39. அடுமுரண் தேய்க்கும் அரம்


வனக்குயில் அவருடன் விடாமல் பல கதைகள் பேசிக்கொண்டே இருந்தாள்.

பொண்ணு எப்படிப்பா?

ரெண்டு பொண்ணுங்க இருக்குன்னு சொன்னாங்க. அதை பார்த்தேன் வனம்.

சரி.

ஒன்னு பாவம் விதவை.

அட பாவமே… சரி…

ஒன்னு புருஷன் விட்டுட்டு ஊரை விட்டு ஓடி போய்ட்டான். இவளும் ஒரு நாலு வயசு பொம்பளை பிள்ளைய கையில் வச்சுருக்கா.

அட கடவுளே… நீ என்ன பண்ணினே.

கை கொழந்தைகாரியை கட்டிக்கிட்டேன்.

ஷிவா இப்போது குறுக்கிட்டான்.

வெல்டன் சார்… பாராட்டுக்கள் என்றான்.

நன்றிங்க… நீங்க… யார்னு தெரியலை?

அதை நான் அப்பறம் சொல்றேன் என்ற வனக்குயில் இப்ப ரெண்டு பேரும் எங்கே? தாயும் பிள்ளையும் சேர்த்தே நீ கூட்டிட்டு வந்துட்டியா?

ஆமாம் வனக்குயில்.

பிள்ளைய இந்த வருஷம் படிக்க ஸ்கூலில் சேர்க்கணும் இல்ல?

கவர்மெண்ட் ஸ்கூலில் போதும்.

ஏங்க? நல்ல எஜூகேஷன் நாம்தான் கொடுக்கணும் இல்ல என்றான் ஷிவா.

பொட்டைதானே. அதுக்கு அது போதும்.

அப்போ எதுக்குங்க அந்த அம்மாவை நீங்க கட்டிக்கணும்? அம்மா பிள்ளைக்கி எல்லாம் பார்த்து செய்யணும் இல்ல…

எழுத்தாளர் தலை குனிந்து ஷிவாவின் கண்களை உற்று பார்த்து விட்டு மெல்ல சொன்னார். “விடோன்னா அது வெறும் தயிர் சாதம். ஒரே ஒரு பொட்டலம். இது தொட்டுக்க ஊறுகாயோட கிடைச்சது. அதான் இவளை கட்டிக்கிட்டேன். சார்க்கு… நாஞ் சொல்றது புரிதுங்களா”

பட்டென்று கழுத்தை நொடித்து திருப்பிய எழுத்தாளர் வனக்குயிலை பார்த்து கொண்டே  ‘இப்ப அது ரொம்ப சின்ன பிள்ளைதான், கழுத்து எலும்பு கூட இன்னும் முத்தலை. எளங்கறிதான். அதான் கொஞ்ச நாள் போகட்டும்னு இப்ப திங்கறதுக்கு சோத்தை போட்டுட்டு விட்டு வச்சிருக்கேன்’ என்றதும் மெஸ்ஸி ஷிவாவின் கரத்தை பிடிக்க அதில் ஒரு திடுக்கிட்ட நடுக்கம் ஊர்ந்தது.

ஷிவா வனக்குயிலை பார்க்க அவளோ பேச்சை மாற்றினாள்.

நிவோனி, இவர் எழுத்தாளர்ங்க.

எதில்?

இன்டர்நெட்லதான். செக்ஸ் கதைகளா எழுதுவேன் என்று சொன்னதோடு அவர் தனது பெயர் சவரிமுத்து என்றார்.

வந்தவர்களுக்கு கொஞ்சம் புரியறது மாறி விலாவாரியா எடுத்து சொல்லுயா. எல்லாம் நம்ப ஆளுங்கதானே.

அதாவதுங்க… இன்டர்நெட்ல நான் காம கதைகள் எழுதற ஆளுங்க. இந்த குடும்ப உறவுகள், ஜாதி மதம்னு எல்லாத்தையும் வச்சு எழுதுவேன். சொன்னால் காது கூசும்படி படிச்சா கண் கூசும்படி ரொம்ப வக்கிரமா, ஆபாசமாக எழுதுவேன்.

அப்பறம் காமிக்ஸ் ல எழுதுவேன். Hentai manga, Interracical comics… கேள்விப்பட்டது உண்டா? சின்ன சின்ன பிள்ளைங்க கூட pdfல டௌன்லோடு போட்டு அள்ளிட்டு போய் செமையா படிக்குங்க. அதை மத்த ஆளுங்களுக்கும் ஷேர் பண்ணுங்க.

உங்களுக்கு எப்படி ஆர்வமா அவங்க இதையெல்லாம் படிக்கறாங்க னு தெரியும்?

ஏங்க… இன்டர்நெட் ட்ராபிக் ல போட்டா மேப் போட்டு எந்த ஊரில் எவன் இதை எடுக்கிறான் படிக்கிறான் னு புள்ளி புள்ளியா போட்டு காட்டுமே. போய் பாருங்க.

நம்ம மக்கள் பொதுவா நெட்டுன்னா என்ன நினைக்கிறோம்னா அது ஏதோ தனி உலகம், நாம் அதுல என்னத்தை எப்படி செஞ்சாலும் அதை ஒண்ணும் யாராலும் கண்டுபிடிக்க முடியாதுன்னு…

ஒருதரம் உள்ளே போய்ட்டாகூடியும் அது நம்மளோட கோவணத்தோட கலரைக்கூட குறிச்சு வெச்சுக்கும். காவியா, பச்சையா, இல்ல கருப்பு செவப்பா ன்னு எல்லா கலர் கோவணம் அதோட நாத்தம் னு பிரிச்சு வெச்சுக்கும். அடுத்த தரம் நாம் இண்டெர்நெட்டை ஆன் பண்ணினா அமேசான்காரன் ஸார் ஸார் னு தலையை சொறிவான். பாத்தது இல்லயா நீங்க?

சவரி, உங்களை இதுக்கே அரெஸ்ட் பண்ண முடியும். தெரியுமா?

பண்ணுங்க. ரெண்டு கையில் விலங்கை போட்டு கூட்டிட்டு போங்க. நான் உள்ளே போனால் அது மறுநாளே நின்னுடுமா?

வனம்… சார் அப்பாவியா இருக்காரே. எப்படி உன் கூட பழக்கம் என்று கேட்ட சவரிமுத்து மெல்லிய குரலில் ‘சாரே நீங்க ரோட்டில் நடக்கும்போது லெஃப்ட் ரைட் லாம் பார்த்து பார்த்து பின்னாடி வண்டி வருதா முன்னாடி சைக்கிள் வருதான்னு கவனமா போவீங்கதானே சரியா?’

பின்னே டிராஃபிக் ரூல்ஸ் ஒன்னு இருக்கு இல்ல? அதை மீற முடியுமா?

நாங்க கூசாமே ஆள் மேலேயே விட்டு ஏத்திட்டு போவோம். போன மாசம் ஒரு நடிகை தண்ணியை போட்டு காரை விட்டு ரோட்ல தூங்கிட்டு இருந்த நாலு பேரை எலும்பை நொறுக்கி ரத்த சகதியாக்கினாள் னு பேப்பர்லே படிச்சி இருப்பீங்களே?

ஆமா…

அது வெறும் லிக்கர் அடிச்ச போதை னு நினைச்சீங்களா? இந்த சட்டமெல்லாம் உங்களுக்குத்தான் சாரே. எங்களுக்கு ஒரு கூந்தலும் இல்லை.

எப்போ எப்படி எதுக்கு என்னிக்கு எந்த ஜெயிலுக்கு போகணும்னு எங்களுக்கு தெரியும். போன மாதிரி வெளியில் வரவும் தெரியும். போன இடத்தில் வாழ்வாங்கு வாழ்ந்துட்டு ஜந்தோசமா வெளியில் வருவோம். அதான் நாங்க.

வனத்தொட ரூட்டு எதுன்னா விபச்சாரம். நான் மேட்டர்ல பொஸ்தகம் போடறேன். அவ்ளோதான். என்ன… அக்கா தம்பியோட, அப்பா தன் மாமியாரோட ன்னு கேவலமா எழுதுவேன்.

ஆனால், இதெல்லாம் இங்கே இல்லை சமூகத்தில் இல்ல இப்படியெல்லாம் இல்லவே இல்லைன்னு உங்களால அடிச்சி சொல்ல முடியுமா? அப்படி இப்படின்னு அங்கே இங்கே பரவலாக ஏதோ நாட்டுக்குள்ளே இருக்கு இல்ல…

அப்போ நான் எழுதுவேன். இந்த ஜாதி அந்த ஜாதியோட, இந்த மதத்துகாரன் பொண்டாட்டியை இப்படி பாக்கணும், அந்த மதத்துக்காரன் அக்கா தங்கையை அப்படி கவுக்கணும் னு எழுதுவேன்.

ஷிவா, அமைதியாக இருந்தான்.

சாரே, நீங்க வேணும்னா கிளம்பி ஏதாச்சும் யூனிவர்சிட்டி போங்க. அங்கே எவனாச்சும் வெட்டியா சும்மா இருக்கும் அரசியல் பின்புலம் இருக்கும் ஒரு மக்கு வாத்திப்பயலை பிடிங்க.

“வாய்யா யோவ், நீ சும்மாகாச்சும் சம்பளம் வாங்கிட்டுதானே இருக்கே, இல்லாங்காட்டி எதுனா இடுப்புல டயர் போட்ட ஆண்ட்டியான பொம்பளை வாத்தி ஒருத்தி தொக்கா கிடைச்சிட்டா கான்பெறன்ஸு போறேன்னு ஊட்டிக்கு கூட்டிட்டு  போய்ட்டு உன் நடு விரலை முழுசா வாய்லே சப்பி சொத சொதன்னு எச்சலாக்கிட்டு பழைய கோணலான வடையில் ஆக்கர் போடற பயதானே நீ…

இப்ப வா ஒரு ஜர்னல் போடலாம் னு என் கதைகளை காட்டுங்க. அந்த முட்டாப்பய அதையும் பிரிச்சு மேஞ்சு எழுதுவான். ஏன் தெரியுமா அவனோட increment பிச்சைக்கு”. சுயநலம்தான். நீங்க இதுவும் இல்லைன்னு சொன்னா நிம்மி கேஸ் என்னாச்சுன்னு கேப்பேன்? பதில் இருக்கா உங்ககிட்ட… இருக்காது.

ஏங்க இப்படி? குமுறி அடிக்கறீங்க?

பணம்தான்.

இப்படி எழுதும் உங்களுக்கு யார் பணம் கொடுப்பாங்க?

எனக்கு கட்சிக்காரவங்கதான்.

எந்த கட்சி?

அதுல மட்டும் எனக்கு பேதமே இல்ல. இந்த ஜாதிய வச்சு எழுதுனு ஆளுங்கட்சி கொடுத்தா அந்த ஜாதிக்கு எழுதுன்னு எதிர்கட்சி ஆள் கொடுப்பான்.

முசிறி சிவாவை இப்ப பாத்தீங்களா… நான் பார்த்தேன். ‘அண்ணேய்’ னு வந்து அரவணைச்சு கட்டி பிடிச்சுக்கிட்டான்.

ஆனால் அந்த மனுஷனுக்கு ஆசையும் ஆத்திரமும் பொத்துக்கிட்டு வந்தா போதும்,  விளக்கெண்ணெயை விட்டு நக்குடான்னு சொன்னாலும் அதையும் ஹிந்திப்பாட்டு பாடிக்கிட்டே தட்டாம செய்வார்னு தாதுபுஷ்பா என்கிட்டேயே சொல்லி விழுந்து விழுந்து சிரிப்பா. அரசியல்னா இப்படித்தான் இருக்கும்.

சாரே, நான் எழுதினால் சகட்டுமேனிக்கு எல்லோரையும் வச்சு எழுதுவேன். ஏன்? எல்லாம் பணம்தான். பாருங்க சாரே, நாம மனுஷனுக்கு எழுதறது இல்ல. இதை ஒரு நாய் படிச்சா உடனே அதுக்கு வெறி பிடிக்கணும்னுதான் எழுதறோம்.

அந்த நாய் காம வெறியேறி, ஜாதி மத வெறியேறி கூட இருக்கும் இன்னொரு நாயை பலமா கடிக்கணும். அந்த நாயும் இந்த நாயை  குதறணும்.

அப்பறம் தானாவே இந்த ரெண்டு நாய்ங்களும் ஒண்ணா சேர்ந்து இன்டர்நெட் முழுக்கவும் நாக்கை தொங்க போட்டு ராவும் பகலும் யாரை காய்ச்சலாம் னு மேயும். ஜாதி மதம் னு யூட்யூப்ல ஆரம்பிச்சு எல்லா சோஷியல் மீடியாவிலும் இதுங்க பாயும்.

ஜோம்பீஸ்… “Zombies eat brains, you are safe.” னு யாரோ சொன்னாங்க. நல்லா சொல்லட்டும்.

இப்படி அதுங்களுக்குள்ளே வெறியேறி திட்டிட்டு எழுதுவதை கமெண்ட்ஸ்ல படிக்கும் ஒரு அப்பாவி பொதுஜனம் கூட கோபமான ஆளா மாறிடுவான். அப்படி மாறணுங்கறதுதானே எங்களோட நோக்கம், லட்சியம், தேவை எல்லாம்

ஆரம்பத்தில் அவன் அதை வெளியே காட்டிக்காமே இருந்தாலும் போகப்போக அந்த கூட்டத்தில் சேர்ந்துகொண்டு என்ன செய்யறோம்னு கூட தெரியாமல்  துலுக்கனை ஒழி னு அவன் கத்த சங்கியை ஒழினு இவன் கத்த பாவாடையை காலி பண்ணுன்னு ஒருத்தன் கத்த….

அப்போ எங்க ஆளுங்க அங்கேயே யோக்கிய சிகாமணி மாதிரி ஒரு டேபிள் சேர் போட்டு தேசியம் ஜனநாயகம் சமூகநீதி கருவாடு’னு கூவ… இப்படி மாறி மாறி கத்தினா எனக்கு, எங்களுக்கு, சில குரூப்ஸ்க்கு துட்டும் பணமும் மழையா கொட்டும்.

சரி. குடும்ப உறவுகள் வெச்சு எல்லாம் ஏங்க இவ்ளோ அசிங்கமா இப்படி?

அது சும்மா. லாகிரி. ஜில்ப்பு காட்ட… காலேஜ் பொண்ணு, வேலை பார்க்கும் இடம், பிக்னிக், ஆபிஸ், சினிமா தியேட்டர், ஐ டி பார்க், ஆஸ்பத்திரி ன்னு எல்லாம் எழுதி போரடிச்சு போச்சு. அதான் இப்படி.  பாக்கப்போனால் அதுல கூட ஒரு உளவியல் மறைமுகமாக இருக்கே என்றார் சவரிமுத்த

என்னங்க அது? உளவியல்…

அம்மா அக்கா தங்கை அத்தை சித்தி பெரியம்மா பாட்டியை கூட  (கிழவியை விடக்கூடாதுங்க அதான் Granny…) சொந்தபந்தமா இருக்கிற வீட்டில், ஒரு பையனோ இல்ல பொண்ணோ இதை எல்லாம் ஒளிஞ்சு ஒளிஞ்சு படிச்சா மனரீதியான பல பாதிப்புகள் டீன் ஏஜஸ்ல வரும். அடுத்தது என்னன்னு யோசிக்க முடியாம திணறுவாங்க. தப்பு பண்றோம்ன்னு மட்டும்தான் தெரியும். ஆனால் பழகிட்டா அதை செய்ய செய்ய ஆசை கூடிட்டே போகும். படிப்பாங்க.

இது புரியாத அவங்க குடும்ப உறவுகள் பசங்களை வாட்டி வதைக்கும்போது இளம் வயதினருக்கு உள்ளே ரசாயனம் மாறும். தப்பெல்லாம் சரியா தெரியும். எல்லா சங்கதியும் செஞ்சு பார்க்கணும். எல்லா விதிகளையும் மீறணும்னு மனசு கிடந்து அலைபாயும். அப்போ அவங்க சுலபமா எங்க கிட்டே வருவாங்க. நாங்க சொல்லி கொடுக்க வேண்டாமா? தெள்ள தெளிவா இதை சொல்லி தருவோம்.

அவங்களோட  அந்த ரத்த உறவுகள் குனிவது நிமிர்வது போன்ற செய்கைகள், அப்பறம் வீட்டுக்குள் காயப்போடும் உள்ளாடை சமாச்சாரம் இப்படி எல்லாம் அவங்க மனசில் படமா உலவிக்கிட்டே இருக்கும். பின்னாடி அவங்க ரொம்ப சீக்கிரம் நாங்க இப்படி விரிச்ச வலைக்குள் வந்துடுவாங்க அதுக்குத்தான்.

இப்படியெல்லாம்…

பொழைக்கணுமானுதானே கேக்க வரீங்க? ஆமா… இப்படியும் ஒரு பிழைப்பு இருக்கட்டுமே. அப்போதான் ஆராய்ச்சி நடக்கும். இன்ஸ்டிடியூஷன் டெவலப் ஆகும். ரிசர்ச்க்கு சோர்ஸ் கிடைக்கும். சயன்ஸுக்கு நாம் ஒரு வேலை கொடுத்த மாதிரி கூட இருக்கட்டும். என்ன நாஞ் சொல்றது என்று நக்கலாய் சிரிக்க வனக்குயில் அமைதியாக மட்டும் பார்த்து கொண்டிருந்தாள்.

அப்பறம் வனம், இப்ப நான் லோக்கல் ஸ்டேஷனுக்கு போய்ட்டு வந்தேன். கோயம்பேடு கர்ணா லாட்ஜ் ல நம்ம பொண்ணு ஒன்னு மாட்டிகிச்சு. அது பேசி சரிகட்டி கூட்டிட்டு வந்தேன். இப்ப பொண்ணு அங்கேதான் இருக்கு முசிறி ஒரு போன் போட்டு சொன்னால் போதும். இல்லை… கொஞ்சம் அந்த ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் கிட்டே நீதான் பேசணும். அதான் இப்ப இங்கே வந்தேன் என்றார்.

சொல்லலாம் சவரி. பார்ட்டி இப்ப கையில் இருக்கா… வருவாளா இங்கே?

இருக்கு வனம். ஸ்டேஷன்லயே இருக்க சொல்லி இங்கே வந்தேன். இன்ஸ் இல்ல எஸ் ஐ எவன் வந்தாலும் நீ அவன்கூட இல்ல ரெண்டு பேர் கூடவும் ஒண்ணா மேட்டர் பண்ணிட்டு தாஜா பண்ணுடி சொல்லிட்டுத்தான் வந்தேன்.

இங்கே விட்டுட்டு போயேன். இன்னிக்கு ரேவ் பார்ட்டி நடக்கப்போகுது. குள்ளிக்கு உடம்பு முடியலை ன்னு சொன்னாள்.

எல்லாம் உமது விருப்பம் என்றபடி எழுந்து தனது கைகளை உயர குவித்து அறையில் இருந்தவர்களுக்கு வணக்கம் போட்டுவிட்டு வெளியேறினார்.

மெஸ்ஸி கசப்பாய் புன்னகைத்தாள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.