48. பேதை படுக்கும் இழவூழ்


சவரிமுத்து: என்ன கேட்டீங்க சார்?

நிவோனி: இல்லை. இன்டர்நெட்ல இருக்கும் ஆபாச சாட்டுக்கும் நீங்க இப்படி எழுதறதுக்கும் என்ன சம்பந்தம்? என்ன வித்தியாசம்?

அது கூடாது தவறுன்னு ஓப்பனா தெளிவா சமூகத்துக்கு எழுதினா இப்படி நீங்க சேருக்கு அடியில் ஒளிஞ்சு உக்கார்ந்து மஞ்சள் புக்கா எழுதி போட வேண்டாம் இல்லை?

சவரிமுத்து: வெளிநாட்டில் இப்படி எந்த புக்ஸ்ஸும் இல்லையா?

நிவோனி: நாம் வேற. நம் இந்திய தமிழ் பண்பாடு கலாச்சாரப்படி சில…

(சவரிமுத்து இடை மறிக்கிறார்)

சவரிமுத்து: அந்த பண்பாட்டு கலாச்சார மயிரெல்லாம் ஒரு கெடப்புல தூக்கி போடுங்க.

வீட்டு படியை தாண்டி அடுத்த தெருக்கு போக தைரியமும் வக்கும் இல்லாத பல ஆளுங்கதான் என்னை மாதிரியான ஆளுங்களை பாத்து இவனை வெட்டு குத்து கொல்லுன்னு இன்டர்நெட்டில் பேசிட்டும் எழுதிட்டும் இருப்பாங்க. இருப்பாளுங்க.

இவனுங்க வீட்டுக்குள்ளார பதுங்கி உக்காந்துட்டு சும்மா பெருமூச்சு விடற பயலுவ. எனக்கு அதைப்பத்தி எந்த

பு. னா. கவலையும் இல்லை.

என் நோக்கம் இதை படிக்கறவன் அவன் நாலு பேர்னா கூடியும் மொத்தத்தில் நாசமா போவனும். அவனும் ஒரு நாலுல இருந்து நானூறு பேருக்கு இதை பரப்பி விட்டு அவிங்களும் அழிஞ்சு போவனும். மொத்தத்தில் இந்த சமூகம் தன்னோட விரலால் தன் கண்ணை குத்திக்கணும்.

ஏன்னா தீவிரவாதத்தை செயல்படுத்த ரொம்ப மெனக்கிடனும். செக்ஸ் அப்படி இல்லை. போகிறபோக்கில் கூடவே இருந்து ரொம்ப ஈஸியா பண்ண முடியும்.

இப்ப எல்லாம் மக்கள் ஒன்னு ரெண்டு பிள்ளைகள் பெக்கிறாங்க. அதுக்கு மேலே வளர்க்க முடியாது. தெம்பு இல்லை. உடம்பிலும் மனசிலும்.

அந்த காலம் வேற. வருஷம் ஒரு குட்டி ரிலீஸ் ஆகும். சித்தப்பன் பெரியப்பன் மாமன் மச்சான் அத்திம்பேர் அத்தான்னு தோளில் தூக்கிப்போட்டு வளர்ப்பான்.

இப்ப இல்லை. அதை உடைச்சு சிதைத்து தள்ளிட்டோம். எப்போ சொந்தக்காரன் நம்ம வீட்டில் காலடி எடுத்து வச்சாலும் குட் டச் பேட் டச் மனசில் குழப்பும்.

அடுத்தது பிள்ளைக்கி பண்ணும் செலவு. கல்யாணம் பண்ணிப்பார் வீட்டை கட்டி பார் னு சொல்வான். இந்த ரெண்டுமே சமாளிக்க முடியும். ஆனால் எஜூகேஷன், மெடிஸின் ரெண்டும் அவ்ளோ சுலபமா முடியாது.

மாசத்துக்கு ஒரு வாத்தி போக்ஸோவில் உள்ள போறான். இதுல இன்னும் சிக்காத மெஜாரிட்டிகள் பத்தி நமக்கு தெரியாது. அதான் காமத்தை கையில் எடுக்கிறேன். உள்ளே இருந்தே இந்த சமூகத்தை  சூறையாடனும்.

நீங்க எவ்ளோ நாள் உங்க பிள்ளையை கண்காணிக்க முடியும்? இதை செய்டா நல்லா இருக்கும் னு எழுதி அல்லது பிட்டு படம் மூலமா தூண்டி விடுவோம். நீங்க அதையே, செய்யாதே தப்பு, குற்றம் னு சொல்லுவீங்க.

எங்களுக்கு அதுவும் வசதித்தான். ஏன்னா நாம ரெண்டு பேரும் ஒரே விஷயத்தை மட்டும் தேவையே இல்லாமே பிள்ளை மனசில் தீவிரமாக நாள்தோறும் திணிக்கறோம்.

பாலியல் வன்கொடுமை, பெண் பாதுகாப்பு, வன்புணர்வு அப்படி இப்படின்னு நாமே பேசிட்டே இருந்தால் கூட போதும். எதை சொல்லக்கூடாதோ அது சரியா போய் சேர்ந்துடும். இதுக்கு பக்கபலம் உங்க சினிமாவும், டீவீயும்தான்.  இதை உங்களால குற்றம்னு சொல்ல முடியுமா?

நிவோனி: யோசிக்கவே மாட்டேன். இது அநீதி. அவலட்சணமான பார்வை.

சவரிமுத்து: சரி. எனக்கு ஏன் இந்த வெறி வந்தது? யாரை பார்த்து வந்தது? நான் பிறக்கும்போது இல்லாத இந்த கோபத்தை எனக்குள் யார் திட்டமிட்டு உருவாக்கினாங்க?

நிவோனி: உங்களுக்கு மன அழுத்தம் இருக்கும். Sorry to say this mister… நீங்க ஒருவேளை சைக்கிக்காக கூட இருக்கும். இப்படி யோசிக்க யாரும் கற்று தர வேண்டியது இல்லை. ஜெலஸி.

சவரிமுத்து: no problem. You can openly discuss with me. நீங்க சொல்ற இந்த மாதிரி  பைத்தியத்துக்கு காரணம் உண்மையில் என்னவா இருக்கலாம்?

நிவோனி: வேறென்ன pervertionதான். இல்லை உங்க ஜீன்ஸ் கூட காரணமா…

சவரிமுத்து: இதை நீங்களே யூகிச்சுட்டு சொல்றீங்களா? இல்லை… படிச்சிட்டு சொல்றீங்களா?  இல்ல… நெட்ல எதுனா ஆர்டிக்கில், ஜர்னல்ஸ், இல்லை பொம்மை படங்கள் பார்த்துட்டு….

நிவோனி: authentic reading based sir…

சவரிமுத்து: சொன்னவங்க யார்னு கேட்டா நீங்க விளக்க முடியுமா?

நிவோனி: அறிவியல். உளவியல். இப்ப ஃபிராய்டு தன் கட்டுரைகள் மூலமாக சைக்கோ அனாலசிஸ்ல இந்த…

சவரிமுத்து: பாத்தீங்களா உடனே இப்ப நீங்களும் வெளிநாட்டு ஆட்களை பேச ஆரம்பிச்சிட்டீங்க. அதான் இந்த செக்ஸ்.

Peoples are still ridiculed, stigmatised, marginalised, pathologised, and criminalised on the basis of their sexual practices and preferences.

அப்படின்னு நீங்க படிச்சிங்களான்னு எனக்கு தெரியல. ஆனால் எப்பவும் நாம் இந்த செக்ஸ் பத்தியே பேசி சிந்திச்சு அதை கட்டமைத்து கட்டவிழ்த்து சிதைத்து பின் மீண்டும் அதையே உருவாக்கி…

நிவோனி: என்ன சொல்ல வரீங்க?

வனக்குயில்: அப்படியே பேசிப்பேசி  யோக்கிய சிகாமணி மாதிரி பாவ்லா காட்டிட்டே நாம நல்லா நடிக்கிறோம் னு அவர் சொல்றார் நிவோனி.

மெஸ்ஸி: என்ன நடிக்கிறோம்? ஒரு கட்டமைப்பு முக்கியம்தானே. நானும் ஷிவாவும் அமெரிக்காவில் பலமுறை பல கோணங்களில் உடலுறவு கொண்டோம். இந்திய பார்வையில் அது ஒழுங்கின்மை. சமூகம் ஏற்காதது.

ஆனால் அது நிகழாது போனால் காதல் மட்டும் போதும்னு சொன்னால் நானும் ஒரு ஆத்தோரமா உக்கார்ந்து ‘ராசாவே உன்னே நம்பி’ ன்னு பாடிட்டு ஒப்பாரி வெக்கலாம். அதுவே platonic love னு இந்த இந்திய சமூகம் கொண்டாடும்.

அதேசமயத்தில் அமெரிக்காவிலும் இன்றும் பலவிதமான கட்டுப்பாடுகள் உண்டு. உலகம் முழுக்கவும் இம்மாதிரி ஏதோ சில கட்டுப்பாடுகள் இப்பவும் உண்டு என்பதையும் தவிர்க்க முடியாது.

சவரிமுத்து: உண்மைதான். அம்மாதிரி கட்டுப்பாடுகளை நாம் விருப்பத்தோடு ஏற்கிறோமா என்பதுதான் சிக்கல்.

பண்பாட்டில் எப்படி இன்னிக்கு அரசியல் ஒரு ஒட்டுண்ணியா மாறிட்டு மக்களை சிதைத்து இருக்கோ அதுபோல் இந்த பழைய நவீன கலாச்சாரமும் இப்போ அரசியல் பின்னப்பட்ட ஒன்று.

Top 10 sex scandals னு கூகிள் கிட்டே கேளுங்க. உலகநாடுவாரியா வருஷம் எல்லாம் போட்டு சினிமா அரசியல் மதம் னு எந்த பாகுபாடும் இல்லாமல் ஜிலு ஜிலுன்னு நாள் முழுக்க படிக்கலாம்.

வரலாற்று சார்ந்த கலை சார்ந்த பல ஆளுமைகளுக்கு எப்படி இந்த சிதறல் வந்தது? ஏன் வந்தது?

விதி, கர்மா, காசு, திமிர், ஜாதி புத்தி, வளர்ப்புக்குற்றம் இப்படி எல்லாமும் நாம் சொல்லி முடிச்சிட்டு அதை ஒரு ஓரமா தள்ளி வச்சா Basic Instinct  னு ஒன்னு வெளியில் வரும். அதை பிடிங்க. அங்கே இருந்து இதை பேச ஆரம்பிக்கலாம்.

ஒழுக்கம் என்பது ஒரு குறியீடு. ஒரு வாழ்வியல் சின்னம். அர்த்தத்தை கட்டி எழுப்பும் அபத்தம். நாம் பயத்தை முன் வைத்து உருவாக்கிய சிறைவாசல்.

காமம் மட்டும்தான் துவக்கத்திலிருந்து அனைத்தையும் நிராகரித்து பின் இறுதியில் தன்னையும் நிராகரிக்கிறது. யாரும் யாருடனும் கட்டற்ற உடலுறவை விருப்பம் போல் மேற்கோள்ள வேண்டும் என்பதுதான் அது தரும் இறுதி செய்தி. LIBERTINE.

நிவோனி: அப்படி செய்தால்?

சவரிமுத்து: ஜாதி மதம் கடவுள் இவை எல்லாம் பார்க்கவே முடியாது. ஒரு பெண் என்பவள் தன் குடி பிறப்பு இன ஜாதி சடங்குகளை எப்போது முற்றிலும் தன்னிடமிருந்தும் தான் சார்ந்த குடும்பத்திலும் நிராகரிக்கிறாளோ அப்போது சமூகத்தில் இவைகளுக்கு எந்த இடமும், பொருளும் இருக்காது.

மெஸ்ஸி: பார்பேரியன் கல்ச்சர்…

சவரிமுத்து: ஆனால் பொருளியல் அதை வன்முறையாக்க விடாது. இங்கே இனி எப்பவும் பணம்தானே எல்லாம்…

நிவோனி: பணம் மட்டுமே போதுமா சார்?

சவரிமுத்து: அப்பறம் எதுக்கு வேலைக்கு போகணும்னு ஒரு அம்சம் இருக்கு. அதுதானே இப்போ எல்லாவிதமான corruption னுக்கும் காரணம்.

நிவோனி: கூலி பகிர்வு பத்தி மார்க்ஸ் தெளிவா சொல்லி இருக்கார். மதம் னு இல்லை அது அபின் னும் சொல்லிட்டார்.

சவரிமுத்து: அப்பறம் ஏன் குடும்பம்னு ஒரு அமைப்பை தாங்கி பிடிக்கணும்? அதையும் அவர் அப்போவே தகர்த்து அல்லது நிராகரித்து இருக்கணும் இல்ல?  ஒன்னு கூடுதலா சொல்றேன். மார்க்ஸ் ஜென்னி காதல் உலகம் அறிந்த ஒன்று.

ஆனால் அவர் வீட்டில் வேலை பார்த்த ஹெலன் டெமூத் கூடவும் அவருக்கு க்ரஷ், காதல் இருந்தது. ஷோபா சக்தி தன் கொரில்லா நாவலில் இதை பதிவு செய்து இருக்கார். பின்னாடி பெரும் விவாத பொருளாகவும் இது ஆச்சு.

மெஸ்ஸி: விதிவிலக்கு தவிர்த்து… நாம் இங்கு பேசலாமே?

சவரிமுத்து: இங்கே விதிவிலக்கு அப்படினா அது நம் சுயநலமான அல்லது நம் பாதுகாப்பு குறித்த ஒரு மறைமுக அச்சம்னு அர்த்தம்.

அப்படி விதிவிலக்கு போல் வரும் ஒருசில நல்ல சிற்சில மனிதர்களையும் அவங்க சித்தாந்தங்களை படிச்சு பார்த்துட்டு திக் னு இருந்தால் நாம அவங்களை சாமர்த்தியமா ஒதுக்கறோம். இல்லை, ஹீரோவா ஆக்குவோம். இல்லை அசடனா மாத்தி விடுவோம். இந்த குழப்பம் எல்லாம் எப்படி யாரால் வந்தது?

மெஸ்ஸி: அப்போ எல்லோரும் செக்ஸ் சாட் பண்ணலாம். ஒண்ணா செக்ஸ் படம் பார்க்கலாம். செக்ஸ் கதைகள் எல்லாம் குடும்பமா படிக்கலாம். அதை நாமே எல்லோருக்கும் பரப்பலாம். Incest எந்த தப்பும் இல்லை. Porn எப்பவும் நமது மரியாதைக்கு உரிய ஒன்று. அதானே சார் சொல்ல வரீங்க நீங்க?

சவரிமுத்து மெஸ்ஸியை பார்த்து உங்கள் கோபம் நியாயமானது. அதை நான் மதித்து வணங்குவேன். ஆனால் வாதமாக நான் ஏற்க மாட்டேன் என்று சொல்கிறார்.

இப்போது அனைவரும் எழுந்து சென்று மீண்டும் முன் அறைக்கு சென்று ஆசுவாசமாக அமர்ந்தனர். வனக்குயில் எல்லோருக்கும் சிறிய கோப்பையில் ஜின் திரவம் நிரப்பி அனைவருக்கும் தர பருகி துவங்கினார்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.