30. பைந்தொடிப் பேதை நுதல்


ரோட்ரிகஸ் ரோட்ரிகஸ் என்று கேத்ரீன் சொன்னாலும் அதை அவள் பெற்றோரே நம்பவும் ஏற்கவும் மறுத்தனர். அவன் ஒரு குழந்தை என்று கேத்ரீனின் அப்பா ஜான் சொல்லவும் மிலனி குழம்பி விட்டாள்.

ஏனெனில் ரோட்ரிகஸ் வயதானது கேத்ரீன் வயதை விடவும் மிகவும் குறைவு என்பதும் கேத்ரீனோடு ஒப்பிட்டால்  வெறும் பாலகன் என்பதும் தெரிய வந்தது.

அப்படி எனில் கேத்ரீனோடு இருந்ததும் பழகியதும் யார் என்பது யாருக்குமே இறுதிவரைக்கும் இன்று வரையிலும் தெரியாமல் போனதுதான் சிக்கல் என்றாள் இளவரசி.

நாட்கள் செல்லச்செல்ல சூழ்நிலையை புரிந்து கொண்டு மிலனி கேத்ரீனிடமிருந்து விலகினாள்.

கேத்ரீன் தனிமை கொண்டாள்.

அவளுக்கு ரோட்ரிகஸ்ஸை மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றியது. அவன் அணைப்பு வேண்டும் என்று தோன்றியது.

அவன் அன்று தொட்ட இடத்தை கேத்ரீன் மீண்டும் தீண்டிய கேத்ரீன் எல்லையற்ற உவகை கொண்டு மகிழ்ந்தாள். தனது கிளிட்டோரிஸ்தான் அவன் வசிப்பிடம் என்று நம்பினாள்.

ரோட்ரிகஸ் நான் அன்று உன்னை மனதார வெறுத்தேன். இன்று உன்னை ஆராதிக்கிறேன் என்று சொல்லி கொள்ள அவளுக்குள் ஒரு காதல் முகிழ்த்தது.

எல்லா நேரமும் கேத்ரீன் ரோட்ரிகஸ் வருகை குறித்து நினைத்து கொண்டே இருக்க அவனை அவள் மனப்பூர்வமாக உணரத்துவங்கினாள். காதலித்தாள்.

அவள் குளிக்கும்போது, சுய இன்பம் காணும்போது, தெருவில் உயரமான மனிதனை பார்க்கும்போது கேத்ரீனுக்கு ரோட்ரிகஸ் கேத்ரீன் அருகே நிற்பது போல் தோன்றும்.

பின் ரோட்ரிகஸ் அவளோடு இருக்கவும் வாழவும் துவங்கினான். அவர்கள் தம்பதி ஆனார்கள். குழந்தைகள் பிறந்தன.


இது ஸ்டாக்ஹொம் சிண்ட்ரோம் போல் அல்லவா இருக்கிறது? என்றாள் மெஸ்ஸி.

Biastophilia இல்லாட்டி  Demisexuality என்று கூட சொல்லலாம். ஆனால் கேத்ரீனுக்கும் அவள் பெற்றோருக்குமிடையில் தீவிரமாக இடைவெளிகள் தோன்றின. அவர்களுக்கு மகள் மீதுதான் சந்தேகம் வந்தது.

அப்பறம் என்ன ஆச்சு ஷிவா?

இளவரசி என்ன சொன்னாளென்றால்…

ஒருநாள் இரவு அவளுக்கு ரோட்ரிகஸ் உன் காதலன் அல்ல. அவன் யாரோ ஒரு ரேபிஸ்ட் என்று யாரோ சொன்னார்களாம். அது முதல் நான் அவனை அந்த கயவனை பழி வாங்குவேன் என்றாளாம்.

பின் படுத்த படுக்கையில் வீழ்ந்தவள் மீளவே இல்லை. ஒரு அதிகாலையில் கேத்ரீன் பாத்ரூமில் தற்கொலை செய்து கொண்டாள். ஆனால் அது இயல்பான ஒரு மரணம் என்றும் சொல்கிறார்கள்.

நிவோனி, Anneliese Michel என்னும் ஒரு ஜெர்மானிய பெண்ணை பற்றி நீ கேள்விப்பட்டது உண்டா?

எக்ஸார்சிஸம் என்று பேசப்பட்ட அந்த வழக்கை இன்றும் ஆராய்ந்து கொண்டு இருக்கிறார்கள். என்ன ஆனது அனிலீஸ்க்கு என்று இன்றும் விவாதித்து தேடுகிறார்கள்.

தன் 23 வயதில் உருக்குலைந்து இறந்து போன அந்த ரோஜாவுக்கு கண்ணீர் சிந்தாத மக்களே இல்லை. அவள் வாழ்க்கையை பற்றி  ‘The Exorcism of Emily Rose’ என்ற படமும் வெளி வந்தது. அப்படித்தான் இந்த கேத்ரீனும் என்றாள்.

பார்க்க போனால் இவை எல்லாம் ஒரு புதிர் போல் மட்டுமே இருக்கிறது என்று இளவரசி சொல்லி முடித்தாள் என சொல்லி முடித்தான் ஷிவா.

ஒரு பெண்ணால் நம்பிக்கை இழந்து துயர் கொண்ட ஆண் ஒருவன் ஏதோ சில மாற்றங்களினால் திடீரென ஒருநாள் ஒட்டுமொத்த பெண்களையும் ஒரே குடைக்குள் வைத்து பார்க்கும்போது அவன் மனம் நொறுங்கி விடும்.

இதே நிலைதான் ஒரு பெண்ணுக்கும் கூட உருவாகும்.

ஒரே ஒரு சிக்கலை உடைத்து பிரித்து பல ஆயிரம் சிக்கல்களாக சிதைத்து மாற்றிக்கொள்ளும் மனம் ஒரு நபரை தன் போக்கில் ஏவும் போது அதை நாம் கண்டறிந்து உரியது செய்யாமல் போனால் நிகழ கூடாததும் வாழ்வில் நிகழ துவங்கும்.

உதாரணம்?

சீரியல் கில்லர்ஸ்…  இப்போது அவர்கள் ஹீரோக்கள் போல் வடிவமைக்கப்பட்டு வருகிறார்கள். இதை நாம் உன்னிப்பாக பார்த்தால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும்.

ஷிவா சொன்னதை எல்லாம் கேட்டு மெஸ்ஸி மிக அமைதியாக இருந்தாள். அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.

மிகவும் சங்கடமானதோர் மனநிலைக்கு சென்று விட்டாள் என்பதை புரிந்து கொண்ட ஷிவா தானும் சற்று நேரம் அவளுடன் அமைதியாக இருந்தான்.

ஒரு பெண் எத்தனை மெல்லிய இதயம் கொண்டவள். ஆனால் ஏன் இப்படி வதை செய்யப்படுகிறாள் என்று கேட்டாள். நான் நேற்று ஒரு படம் பார்த்தேன் ஷிவா, A Serbian film னு பேர்.

கூகிளில் top 10 banned movies, top 10 banned books னு போட்டா எல்லாமே வருது.

அந்த படத்தை பார்க்க கூடாது. ஆனா நான் அந்தப்படம் பார்த்தேன்.

ஒருபுறம் அதில் இருக்கும் ஆபாசம், அசிங்கம், அநாகரீகம் எல்லாமே ஏத்துக்க முடியாதுன்னு சொன்னாலும் அந்த படைப்பின் பின்னே தரப்படும் சமூக, அரசியல் சார்ந்த விளக்கம்தான் என்னை ரொம்ப யோசிக்க வைக்குது என்றாள்.

பின் மெஸ்ஸி I Spit on Your Grave படத்தின் இரண்டாவது மூன்றாவது பாகத்தை பார்க்க ஆரம்பித்தாள்.

மெஸ்ஸி, உனக்கு வனகுயிலுடன் பேச வேண்டுமா என்று கேட்டான் ஷிவா.

முடியுமா?

வேண்டுமா?

ஷிவா, வாழைப்பழம் வேண்டாம் என்று குரங்குக்குட்டி சொல்லுமா?

அவர்கள் வனக்குயிலை சந்திக்க முடிவு செய்து ஒருநாளை இந்தியா செல்வதற்கு குறித்தார்கள்.

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.