Tag Archives: படிமம்

பயணங்களில் ஒரு பயணம்

தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.
இரவின் துளை வழியே
பகலின் பயணம்.
பகலின் துளை வழியே
ஒளியின் பயணம்.
ஒளியின் துளை வழியே
ஒலியின் பயணம்.

ஒலியின் துளை வழியே
இசையின் பயணம்.
இசையின் துளை வழியே
கனவின் பயணம்.
கனவின் துளை வழியே
கண்ணீரின் பயணம்.

கண்ணீரின் துளை வழியே
காட்சிகளின் பயணம்.
காட்சியின் துளை வழியே
வாழ்க்கையின் பயணம்.

வாழ்வின் துளை வழியே
மரணத்தின் பயணம்.
மரணத்தின் துளை வழியே
தனிமையின் பயணம்.
தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.

அறையில் ஒரு பூனை

நிசப்தத்தில் திரியும்
அந்தப்பூனையின் நிழல்
யாரும் அறியாப்பொழுதில்
அறையிலிருந்து
தனித்து வெளியேறியது.

என் மனக்கண்களை
திருடிச்சென்ற அப்பூனை
சுவரற்ற வெளியில்
ததும்பும்  நிழல் மீது
விருப்பமற்ற நேரங்களிலும்
அயர் உறக்கம் கொள்கிறது.

அறை இருளில்
தேடிக்கொண்டிருந்தேன்…

மனதில்
எங்கெங்கோ விழுந்திருந்த
அப்பூனையின் நிழல்களை.

ஆயினும், அப்பூனை
வருவதும் போவதுமான
கள்ளப்பயணங்களில்
எப்போதும் கவனமாக இருக்கிறது.
உதிரும் அதன் நிழல்களை
அவ்வப்போது
என் மனதில் கொட்டிச்செல்ல…

பழைய நண்பனின் மரணம்

இன்று அவன் என்
நினைவுக்கு வந்தான்.

அவனும் அவனோடு நானும்
இனி எப்பொழுதும்
வெறுமையான சிற்சில
நினைவுகள் மட்டுமே எனக்கு.

அவனை மரணமென்பது
ஈர்த்து கொண்டபின்தான்
எதுவும்
எப்போதும் எங்கும்
சில நினைவுகள் மட்டுமே
என்பது புரிந்தது.

காற்று தன் முகவரியை
தொலைத்து இன்னும்
தேடிக்கொண்டே இருக்கிறது.

நதி இன்னும் தன்
வீட்டை கண்டறியவில்லை.

தலை தொங்கிய ஆகாயமோ நிமிரவேயில்லை.

சப்தத்தில் ஒடுங்கிய
ஓசைக்குள் இருக்கிறது நினைவு.

அவன்…
இப்போதும் அலைகிறான்
என் நினைவிலிருந்து
தெருக்களை கடந்து
சாலைகள் தாண்டி
கடற்கரையில் கால் நனைய…

திக்குமுக்காடும் மரணம்
தத்தளித்து யோசிக்கிறது…
எப்படி கொல்வது ஒருவரை என.

நீல பட்டன் இருக்கும் அலமாரியில்

நீல பட்டன்கள் இருக்கும்
அலமாரியில்
இருக்குமென்றால்…
சற்று தேடி கண்டடைவேன்
அந்த புத்தகத்தை.

கிடைக்குமென்றாலும்
நிச்சயமாய் சொல்லவியலாது…
அதன் ஆவியும்
இன்னும் அதிலிருக்குமென.

ஒரு புத்தகத்தை மேயும்போது
தகிக்காது அதுவும்
மேய்கிறது மனதுக்குள்.

புத்தகத்தை தொட சிலிர்த்தால்
அதன் ஆவியும் சிலிர்ப்பதை
உணர்ந்தது முதல்
யாரோவாய் மாறுகிறோம்.

உலகங்கள் உள்ளிழுகின்றன.
இந்த புத்தகம்தான் தேடியது
இங்கேதான் இருக்கிறது.

அதன் குறிப்புகளில் என்
கால்படாத நகரமில்லை.
போடாத கூச்சல் இல்லை.
என் திமிரின் ஆனந்தத்தை
அறிந்த இடம் இதிலுண்டு.

வாழும் வசித்த இடத்தில்
மரித்த பின்னர்தான் வாழவே
துவங்குகிறோம்…

இதுதான் இறுதியில்
வாசிப்பின் சாத்தியங்கள்.
எனில்…
தேடியதுண்டா உன் ஆவியை?

வானில் விழுந்த கோடுகள் 🅰️

தாரிணி வேண்டுமென்றுதான் தனது காலை எடுத்து கலியமூர்த்தியின் கால் மீது போட்டாள். மூர்த்தி லாவகமாக அதை விடுவித்து போர்வையை உடல் முழுக்க சுற்றிக்கொண்டு புரண்டு தூங்குவது போல் படுத்துக்கொண்டான்.

              🌺💮🏵️💮🏵️💮🏵️🌺

இருபத்திரண்டு வயதில் தாரிணிக்கு சீரும் சிறப்புமாய் ஊர் பார்க்க போற்ற மூர்த்தியோடு மணமாயிற்று.

அன்றைக்கு அவனுக்கு நல்ல சம்பளம். இன்னும் நிறைய சம்பளம் வரும் என்று அவன் நினைத்த போது எல்லோரும் அப்படித்தான் அன்று நினைத்தனர்.

ஆனால் அப்படி நடக்கவில்லை.

மூர்த்தி நான்கு இடங்களுக்கு வேலையை மாற்றிக்கொண்டு போனாலும் சம்பளம் என்பது கூடவில்லை.

பிறந்த ஒரே பெண் பத்மாவும் தன் தாத்தா வீட்டில் இருந்தபடியே பொறியியல் முதல் வருஷம் படிக்கிறாள். கம்ப்யூட்டர் சயன்ஸ்.

தாரிணிக்கு முப்பத்தி எட்டு வயதில் மனதில் இளமை துளிர்த்து அரும்பியது.

இப்போது மூர்த்தி காதோரத்தில் சிவப்பு பென்சிலை சொறுகிக்கொண்டு பிஸ்கெட் பாக்கெட்டுகளில் நுணுக்கி போட்டிருக்கும் உள்ளூர் வரிகள் தனி என்பது எத்தனை இருக்கும் என்று ஆராய்ந்து வருகிறான்.

தாரிணி குளிக்கும் போது நீண்ட நேரம் உடம்பை தேய்த்து கொண்டிருக்க விரும்பினாள். அவள் உடற்சூடை ஒரு பறவை சிறகசைத்து ஊதி ஊதி பெருக்கியது. சிவந்த ஸ்தனங்கள் கொஞ்சம் சதை பூத்து மேடிட்டு இருந்தன. ஆனால் அதன் அழகு அப்படியே இருந்தது.

சின்னதாய் ஃப்லௌஸ் தைத்து தரும்படி தனத்திடம் சொல்லி இருந்தாள். நாற்பது சதவீதம் வெளியில் தெரியும்படி அது இருக்க வேண்டும் என்று தாரிணி நினைத்து கொண்டாள்.

முப்பத்தியெட்டு இன்ச்சில் இருக்கும் அவளுக்கு அந்த ரவிக்கை கச்சிதமாக இருந்தது.

பார்க்கும்போது மனதை அடிமையாக்கும் அளவு அது சற்று உயரே கையை உயர்த்தினாலும்  இரண்டும் சில சதவிகிதம் பிதுங்கி வெளியில் வந்தது.

           🍀🌲🌳☘️🌱🌳

உனக்கெல்லாம் கல்யாணம் ஆனதே பெரிய விஷயம் என்று மூர்த்தியின் நண்பர்கள் அவன் காதுபட பேசும்போது கோபமும் அவமானமும் வந்தது.

மூர்த்திக்கும் பெரிய பங்களா நாலு வொப்பாட்டிகள் காக்டைல் பார்ட்டி சிங்கப்பூர் டூர் ஆசைகள் என்று அளவற்று விரிந்திருந்த போதுதான் தாரிணி மனைவியானாள். அவள் மச்சங்களை அவன் கண்டறியும் முன்னரே பத்மா பிறந்து விட்டாள்.

மூர்த்திக்கு ஏதோ ஒரு கல்லூரி வாயிலாக தமிழ்நாடு அரசு கொடுத்த பி.காம் பட்டம் ஆரம்பத்தில் ஜொலிக்க வைத்தாலும் பின் வந்த நாட்களில் காலை உணவு என்பது வெறும் காப்பியோடு நின்று போனது.

இப்போது டாலி சாஃப்ட்வெர் வைத்து அக்கௌண்ட்ஸில் சின்ன பையன்கள் மிரட்டும்போது மூர்த்தி சொன்னான்… “அந்தக்காலத்தில் நாங்க எல்லாம்…”

தாரிணி மூர்த்தி ஆபிஸ் போனதும் கொஞ்ச நாள் ஹிந்தி டியூஷன் சொல்லி கொடுத்தாள். கொஞ்சம் காசு வந்தது என்றாலும் கூட சன்ரைஸ் காப்பி பொடியெல்லாம் வாங்க முடியவில்லை.

அவளுக்கு பத்மா வயதுக்கு வந்த பின் இனி தான் எப்படி சந்தோசமாய் இருக்க வேண்டும் மனதை எப்படி உற்சாகமாக வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் யோசித்தாள்.

காசு பணமின்றி கிடைக்கும் ஒரு மகிழ்ச்சி உடம்புதான் என்று தெரிந்து கொண்டாள். அப்போதும் அவளுக்கு இடுப்பில் சதை அவ்வளவு மோசமாக போடவில்லை.

எதிர்வீட்டு பையன்கள் அவளை பார்ப்பது குறித்து அறிந்திருந்தாள். அவர்கள் இடுப்பை பார்க்கும்போது அதை மறைத்து கொண்டாள். தன் மாரை பார்க்கிறார்கள் என்று தெரிந்தபோது இன்னும் நிமிர்ந்து நடந்தாள். தனக்கு தானே புன்னகைத்தாள். அகம் மகிழ்ந்தது.

ஒருநாள் அவள் கனவில் ஒரு எதிர்வீட்டு பையன் வந்தான். அதை தாரிணி யாரிடமும் சொல்லவில்லை.  பாத்ரூமில் குளிக்கும் போது நினைத்து சிரித்தாள். அவள் முலைக்காம்புகள் சற்று இறுகி நிமிர்வதாக உணர்ந்தாள்.

உடலெங்கும் ஜில்லென்று தண்ணீரை விட்டு இடுப்பில் ஸோப்பை வைக்கும் போது காதோர பென்சில் மூர்த்தி அவளை இரைந்து கூப்பிடும் சத்தம் கேட்டது.

ஏண்டி… இப்படி அரிசியை சிந்தி இருக்கே? சனியனே. கிலோ அருவத்திரெண்டு ருவாய். ஒரு பில் கூட கிடையாது. ஓட்டை திராசில் பல்லை காட்டிட்டு குறைச்சு நிறுத்து போடுவான். உனக்கு அதை ஒழுங்கை ஒரு இடத்தில் பத்திரமா வைக்க தெரியுதா? ஜடம். சனியன்.

வேலை மெனக்கிட்டு பாத்ரூம் கதவருகில் நின்று ஏக மனதோடு கத்திவிட்டு  பேண்ட்டை போட்டு ஜிப்பிழுத்து நின்னு குடிச்சான் கடையில் ஒரு காபியை குடித்து விட்டு போனான். அவனுக்கு பணிகள் ஒன்பதரை மணிக்கு ஆரம்பிக்கும். மற்ற மனிதர்களுக்கு பத்தரை மணிக்கு.

தாரிணிக்கு இது பழகிபோன ஒன்றுதான். திட்டு, வசவு, பஞ்சப்பாட்டு, எதுக்களிக்கும் பொறாமை, கறுவல், ஆவேசம்… எல்லாம் பழகி போன ஒன்றுதான் பத்து வருசமாய்.

அவள் பிராவை அணிந்துகொண்டு அந்த புது ரவிக்கையை அணிந்து கண்ணாடி முன் நின்றாள்.

ஆரஞ் நிறத்தில்  அதீத திறமையோடு தைத்திருந்த அந்த ரவிக்கை தாரிணிக்கு பிடித்து இருந்தது.

மெள்ள குனிந்து பார்த்தாள். அவள் நினைத்த அளவுக்கு சரியாய் இரண்டும் வெளியில் வந்து வெயில் அடித்தன. முதுகில் இரண்டு மச்சமும் தெரியும் அளவுக்கு நன்கு இறக்கி தைத்திருந்தாள். இப்போது தாரிணிக்கு மூர்த்தி மீது தணியாத மோகமாய் இருந்தது. ஜன்னல் வழியே எதிர்வீட்டு பையன்களை பார்த்து கொண்டே நின்றாள். நேரம் உருகியது.

           🥀🌹🏵️🥀🌺🌻

மூர்த்தி ஆறு மணிக்கு வந்தபோது ரெட் ரோஸ் டீயை கொடுத்தாள். அதில் மூலிகை வாசனை மனதை தொட்டது.

என்னடி இது? ஒரே வாடையா இருக்கு.

ஹெர்பல் டீ. அஸ்வகந்தா கூட  நிறைய போட்டிருக்கான்.

விலை என்ன? காக்கிலோ நூத்தி முப்பத்தி சொச்சம். ராவுத்தர் கடையில் ஒரு ருவாய் குறைச்சு குடுப்பான். அங்கேயா போய் வாங்கினே?

இல்ல. சாம்பசிவம் கிட்டே…

சனியனே. ஏண்டி அங்கே போனே. எக்ஸ்பயரி டேட் பார்த்தியா. ஒரு நூறு ருவாய் சேர்த்து கொடுத்தா போதும். அதை உடனே தொலைச்சாதான் தூக்கமே வரும் உனக்கு?

ரவிக்கைக்குள் வியர்த்து கொட்டியது தாரிணிக்கு.

திருமணம் ஆன புதிதில் மூர்த்தி இப்படி இல்லை. பட்டப்பகலும் நள்ளிரவாய் இருந்த நாட்கள். அவன் விரல்கள் ஓடி ஓடி அலுக்காத நாட்கள். ஆனால் வெகு சொற்பமாய் மட்டுமே இருந்தன அந்த நாட்கள்.

சில விஷயங்கள்… அதில் இருக்கும் செய்திகளை அவைகள் நுட்பமாக அவளின் உணர்ச்சியில் பூக்க வைத்திருந்த காட்சிகளையும், வாசனைகளையும், சித்திரங்களையும், ஒளி ஒலிகளையும் தன் ஆழ் மனதில் தேக்கி தேக்கி வைத்திருந்தாள்.

அந்த நாட்களில் தாரிணியின் மனம், அறிவு, புலன்கள் அனைத்தும் கூர்மையாக இருந்தது.

அது வருடங்கள் கடந்தும் கண்கள் அறியாது மனம் அறியாது வளர்ந்து வளர்ந்து ஒரு நைல் முதலையாக வாய் பிளந்து விழுங்க தவித்து நின்றதை மூர்த்தியிடம் அவள் சொல்ல வரும் போதெல்லாம் அவன் காதோர சிவப்பு பென்சில் கணக்கு பேசி அவளை மிரட்டியது.

             💐🌸💮🌼🌻🌷

மூர்த்தி இரவு சாப்பிட உக்காரும்போது புதினா சட்னியும் தோசையும் இருந்தது.

தாரிணி அவன் முன்  சற்று அமர்த்தலாய் அமர்ந்தபோது ரவிக்கையின் வழியே ஜென் பவுடர் வாசனையோடு இரண்டும் நாற்பத்தி எட்டு சதவிகிதம் வெளியேறி வந்தது.

குத்துக்கால் இட்டபோது முழங்கால் மோதி உரசி உரசி இடிக்க ஐம்பத்தி நான்கு சதம் பொங்கி நின்றது. அந்த இரண்டு சிவந்த மார்புகளும் ஒன்றை பார்த்து ஒன்று வெட்கப்பட்டு கொண்டன.

மூர்த்தி சம்மணமிட்டு தரையில் எவர்சிவர் தட்டை நீர் வடிய கவிழ்த்துவிட்டு முன்னே வைத்து கொண்டான்.

ஏண்டி சாதம் வடிக்கலையா?

இருக்கே.

எங்கே காட்டு…

பெரிய உருளி நிறையவே இருந்தது.

முகம் கருத்த மூர்த்தி இவ்ளோ சாதம்  இருக்கே அப்பறம் ஏன் தோசை வார்த்தே?

உங்களுக்கு பிடிக்குமே புதினா சட்னி…

அதுக்கு?

அதுக்குத்தான் தோசை. பலராமன் கடையில் ஆறு ரூபாய்க்கு வெங்காய சாம்பார் வேற வாங்கினேன்.

சாதம் தோசை எல்லாத்தையும் எடுத்து என் தலையில் கொட்டு. புழுங்கரிசி கிலோ நாப்பத்தி நாலு ருவாய். உன் பொண்ணு போன் பண்ணி இண்டஸ்ட்ரியல் விசிட் டூர் போக நாலாயிரம் அனுப்பு டாடி னு சொல்லிட்டு வச்சுட்டா. எவன்கூட எதுக்கு போவானு தெரியலை. சம்பாரிச்சு நான் இப்ப அதுக்கு அழுவேனா, உன் பஞ்சப்பாட்டு வயித்துக்கு அழுவேனா…

மூர்த்தி மடமடவென தலையில் அடித்துக்கொண்டு விருட்டென எழுந்தபோது தட்டு சிதறி ஆடியதில் தாரிணியின் இரண்டு முலைகளும் துடிதுடித்து சுருண்டு வற்றி அடங்கின.

மூர்த்தி கோபமும் ஆவேசமுமாய் வெளியேறினான்.

அஸ்வகந்தா டீ இன்னும் நாக்கில் இனித்தது. காக்கிலோவுக்கு நூற்றி இருபது தரலாம் தப்பில்லை என்று மூர்த்தி நினைத்துகொண்டான்.

                🌵🌾🌿🍂🍁

தாரிணி அமைதியாக அந்த தட்டை எடுத்து வைத்தாள். தோசையை மூடி வைத்தாள். சாம்பாரையும் சட்னியையும் ஃப்ரிட்ஜில் எடுத்து வைத்தாள்.

விளக்கை அணைத்து விட்டு படுக்கை அறைக்குள் சென்று கதவை சார்த்தி விட்டு கோல நோட்டை எடுத்து கொண்டாள். ஒரு புதிய கோலத்தை வரைய ஆரம்பித்தாள்.

அந்த புது ரவிக்கையின் வாசனை அப்படியே இருந்தது. அவள் கஷ்கத்தின் வியர்வை அரைக்கோள வடிவத்தில் நீர்த்து இருந்தது. உடலில் சில இடங்களில் வியர்க்கும் வியர்வை மன்மதனின் கண்ணீரா என்று கேட்டு கொண்டாள். அப்போதும் மூர்த்தியின் மீது தாரிணிக்கு எந்த கோபமும் வரவில்லை. அவள் காமத்தில் துளி துளியாக உதிர்ந்தாள்.

மூர்த்தி வாசலில் செருப்பை கழற்றி வைக்கும் சப்தம் கேட்டது. லுங்கியை மாற்றிக்கொண்டு அறைக்குள் வந்தான். திரும்பி படுத்து கொண்டான்.

கொஞ்சமாச்சும் சாப்பிடுங்க.

வேணாம்.

நாளைக்கு நான் மிச்ச பழைய சாதமே சப்பிட்டுக்கறேன். இன்னிக்கு நீங்க அந்த தோசையை மட்டும் சாப்பிடுங்க.

அதையும் நாளைக்கி நீயே வழிச்சு வழிச்சு சாப்பிடு. இப்ப நான் தூங்கணும்.

படுத்துவிட்டான்.

தாரிணி ஒருக்களித்து படுத்தபோது அவள் கண்களை முட்டி துளைப்பது போல் மார்புகள் இரண்டும் குன்றென நின்றது. இமைகள் அசைக்காது இரண்டையும் பார்த்தவளுக்கு கண்களோரத்தில் நீர் மாலை சூட்டியது காமத்தின் ஆயுதம்.

காமக்கடும்புனல் இத்தனை  முரடாய் சொறசொறப்பாய் இருக்கும் என்று அவள் நினைத்திருக்கவே இல்லை.

             🍂🍁🍃🍀☘️

புரண்டு படுக்கும்போது தாரிணிக்கு விழிப்பு வந்தது. அதுவரை நன்கு தூங்கி இருந்ததை அவள் தெரிந்து கொண்டாள். பக்கத்தில் மூர்த்தி இல்லை. எழுந்து அமர்ந்து கொண்டாள்.

காதை தீட்டினாலும் பாத்ரூமில் எந்த சப்தமும் இல்லை. ஒருவேளை அவன் காற்றுக்காக மாடியில் இருக்க வேண்டும்.

அவள் மாடிக்கு சென்றாள். மொட்டை மாடியில் இருந்து தரைக்கு அறுபது அடி கூட உயரம் இருக்கும். கொய்யா மரமும், செம்பருத்தி மரமும் பவளமல்லி பூ மரமும் சில காய்கறி செடிகளும் மொட்டை மாடியில் இருந்து பார்க்க பார்க்க நேரம் போவதே தெரியாது.

மூர்த்தி அங்குதான் நின்று கொண்டிருந்தான். அவன் கையில் மொபைல் போன் ஒளிர்ந்து கொண்டிருந்தது. யாரோடு பேசுகிறான்?

தாரணி மெள்ள நெருங்கினாள். அவன் முதுகு அசைவது போலவே அவன் இடது கையும் இடுப்புக்கு கீழே வேகம் வேகமாய் குலுங்கி கொண்டே இருந்தது.

போனில் பின்னி பிணைந்த யாரோ அவர்களை பார்த்து பார்த்து மூர்த்தி குலுங்குவதை உணர்ந்த தாரிணி விழிகள் விரிய வாய் பிளந்தாள்.

என்னங்க….

அலட்சியமாக திரும்பிய மூர்த்தி எந்த மதிப்பும் இன்றி அவளை பார்த்துவிட்டு மீண்டும் முதுகை காட்டி இயங்கினான்.

அவனிடமிருந்து ஓர் முனகலும் உடலில் திடுக்கென்று ஒரு துள்ளலும் வந்து பின் மெதுவாக புகை போல் அடங்கியது.

தரையெங்கும் சிந்திக்கிடந்தது பெரிய பங்களா, நாலு வொப்பாட்டிகள் மற்றும் காக்டைல் பார்ட்டி எல்லாம் துளிகளாக.

தாரிணியின் கையை தொட்டு விலக்கி உள்ளே சென்றான் மூர்த்தி.

அவன் போனாலும் அவன் உடலின் சூடு அங்கேயே அவளுடன் மட்டுமே இருந்தது. அவள் உடலெங்கும் விந்து பீய்ச்சி பீறிட்டு நனைத்தது. அதை இரவு என்பார்கள்.

                  🌺💮🏵️💮

மறுநாள் இருவரும் எதுவும் பேசவில்லை. சீக்கிரமே ஆபிஸ் போகவேண்டும் என்று கூறி குளித்து கிளம்பியும் போய் விட்டான் மூர்த்தி.

தாரிணிக்கு எதுவும் சமைக்க தோன்றவில்லை. பத்மாவுக்கு போன் செய்து டூர் ஃபைனல் இயர் வரும் போது போய் கொள்ளலாம் என்று கூறினாள். பின் அவள் அப்பாவுக்கு போன் செய்து பேசினாள். நேரம் போய் கொண்டே இருந்தது.

மொட்டை மாடிக்கு போனாள். திட்டு திட்டாய் இருந்த நிழல்களை அதில் தெரிந்த சில கறைகளை பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு மனது வலித்தது. வெயிலில் காய்ந்து கொண்டிருக்கும் எல்லா நிழல்களும் அவளுக்கு பிள்ளைகள் என்று தோன்றியது.

செய்வது அறியாமல் அங்கேயே நின்று கொண்டிருந்தாள் தாரிணி.

             🌺💮🏵️💮

அடுத்த வகுப்பு துவங்கும் மெலிந்த மணியோசை ரத்னாவுக்கும் தங்கப்பாண்டிக்கும் காதில் கேட்கவே செய்தது.

அடுத்த பீரியட் ஆரம்பிச்சிருச்சு. இங்கிலிஷ் கிராமர் கிளாஸ். இன்பராஜ் சார்… என்றாள் ரத்னா.

உன் புக்ஸ் எங்கே?

முத்துமீனாகிட்ட கொடுத்துட்டேன். பாண்டி…. வேணாம்டா… பயமா இருக்கு.

அந்த சந்துக்குள்ள ஒருத்தனும் வர மாட்டான். சாயந்திரம் பூக்கடை கமிஷன் மண்டி திறக்கும்போதுதான் மூத்திரம் போகவும் கஞ்சா இழுக்கவும் அங்கே ஆளுக வருவாங்க.

எனக்கு பயமா இருக்குடா.

வெறும் அஞ்சு நிமிசண்டி. எனக்கு சீக்கிரம் தண்ணி வந்துரும். நீ சும்மா வா.

ரத்னாவின் நிழல் தங்கப்பாண்டியின் நிழலில் மறுகி மறுகி நெளிந்தது. ஓரிடத்தில் அந்த குறுகல் சந்து வந்தது.

இருபுறமும் அறுபது அடிக்கு மேல் சுவர். பூசப்படாது செங்கல் செங்கலாய் சிவந்த சுவர். நான்கு அடிகள் இடைவெளி கொண்ட இடம். ரத்னாவுக்கு அந்த இடம் பிடித்து போனது. தெருவிலேயே யாரும் இல்லாதபோது அந்த முட்டு சந்துக்குள் யார் வருவார்கள்?

நாடாவை உருவி சுடிதாரை பேண்ட்டை இழுக்கவும் தங்கப்பாண்டி பேண்ட்டை தளர்த்தி சிறிய குறியை வெளியே இழுத்து கொண்டான்.

  ‘ L’ ஐ திருப்பி கவிழ்த்துப்போட்ட கோணத்தில் அவள் வளைந்து நிற்க தங்கப்பாண்டி காகம் போல் தலையை சாய்த்து கண்களை கோணலாக்கி சிறிய துளையை விரலால் நீவி தீ மூட்டினான்.

ரத்னா தன் சதையற்ற எலும்புகள் புடைத்த கரிய நிற பிட்டத்தை அசைத்து அசைத்து காட்டினாள். ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சதக்கென்று குறி புகுத்தி தங்கப்பாண்டி விரைய ஆரம்பித்தான்.

சுவரில் அதுவரை அமைதியாக சென்ற எறும்புகள் விரைந்து விரைந்து ஏறின.

சுவர் கடந்து செடி கடந்து கொய்யா செம்பருத்தி மரங்களின் நிழல் கடந்து விரைந்த எறும்புகள் முடிவில் சுவர் விளிம்பில் முகம் சிவக்க கீழே நிகழும் ஒவ்வொன்றையும் ஆவேசத்துடன் வெறிக்க வெறிக்க பார்த்து கொண்டிருக்கும் தாரிணியை பார்த்தன.

                 🌺💮🏵️💮

தாரிணிக்கு முகம் மட்டுமல்ல மனதும் சிவந்து போனது. ஒரு ஆண் பெண்ணை துளைக்கும் காட்சி அவள் ரத்தத்தை கொதிக்க செய்தது. மூக்கு புடைக்க அவள் அதை பார்த்துக்கொண்டே இருந்தாள்.

தங்கப்பாண்டியின் காதோரத்தில் பென்சில் இருக்கிறதா என்று பார்த்தாள். இல்லை, ஆனால் அவன் சிவப்பு சட்டையில் பேனா இருக்கும்.

தாரிணி ஒரு கணம் மட்டுமே யோசித்தாள். பின் வீட்டுக்குள் சென்று பழைய சாதம் தோசை சட்னி சாம்பார் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் கொட்டி மொட்டை மாடிக்கு கொண்டு வந்தாள்.

குனிந்து பார்த்தபோது தங்கப்பாண்டி முகத்தில் சின்ன சின்ன வலிப்புகள் காட்டி புணர்ந்து கொண்டிருக்க,  அவன் தலையில் மொத்தமாய் கவிழ்த்துவிட்டு கீழே இறங்கி போனாள் தாரிணி.

             🌺💮🏵️💮🏵️

நீ இன்னும் பேசவில்லை

காட்சிகளில் நினைவை
உண்ணும் உன் மனதில்
உனது நிழலின் கண்ணீர்.

நீ நிரம்பியது நினைவில்
அதுவோ உன் காதல்.
….அது வெறும்
நடுக்குளத்து முதலை

யூகிக்கும் ஆர்வங்கள்
அலைகளை இழுக்கும் வீடு.

நீ
இனி
வரலாம்
அல்லது…

பனியில் தூங்கும் தேள்
உன் மர்மம்.

சொல்லாத மர்மங்களில்
காதலை உதிர்த்து

உதிர்த்த காதலை
பிடித்தும் வைக்கிறது
காமத்தின் சுளுக்கை
மந்திரிக்கும் யௌவனங்கள்.

பெருகிப்பெருகி
கனன்று அடங்கி புகையும்
ஏதோ ஒரு சொல்
ஒலியற்று மொய்க்கிறதா…

அது நான்
இரவில் பிழிந்த
அமிலத்தின் கசப்பு.

கொட்ட கொட்ட ஓடி
அயர்ந்து நின்ற உன்னிடம்
தொப்பியேந்தி இரவல் கேட்கும்
என் காதலை மிச்சமிருந்தால்.

நீங்கள் நாள் என்று சொல்வது வெண்மையும் கருமையும் கொண்டதா?

வாசலில்
அமர்ந்திருந்தேன்.

முதலில் காலை வந்தது.

அரவமற்ற சாலையில்
ஓரிரு காக்கை அணில்
மரக்கிளை நாரைகள்
காக்கையை முறைத்தன.
ஒரு நாயை நான்கு
பெண் நாய்கள் விரட்டின.

ஒவ்வொரு மணித்துளியும்
கேள்வி கேட்பாரற்று விழுந்தன.

ஒரு நோய் கடந்து போனது.
பின்னே துன்பமும் அதன்
பின்னே ஒரு மரணமும்.
பின் கடவுளர் போயினர்.

தொடர்ந்து சில
சிந்தனைவாதிகள் நின்று
வாந்தி எடுத்து விட்டு நகர்ந்தனர்.
(இந்தியாவில் தெருக்கு 5 சிந்தனைவாதி)

மதியத்தை சுமந்து மீண்டும்
அதே காக்காய்கள்… நாரைகள்.
சில சிறுவர்கள் போனில்
ஏதோ பார்த்தபடி போயினர்.
(ஏதோ என்றால்…என்னவாக இருக்கும்?)

வெயில் கவ்விய மேகங்கள்
ஆவலுடன் அலைந்தபோதே
வெட்கப்பட்ட அந்தியும்
சிலிர்ப்பாய் பவனித்தது.

இளம்பெண்கள்
அடிக்கொருமுறை
மார்புகளை பார்த்துக்கொண்டு
பார்ப்பவரை பார்த்துக்கொண்டும்
கோவில்களில் ஏறியிறங்கினர்.

அந்தியை கசக்கிவிட்டு
இருள் பரவ
வீட்டுக்குள் போனேன்.

பாதி காலமாகவும்
பாதி பருவமாகவும்…

நிக்கட்டுமா போகட்டுமா

அங்குமிங்குமாய் சுடர்ந்து
எதிரொளிக்கும் உன்
மூக்குத்தியின் ஒளியை
துரத்தும் மனசுக்கு
நினைப்பு…
நானதன் நாய்குட்டியென்று.

நாற்சந்தியில் ஒரு மனம்

எதுவும் இனியில்லை
என்பதுதான் முடிவில்…
சொல்லியவர் சென்றார்.

பாதையில் மனம்
நெருங்க நெருங்க
எல்லையின்றி நீளும்
கனிவற்ற நிசப்தம்.

அரவங்களில் மனம்
பொறுக்கும் பயங்கள்.
துருவிடும் நாளில்
எவர் மீதும் வரத்தயங்கும்
அன்பும் நட்பும்.
சிரித்தும் அணைத்தும்
குதறிய உறவுகள்.

செல்லும் பாதையில்
எனக்கு நானே
குரூர வழிகாட்டியாக…

இரு கைகளில்
என்னுள் என்னை தழுவி
இருளுக்குள் போகிறேன்.
வழிபோக்கன்தான்…
எனது கேள்விக்கு
நானே பதில் என
தெரிகையில்
அணையும் இப்பயணம்
விளக்கினை ஏற்றிவிட்டு…

கண்ணாடி

நான் கீழிருந்து இன்னும் சில படிகள் ஏறிச்செல்ல வளைந்து முடியும் ஓரத்தில் அங்கிருக்கும் விரும்பத்தகாத அறைகளை பார்க்க முடிகிறது.

மனம் ஏற்றுக்கொள்ள தயங்கும் எதிரெதிர் அடுக்குகளில் அந்த அறைகள் விளக்கின் மஞ்சள் ஒளியால் சூழ்ந்து இருந்தன. அது பார்க்க இருட்டை இன்னும் இருட்டாக்குவது போலவே தோன்றியது.

மைய அறைக்கு முன்பாக அந்தக்கால தகர சேர்கள் ஒரு ஆறும் இந்தக்கால பிளாஸ்டிக் சேர்கள் ஒரு எட்டும் இருந்தன. அதில் அமர்ந்து இருந்த மனிதர்கள் அவரவருடன் தனியே இருந்தனர்.

ரபேசன்.

இந்த நகரின் பிரபலமான மனநோய் மருத்துவர்.

இவர் நண்பர் எனது முதலாளி. அந்த முதலாளி இந்த டாக்டருக்கு கொடுத்த விட்ட ஏதோ ஒரு செய்தியை கொண்டிருக்கும் கவரை கொடுக்க வந்திருக்கும் தூதுவன்.
எனக்கு சம்பளம் உண்டு. பி.எஃப் இல்லை. கொடுத்து விட்டு கிளம்பி விடுவேன். டாக்டர் ஐயாவை நேரே பார்த்து கொடு என்பது உத்தரவு. நான் உத்தரவுக்கு பணிவேன்.

டாக்டர் வரும்வரை காத்திருக்க எனக்கு சம்மதம். காத்திருக்கும் அந்த நேரத்து மன உளைச்சலை எல்லாம் இந்த டோக்கன் கொடுப்பவளின் வளைந்த செவ்விய இடை வலியின்றி போக்கிவிடும். என்ன ஒரு வளைவு.

கண்களை அங்கிருந்து ஐம்பத்தி சொச்சம் டிகிரியில் வளைக்க ஆஹா… ஊட்டி ஊட்டி வளர்த்திருக்கிறான் அவளின் அப்பன். எவனுக்கு கொடுத்து வைத்திருக்கிறதோ என்னும் நடுத்தர வர்க்க பொச்சாவாமையை
நானாக போக்கி கொண்டிருக்கும்போதே
உக்காருங்க… சற்று கிசுகிசுப்பான அந்த கட்டளைக்கு உரிய மரியாதையுடன் அந்த ஆள் அருகில் அமர்ந்து கொண்டேன்.

அந்த ‘இடை’ தன் கண்களால் மொத்த கூட்டத்தையும் ஒருமுறை அளந்துவிட்டு எல்லோர் கையிலும் ஒரு டோக்கனை கொடுத்தது.

எனக்கும் வந்தபோது நான் விஷயத்தை சொன்னதும் அந்த ‘இடை’ டாக்டர் வரட்டும் சொல்கிறேன் என்றபடி போய் விட்டது. தப்பு… டோக்கன் வாங்கும் சாக்கில்  ஒருமுறை அந்த இடையழகியின் கையை சுடச்சுட தடவி பார்த்திருக்கலாம்…

அந்த கூட்டத்தில் ஒரு பதினைந்து பேர் இருக்கலாம். அதில் ஏறத்தாழ பாதி நபர்கள் மனநோய்காரர்கள்.

அந்த நோய் என்ன? என்ன செய்யும்? எப்படி வந்தது? தெரியாது. அதன் பெயர் கூட தெரியாது. அவர்களுக்கும் அதன் பின்னணி பூர்வீகம்  இப்படி எதுவும் சொல்லப்படாது.

நோயின் உக்கிரத்துக்கும் வேகத்துக்கு ஏற்ப கரண்ட் முதல் வண்ண வண்ண மாத்திரைகள் வரை தரப்படும். ஆண்டுக்கணக்கில் சாப்பிட்டு அரைத்தூக்கத்தில் வாழ்ந்து மூளையின் கெமிக்கல்கள் சமனப்படும் வரை வந்து செல்ல வேண்டும்.

இறுதியில் அவர்கள் தங்களுக்குள் தாங்கள் நிம்மதியாய் இருந்த அழகான அந்த உலகம் சின்னாபின்னமாய் அழிக்கப்பட்டு மீண்டும் இந்த யதார்த்த உலகுக்கு அழைத்து வரப்படுவர். சம்பாதிக்கவோ விட்ட இடத்திலிருந்து புணரவோ போகலாம்..

என்னை பக்கத்தில் அமர சொன்ன ஆள் கொஞ்சம் விவரமான ஆள் போல்தான் இருந்தார்.

வெள்ளை சட்டை. நீல நிறத்தில் பேண்ட். இடது மணிக்கட்டில் பழைய டைட்டன் வாட்ச். அதில் நேருவின் உருவம் போல் ஒரு படம் தெரிந்தது.

கையில் ஒரு நீயூயோர்க்கர் மாகசின் இருந்தது. என் வாசிப்பு அறிவை காட்டவும், நானொன்றும் பைத்தியம் இல்லையாக்கும் என்று நிறுவவும் கழுத்தை ஒட்டகம் போல் ஒடுக்கி அந்த இதழை உற்றுப்பார்க்கும் ஒரு முயற்சியை செய்யும் பொழுதில் அவர் புன்னகையுடன் என்னிடம் காட்டினார்.

பழைய நீயூயோர்க்கர் இதழ் அது. ரொம்ப பழையதாக கூட இருக்கலாம். இது மரை கழண்ட கேஸ் இல்லை என்று நேரம் கடத்த என் பேச்சு துணைக்கு வைத்துக்கொள்ள முடிவு செய்தேன். அதே நேரத்தில் பாண்ட்ஸ் பவுடர் வாசனையுடன் ‘இடை’ வருவதும் போவதுமாய் இருந்தது எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

“இந்த மாகசினை நான்  கடந்த இருபது வருடமாக கீழே எங்கும் வைக்காமல்  இந்த கைகளில் மட்டும் வைத்திருக்கிறேன் என்றால் உங்களால் அதை நம்பமுடியுமா” என்று புன்னகைத்தார்.

எனக்கு ‘திக்’கென்று இருந்தது.

பார்க்க நன்றாகத்தானே இருக்கிறார்? பின் என்னவாக இருக்கும் என்று யோசித்தபடியே சார் பெயரென்னவோ என்றேன் அவரிடம்.

புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.

“பெயரை விடுங்கள்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றார்.

பேசும்போதே பாய்ந்து மேலே விழுந்து பிடுங்கும் லட்சணம் அவரிடம் தெரியவில்லை என்றாலும் பிரச்சனை வந்தால் வாசல் பக்கம் விழுந்தடித்து ஓட ஏதுவான இடத்தில்தான் நாம்  வாகாய் அமர்ந்துள்ளோம் என்னும் ரெட்டை தைரியத்தில் அவரோடு நான் தொடர்ந்து பேச முடிவெடுத்தேன்.

உங்கள் பிரச்சினை என்ன? என்றேன்.

நீங்கள் முகம் பார்க்கும் கண்ணாடி முன் உங்களை நீங்கள் பார்க்கும்போது தெரியும் உங்கள் உருவத்தை பிம்பம் என்றுதானே சொல்வீர்கள்?

ஆம். உண்மையும் அறிவியலும் அதே.

அந்த பிம்பம் அல்லது அந்த பிரதிதான் உண்மையான நீங்கள். ஆனால் கண்ணாடியில் தெரியும் உங்கள் பிம்பமோ யதார்த்த உலகில் இருப்பது போல் உங்களை நம்ப வைக்கிறது. இப்படி ஒரு வலைப்பின்னலில் நீங்கள் சிக்கி இருப்பது உங்களுக்கு தெரியாதவண்ணம் உங்கள் மனம் படைக்கப்பட்ட பின்னப்பட்ட ஒன்று என்றார் அந்த நீயூயோர்க்கர்.

ஓ.. அதற்குதான் டாக்டரிடம் வந்தீர்கள் போலும் என்றேன் அப்பாவியாய்.

அது மெல்ல ஒரு புன்னகையை தருவித்து என்னை உற்று பார்த்தது.

ஆம்… அதற்குதான்… ஆனால் என்னுடைய இந்த பிரச்னைக்கு டாக்டரை சந்திக்க போவது நான் இல்லை…

பின், வேறு யார்? என்றேன் நான்.

நீங்கள்… என்று அதிர வைத்தார் அவர்.

நானா…? ஆனால் நான் இங்கே வந்திருக்கும் விஷயம் வேறு ஒன்றுக்கு. எஜமானனின் கட்டளைக்கு பணிந்து வந்திருக்கிறேன். இன்னும் விவரமாக என் நோக்கம் ஒரு செய்தி தொடர்பான ஒன்று. நான் ஒருவரின் தூதுவன் என்று கித்தாப்பாக முடித்தேன்.

ஆம்… நாம் தூதுவர்கள் மட்டுமே. ஏனெனில் இங்கு உண்மையான நிலையான ஒரே ஒரு விஷயம் மட்டுமே உண்டு. அது நீங்கள் என்பது நான் மட்டுமே அதுபோல் நான் என்பதும் நீங்கள்தான் என்றார்.

இது ஒரு வினோதமான ஆள். அவர் மனம் நோகாது அன்பாய் பேசிவிடலாம். இன்னும் ஒரு மணி நேரத்தில் கூட டாக்டர் வரலாமே… நீயூயோர்க்கர் பையில் பச்சை கலர் டோக்கன் அட்டை இருந்தது.

எப்படி சார் என்று அவரிடம் அப்பாவியை போல் கேட்டேன். இடை எதிர்த்த சேரில் அமர்ந்து இடது கையை தூக்கியபடி குமுதம் படிக்க என் உடம்பில் ரத்தம் பாய்ந்தது. 32?

காரணங்கள் என்பது ஒரே நிலையாய் இருப்பது உண்டா? இது நீயூயோர்க்கர்.

இல்லை. இது நான்.

தத்துவம், சிந்தனை, கொள்கை, கோட்பாடுகள், தர்மங்கள், ஒழுக்கம், நாகரீகம் இப்படி எதுவும் மனிதர்களுக்கு நிலையானது அல்ல மேலும் இடத்துக்கு இடம் காலந்தோறும் மாறும். சரியா?

ஆம் என்றேன். வாசலை பார்த்தபடி.

அதுபோல் தங்கள் வாழ்நாளில் ஒரு குறுகிய நேரத்தில் மனிதர்கள் தங்களை அறியாமல் ஒருவருக்கொருவர் மாற்றி கொண்டு விடுவார்கள்.

அதன்படி இப்போது நீங்கள் என்பது நான் என்று அவர் சொல்லி முடித்தபோது இதை இப்படியே விடக்கூடாது என்று முடிவு செய்தேன்.

உங்களால் இதற்கு ஆதாரம் தர முடியுமா?

இன்று நாம் ஜனநாயக நாட்டில்தான் வாழ்கிறோம் என்று உங்களால் ஆதாரம் தர முடியுமா என்றார் நீயூயோர்க்கர்.

நாம் ஒவ்வொரு தேர்தலிலும் தவறாது வாக்களிக்கிறோம்.

போதுமா?

வேறு?

உங்களுக்கு ஏற்படும் அல்லது உருவாக்கப்படும் நியாயமான சிக்கலை, தொந்தரவை சீர் செய்ய எத்தனை விதமான அலைச்சல்களில் உயிர் விட வேண்டி இருக்கிறது? எத்தனை மன்னர்களை பணத்தை கொண்டும் பல்ளிளிப்பை காட்டியும் யோனியால் உபசரித்தும் நாம் வணங்க வேண்டிய நிலை?

அப்போது எனக்கு நீயூயோர்க்கர் கொஞ்சம் விஷயமுள்ள ஆள்தான் என்று பட்டது.

அந்த ஆள் ஒருவேளை நீ நான் என்று குழப்பிவிட்டு மெஸ்மரைஸ் செய்து ஆதார் உள்பட அனைத்தும் கேட்டு விடுவாரோ என்ற பயம் வந்தது. நாம் உறுதியாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டேன்.

இதனால் என்ன செய்யலாம்? என்னதான் செய்ய முடியும்? என்றேன்.

ஒன்றும் இல்லை. ஒரு தகவல் மட்டுமே இது சொன்னேன் என்று பெருமூச்சு விட்டார்.

நாம் யாரையெல்லாம் சந்திக்கின்றோமோ அவர்கள்தான் நாம். நாம் உண்மையில் அடுத்தவருக்கு மட்டுமே வாழ்கிறோம். இதை சொல்லி புரிய வைப்பதற்கு முன்பே என்னை பலவந்தமாக இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டனர் என்றார்.

அதுவும் நல்லதுதானே என்று சொல்லவும் அவர் முகம் சற்று மாறி விட்டது.

டாக்டரிடம் நீங்கள் என்ன விசயமாக வந்து உள்ளீர் என்றார் நீயூயோர்க்கர்.

மீண்டும் வந்த விஷயத்தை சொன்னேன்.

நீங்கள் அப்போது உங்கள் எஜமானன் வடிவில் வந்து உள்ளீர்கள்… ஆனால் நீங்கள் வரவில்லை என்பது ஒரு தர்க்கத்தில் சரியா என்றார்.

ஓரளவு சரியாய் பட்டது. அது சரிதான்.

இப்போது முதல் நீங்கள் என்பது நான் என்று மாறி விட்டீர்கள். ஏனெனில் இங்கே இத்தனை நபர்களை தாண்டி என்னிடம் மட்டும் நீங்கள் வரக்காரணம் அதுதான். இனி நான் முதலில் டாக்டரை சந்தித்தால் அவர் நான் ஆகி விடலாம். அல்லது நான் டாக்டராகி விடலாம்… என்றார்.

நான் வாயை இறுக்க மூடிக்கொண்டேன்.

இனி பேசினால் நீயூயோர்க்கர் என்னை எந்த முடிவுக்கும் கொண்டு செல்ல முடியும் என்பதால் அவர் என்னை பார்க்கும் போது அவர் எதை சொன்னாலும் நான் அதை அப்படியே மறுப்பு இன்றி அனைத்தையும் ஏற்றுக்கொள்வது போன்ற பாவனையை வைத்துக்கொண்டேன். வேறு இடத்துக்கு இருக்கை மாறி போவதும் நாகரீகமான ஒன்றாய் இல்லை.

விட்டத்து பேன், பல்லி என்று பார்வையை மாற்றி கொண்டேன். ஆனால் அவர் என் காதுமடல் பக்கம் மட்டுமே உற்று பார்ப்பது போன்ற குறுகுறு. குறு குறு. குறு குறு.

நீயூயோர்க்கர் சொன்னதில் என்னவோ அர்த்தம் இருப்பது போல்தான் என் மனம் தனியே யோசிக்க ஆரம்பித்தது. அவரின் ஒவ்வொரு வார்த்தையையும் பிய்த்து ஒட்டி கொண்டது என் மனம்.  எனக்கும் பொழுதும் போக வேண்டுமே?

மனதை அதன் போக்கில் போகும்படி விட்டுவிட்டு இடை தன் கையை தூக்குமா என்று ஒரு கண்ணிலும் நீயூயோர்க்கரை ஒரு கண்ணிலும் வைத்துக்கொண்டேன்.

அப்போது டாக்டர் உள்ளே வந்து லேசாய் நோட்டமிட்டபடி அறைக்குள் செல்லவும் இடையும் பின் தொடர்ந்து உள்ளே புகுந்தது. என்ன ஒரு பின்னழகு. பத்து நிமிடங்களை என் வாழ்வில் இழந்தேன்.

முதலில் என்னை இடை அழைக்க நான் நீயூயோர்க்கரிடம் சிநேகமாய் அசட்டு சிரிப்பு சிரித்து விட்டு உள்ளே சென்றேன். அவர் என்னை பார்த்து விசித்திரமாக ஒருமுறை கண்ணடித்தது என்னவோ போல் இருந்தது.

அந்த அறை பார்வைக்கும் மனதுக்கும் வேறு வேறு போல் தெரிந்தது. மூச்சு முட்டும்
ஃபென்தடால் மணம் அறையில் கமழ்ந்து ஒரு கணம் தீவிரமாக தலைசுற்றி நின்றது.

டாக்டர் அவரின் தெய்வீக புன்னகையை உலவ விட்டார். தொடர்ந்து ப்ளீஸ் ஸிடவுன் என்றார். நொடிகளில் சில ஒடிந்தன.

டாக்டர் புதுப்பூனை புது எஜமானனை வாலை உயர்த்தி நோட்டமிடுவது போல் என்னை பார்த்தார். பின் செருமிவிட்டு மூக்கு கண்ணாடியை ஏற்றி விட்டார். தலையை தாழ்த்தி பேச ஆரம்பித்தார்.

உங்கள் எம் டி எனக்கு மதியமே போன் பண்ணி சொல்லிட்டார். லெட்டர் கொண்டு வந்து இருக்கீங்க ரைட்? என்று சிரித்துவிட்டு உங்க பேர் கூட சொன்னார் மறந்து போச்சு சாரி… உங்க பேர் என்ன?

“பெயரை விடுங்கள் டாக்டர்… எனக்கொரு டிஃபரெண்ட் ப்ராபளம்” என்றேன்.