் சொல்ல வரேன்.

வனக்குயில்: மீம்ஸ் சோஷியல் மீடியா எல்லாம் ஆத்தென்டிக் இல்லையே. சும்மா பார்த்து சிரிச்சிட்டு போய்டலாம்.

சவரிமுத்து: அப்படி எல்லோரும் போறது இல்லையே. அதுல ஒரு சென்சிட்டிவ் கிடைக்குமான்னு ஆம்னி பஸ்’ல ஏறிட்டு நிறைய பேர் ஊர் உலகம் எல்லாம் சுத்தி வர்றது தெரியுமா?

நிவோனி: very fewer than mass society.

சவரிமுத்து: ஒரு விதைதான் ஒரு காடு. ஒரு சிறிய விதையில்தான் மிகப்பெரிய ஆலமரம் உறங்கி கொண்டிருக்கிறது.

எல்லோரும் இப்போது சவரிமுத்துவை உன்னிப்பாக கவனிக்க துவங்கினார்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.