நட்பென்னும் தீவினிலே


ப்ரிய தோழிக்கு ஒன்று.

பாறைச் சூட்டில்
விழுந்த நீர்துளிகளாய்
நம் தத்துவங்கள்.
திரைப்படம் தவிர
மற்றனைத்தும் எதிர் நீ…

பொருந்திய மரையில்
பொருந்தா வளையமாய்
கருதுகோளில் நழுவி
எதிரெதிர் பாதையில்
விலகும் நம் நெஞ்சில்
நட்போ நிலமென நீளும்.

சாய்ந்துகொண்ட தோள்…
எத்தனைமுறை என்
கண்ணீர் துடைத்தவள் நீ
நாம் வேறுதான்…

தமிழ் நான், நீ மராட்டியம்
பேசவோ ஆங்கிலம்.
பார்ப்போமா தெரியாது.
உணர்கிறேன் நான்…

நள்ளிரவு நேரத்தில்
அர்த்தமற்ற புன்னகையில்
நீ தொழுத இறைவனை
சிந்தும் நொடியளவு
கனவில் காண்கையில்…

எங்கும் வெளியேறாத
உன் கண்ணீரை
கொட்டும் பொழுதெல்லாம்
என்னிடம் கொட்டு.

ரோஜாக்கள்
பூத்துக் குலுங்குகின்றன.
உன் பிரார்த்தனைக்கு.

5 thoughts on “நட்பென்னும் தீவினிலே”

  1. தோள் கொடுத்து கண்ணீர் துடைக்கும் கரங்கள் இருப்பின் கண்ணீரும் வரமே……
    தோழியின் தொலைவு உடலளவில் தான்…
    மனதளவில் அருகிலே……

    Liked by 1 person

      1. எனக்கு நம்பிக்கை இல்லை எனவே அவநம்பிக்கைகளும் வர வாய்ப்பு இல்லை. துள்ளி குதித்து செல்லும் நாட்களை தரிசிக்க முடிகிறது. எனவே நலம்.

        Like

Leave a comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.