பறவைகளின் கானம்
கேட்கும் செவிக்குள்
சிந்தும் பிரபஞ்சம்.
Tag Archives: ஹைக்கூ
ஹைக்கூ
கொட்டிருளில் நிலவு
செடியிலையில் பால் ஒளி
கதறும் கன்றுக்குட்டி.
ஹைக்கூ
குளித்த பின்னும்
அகலவில்லை வெப்பம்
உன் சோப்பில்.
ஹைக்கூ
கரையில் வருடும்
காற்றின் கைகள்
குளத்தில் சிற்றலை.
ஹைக்கூ
கல்லும் முள்ளும்
காலுக்கு மெத்தை
நதிக்குள் நிலா.