45. சான்றோர் பழிக்கும் வினை


வனக்குயில் லேசாக செருமி விட்டு மிச்சத்தையும் சொல்ல துவங்கினாள்.

Philemaphobia.

இதுதான் முத்தம் பற்றிய பயம். முத்தமிட்டால் அப்போது உடம்புக்குள் நுண்ணுயிரிகள் கடந்து செல்லும் என்ற பயம்தான். இருப்பினும் உடலுறவில் ஈடுபடுவதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை.

Paraphobia

நம்மில் பெரும்பாலோர் பாலுறவில் சில வக்கிரமானவர்களை கேள்விப்பட்டு வெறுக்கும்போது, ​​பாராபோபியாவால் பாதிக்கப்பட்டவர்கள் அந்த வக்கிரம் குறித்து கேட்டாலே அல்லது பார்த்தாலே கூட  பயப்படுவாங்க.

அவர்களுக்கு உடலுறவு என்பது அவர்கள் வகுக்கும் ஒழுக்கம் சார்ந்த நெறிமுறைகளின்படி கண்டிப்பாக இருக்க வேண்டும்.

என்ன நிவோனி? உனக்கு இது செல்லுமா என்று வனக்குயில் கேட்டு கண்ணடிக்க மெஸ்ஸி நாணி வளைந்தாள். அவன் அளவெடுத்த காட்சி நினைவுக்குள் வர மெஸ்ஸி உள்ளுக்குள் குளிர்ந்தாள்.

Ithyphallophobia.

Phallophobia’னு சொல்வாங்க. கொஞ்சம் வித்தியாசமான பயம் இது.  ஆண்களும் சரி பெண்களும் சரி பொதுவாக இந்த பயத்தால்  பாதிக்கப்படலாம்.  ஆனால் விளைவுகள் ஒவ்வொருவருக்கும் வித்தியாசமாக இருக்கும்.

அதாவது ஆண் உறுப்பை பார்த்தா வரும் பயம். இந்த போபியாவால் பாதிக்கப்பட்ட ஆண்கள் விறைப்புத்தன்மையைப் அடையும்போது அதை பார்த்தும் கூட பயப்படுவாங்க. பெண்களுக்கு இது ஒரு ஆணின் நிமிர்ந்த ஆண்குறியைப் பார்க்க அல்லது தொடும் போது கூட இந்த பயம் வரும்.

Eurotophobia

Phallophobia எதிர்இது. யோனி பற்றிய பயம்.  இந்த போபியா உள்ள பெண்கள் எவ்வகையான பாலியல் தூண்டுதலுக்கும் பயப்படுகிறார்கள். அதே சமயம்  ஆண்கள் யோனியைப் பார்க்கவோ அல்லது தொடர்பு கொள்ளவோ ​​பயப்படுகிறார்கள்.

Medumalacuphobia

ஒரு ஆண் தனக்கு விறைப்புத்தன்மை போய்டுமோ இல்லை இழந்துட்டோமோ னு நினைக்க வைக்கும் இந்த பயம்.  Medumalacuphobia நோயால் பாதிக்கப்பட்ட ஆண்கள் சமயங்களில் உடலுறவில் ஈடுபட மறுக்கிறார்கள். அவர்கள் தங்கள் துணையை ஏமாற்றிவிடுவோம் என்றோ அல்லது அவர்களை தாம் சங்கடப்படுத்தி விடுவோம் என்றோ தம் மனதளவில் பயப்படுகிறார்கள்.

Agrophobia

கடந்த காலத்தில் ஒருவித பாலியல் சீண்டலுக்கு ஆளானவர்கள் அல்லது அப்படி ஒருவருக்கு நடக்கும்போது கூட இருந்து அதை எதிர்க்காமல் சாட்சியாக இருப்பினும், பாலியல் துன்புறுத்தலை வாழ்வில் எதிர்கொள்ளாதவர்களுக்கும் கூட இது நிகழலாம்.

Venustraphobia

நம்பினாலும் நம்பாவிட்டாலும் அழகான பெண்களின் பயம் இதுதான்.  அழகு எ என்பது பெரும்பாலும் அகநிலை சார் உணர்வாக இருப்பதால், இந்த பயத்தால் பாதிக்கப்பட்ட பெண்கள் குறிப்பாக அழகாக இருக்கும் மற்ற பெண்களைக் கண்டு பயப்படுகிறார்கள்.

அவர்கள் தாம் அத்தகைய அழகுக்கு தகுதியற்றவர்கள் என்று அவர்கள் பயப்படுகிறார்கள் அல்லது பெண்ணின் அழகு தங்களுக்கு ஏதேனும் தீங்கு விளைவிக்கும் எனவும் அவர்களுக்குள் கவலைப்படுகிறார்கள்.

Androphobia

Venustraphobia என்பதற்கு நேர்மாறான ஆண்ட்ரோபோபியா என்பது ஆண்களின் பயம்.  கவர்ச்சிகரமான ஆண்களை பார்த்து மட்டுமல்ல, முழு ஆண் பாலினமும் பார்த்தால் கூட பயம் வரும்..

இது  ஆண்களுடனான தேவையற்ற கடந்தகால அனுபவம் மூலம் உருவாகலாம் என்றாலும், அது அல்லாத வேறு எந்த குறிப்பிட்ட காரணத்திற்காகவும் இந்த பயம் ஒருவருக்கு தூண்டப்படலாம்.

Menophobia

பெயருக்கேற்ப இது மாதவிடாய் குறித்த பயம்.  இந்த பயம் உள்ள பெண்கள் மாதவிடாய் சுழற்சியின் போது பயந்து, ஒவ்வொரு முறையும் பீதியடைவது.

அதே சமயம் ​​​​இந்த பயம் கொண்ட ஆண்கள் மாதவிடாய் குறுதிப்போக்கு பற்றியோ அல்லது  மாதவிடாயில் இருக்கும் பெண்ணை பார்த்தும் பயப்படுகிறார்கள்.

Anuptaphobia

இந்த பயம் மக்களிடையே மிகவும் பொதுவாக காணப்படலாம். இதற்கு ஒரு முறையான பெயர் இருப்பதாக நிறைய மக்களுக்குத் தெரியாது.

Anuptaphobia என்பது எப்போதும் தனிமையில் இருப்பதற்கான பயம். கடந்த காலத்தில் கசந்த உறவுகளைக் கையாண்டதால், பல ஆண்களும் பெண்களும் தங்கள் வாழ்நாள் முழுவதும் தனிமையில் இருக்க போகிறோம் என்று நினைத்து அஞ்சுவதுதான் இது.

Heterophobia

இது எதிர் பாலினம் சார்ந்த பயம். அதாவது ஆண்களுக்கு பெண்களை பார்த்தாலோ அல்லது பெண்களுக்கு ஆண்களை பார்த்தாலோ வரும் பயம். ஆனால்  இதற்கும் பாலுறவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

Tocophobia

டோகோபோபியா என்பது கர்ப்பமாகி ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் பயம்.  இந்த போபியாவால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையை அனுபவிப்பதில் பயம் வருவதால் அவர்கள் கருத்தரிப்பது கடினம்.

Autogynephilia

ஆட்டோஜினெஃபிலியா என்பது டிரான்ஸ்வெஸ்டிசத்தின் ஒரு துணை வகையாகும், இது ஒரு பெண்ணாக தன்னை நினைத்து அல்லது காட்சிப்படுத்துவதன் மூலம் தூண்டப்படும் ஆண்களைக் குறிக்கிறது.

Oneirogmophobia

தூக்கத்தில் கனவிலோ அல்லது வேறு காரணத்தினாலோ ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறுநீர் ஈரம் ஆவது மிக சாதாரணமாக நடக்கும் செயல். அது சார்ந்து வரும் பயம்தான் இது என்றாள் வனக்குயில்.

இதை நாங்கள் மேப் வரைவது என்போம். எங்கள் கல்லூரி காலத்தில் யார் லுங்கியில் எந்த நாடு தெரிகிறது என்று அதிகாலையில் பார்த்து கிண்டல் செய்வோம். ஆனால் பயந்தது எல்லாம் இல்லை என்றான் ஷிவா.

அவ்வளவுதானா இந்த மேனியாக் மற்றும் போபியாக்கள் எல்லாம் என்று மெஸ்ஸி கேட்டாள்.

Contreltophobia னா பாலியல் சார்ந்து தவறான நடத்தைக்கு ஒருவர் தாம்  உள்ளாக்கப்படுவோமோ என்ற பயம்.

Nymphomania ஒரு பெண்ணுக்கு இருக்கும் அதீத காம உணர்வு.

Satyromania இது அதீத காம உணர்வு கொண்ட ஆண்.

Syphilomania உடலுறவினால் தனக்கு சிபிலிஸ் நோய் வந்துவிடுமோ என்ற பயம் கொண்டது.

Necromania னா இறந்த உடலுடன் பிணத்துடன் உறவு கொள்வது.

இப்போது இனி இதை மையமாக வைத்து எத்தனை கட்டுக்கதைகள் எழுதினாலும் அதை நாம் அறிவியலாக பார்க்க தெரிந்து கொண்டு விட்டால் பல நபர்கள் பேனாவை மூடி விடுவார்கள் என்றான் நிவோனி.

சொல்லி முடிக்கவும் சவரிமுத்து உள்ளே வரவும் சரியாக இருந்தது. கூடவே அந்த அழகான உயரமான பெண் இருந்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.