Tag Archives: தேடல்

நிழலால் நகரும் பூனை

களைத்த
அதிகாரியை போன்று
எனது அறைக்குள்
வரும் அப்பூனை
மோப்பமுற்று தேடுகிறது
அதன் நிழல்களை.

காணாது கலக்கமுற்று
வெளியேறும்
பூனையின் நிழல்களை

நினைவுகளாக்கி
சுமக்குமென் மனதுக்குள்

அந்த பூனையை – அது
இல்லாத பொழுதுகளிலும்
நான் பார்க்கிறேன்.

அந்த
மனப்பூனை
என்னை பார்க்கும்போது
அதன் மனதுக்குள்

அறை விளக்கொளியில்
சிமிண்ட் சதுரத்தில்
கோணலாய் நெளியும்
எனது நிழலோடு
விளையாடி திரியலாம்.

அந்தப்பூனையின்
மனதில்தான்…
அறையென்று
எதுவிருக்கும்?
நானென்று
யாரிருப்பர்?

அடர் இரவுகளில்
எங்கள் கண்கள்
சந்திக்கும் போதெல்லாம்
பூனை பயத்திலும்
நான் பிரியத்திலும்…

நிழலின் வெப்பம்
தாளாது சுருள்கிறோம்
அவரவர் மனதில்.

கோப்பை

என் முன்னே
ஒரு கோப்பை.

கோப்பைக்குள் காஃபி.

சர்வ ரகசியமும் அறிந்த
நீதான் அதனில்
ஆவியாக வெளியேறுகிறாய்.

அந்த நீராவியின்
கொடுங்கோன்மையை
அறிந்த நான்
சருகு போல் துடிக்க

எங்களை
தன்னுள் பிரதிபலிக்கும்
அக்கண்ணாடியில் நீ
மின்னி நகைக்கிறாய்.

நான் காஃபியுள்
ஒரு வாய்ப்பை
முழுக்க தவறவிட்ட
கோழையை போல்
நீந்தி செல்கிறேன்.

குவளை தள்ளாடி
சில துளிகள் தெறிக்க
தரையெங்கும் முளைத்தது
காஃபி செடிகள்.

ஒரு தாவரம் போல்
உன் யோனி அழைக்க
உன் யோனியின் வெயில்
எனக்கு கார்காலம்
என்கிறேன்.

கண்ணாடி வழியே
நீராவி பெருகுகிறது.
அது ஓடையை போல்
தவழ்கையில்
உன்
நிழல் சிவக்கிறது.

கோப்பை மிச்சமின்றி
என்னை பருகுகிறது.

பயணங்களில் ஒரு பயணம்

தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.
இரவின் துளை வழியே
பகலின் பயணம்.
பகலின் துளை வழியே
ஒளியின் பயணம்.
ஒளியின் துளை வழியே
ஒலியின் பயணம்.

ஒலியின் துளை வழியே
இசையின் பயணம்.
இசையின் துளை வழியே
கனவின் பயணம்.
கனவின் துளை வழியே
கண்ணீரின் பயணம்.

கண்ணீரின் துளை வழியே
காட்சிகளின் பயணம்.
காட்சியின் துளை வழியே
வாழ்க்கையின் பயணம்.

வாழ்வின் துளை வழியே
மரணத்தின் பயணம்.
மரணத்தின் துளை வழியே
தனிமையின் பயணம்.
தனிமையின் துளை வழியே
இரவின் பயணம்.

அவர் என்பதனால் நான்…

யாரோ பேசுவதுதான்
என்றாலும்
நான் கவனமுடன் கேட்கிறேன்.
எனக்குள் அவர்
பேசிக்கொண்டிருப்பதால்…

ஒளியில் காற்றை பிரிக்கும்
ஒரு கனவிலிருந்து
அந்த புதியதொரு நாளை
எனது ப்ரிய கோல்டா
கவ்வி இழுத்து வந்தான்.

அம்மனிதர் அந்த நாளில்
வெளியேறியதும்
என் மனம் புகுந்தார்.

இது கனவல்ல.
எனினும்,
நான் கூச்சத்துடன்
அறிவிக்க விரும்புகிறேன்.

அம்மனிதர்
என்னுள்ளிருந்து பேசுகிறார்.

மனம் குறித்து அவரோடு
நான் பேசுகையில்
நீங்களும் அங்கிருப்பதை
உங்களுக்குள் இருக்கும்
என்னாலும் நன்றாக
பார்க்க முடிந்தது.

நீதிபதி சிந்திய மைத்துளி

பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.

மரித்த அக்கவிதையை
ஊர்க்குருவிகள்
பட்டப்பகலில் உண்டன.

கவிதை உண்ட
குருவிகள் பறந்தன
பட்டப்பகலில்…
பறந்த குருவிகள்
முட்டையிட்டன
பட்டப்பகலில்…

பொறிந்தன முட்டைகள்
பட்டப்பகலில்…

பகல் குஞ்சுகள்
பறந்தன வெளியில்
பட்டப்பகலில்…

அதனை
பட்டப்பகலில் பார்த்தவன்
எழுதினான் கவிதையொன்று
பட்டப்பகலில்…

பட்டப்பகலில்
எழுதிய கவிதை
பட்டப்பகலில் மரித்தது.

(22) அவளுடன் பேசும்போது

(22.01.2019 நள்ளிரவு 12.45 க்கு அவள் வாட்ஸப் மூலம் அனுப்பியது.)

அன்புள்ள ஸ்பரி…

நானும் அம்மாவும் பஸ்ஸில் ஏறி அமர்ந்து விட்டோம். எங்களுக்கு உரிய குறிப்பேடுகளும் கொடுக்கப்பட்டு பயண வழி முறைகளும் தரப்பட்டு விட்டன.

பயணங்கள் குறித்து நீங்கள் சொன்னது இப்போது நினைவுக்கு வந்தது.

“எந்த பயணமும் ஒரு துல்லியம் இல்லாத சதுரமாக மட்டும் இருக்கும். அதில் நாம் பறிக்கப்படுகிறோமா அல்லது நம்மை சேகரிக்கிறோமா என்பதில் நாம் கவனம் கொள்ள வேண்டும்.”

வனங்களுக்குள் நாம் சென்றால் ஒரு மரத்திடமாவது நமது ஸ்நேகத்தை பரிசளிக்க வேண்டும்.

இயற்கை படர்ந்த இடத்தில் கும்பலாய் கூட்டமாய் கத்தியபடி அலைவதன் பெயர் ரசிப்பது அல்ல… மனமும் உணர்வும் இணைந்து ரசிக்க ஓர் தொட்டியில் இருக்கும் ஒரு ரோஜா போதும்.

இயற்கை மௌனமானது.

அந்த மௌனத்தில் பெயரின்றி பதுங்கி இருக்கும் ஏகாந்தத்தின் மீது நம் மனம் பரவ வேண்டும். ஆகப் பெரிய மரம் நம் ஆயுளுக்கு முன்னும் பின்னும் வாழக்கூடியது. அது ரிஷியைப் போல் இருக்கும். அதன் மூச்சில் காலங்களின் வணக்கங்கள் கலந்திருக்கும். நம்மால் உணர முடிந்தவரை அதை தொடர்ந்து செல்ல வேண்டும். அதை அவதானிக்க வேண்டும்.

வனங்களில் வாழும் உயிரினங்கள் அது புழுவாயினும் அரசனைப்போல்தான் வாழ்ந்து கொண்டிருக்கும். நாம் பெருத்த குற்றஉணர்ச்சியுடன் அதன் முன் நிற்கும் நிலையில்தான் இன்னும் வாழ்கிறோம். மொழியில்லாத அந்த ஜீவன்கள் மனித கரிசனத்துக்கு பெயர் போனது. நாம்தான் கவனமாய் கடந்து செல்ல வேண்டும்.

நீர்நிலைகளில் மனிதப்பாதம் படாத ஒன்றினை நீ காண நேர்ந்தால் அதை உனக்கு கிடைத்த பெரிய வாய்ப்பாகவே கொள்ள வேண்டும்.

நீர் தமக்குள் இணக்கமானவை. அவைகளில் குரலுக்கு அனுமதியில்லை. அதன் ஆழங்கள் வசியங்களின் கனவுகள். நமது பூட்டப்பட்ட கதவுகளை அது திறக்கும் வலிமை கொண்டது. அதன் விலை உயிர்…

இவையெல்லாம் இதோ இப்போது நினைவுக்கு வருகிறது ஸ்பரி…

முடிந்தளவு பிரதேசங்களில் உன்னை அந்நியப்படுத்திக்கொள். நீ யார் என்பதும் கூட உனக்கு முக்கியம் அல்ல. உன்னை சுற்றி மக்கள் திரள் இருக்கும். அவர்கள் வித்யாசமாக இருப்பதில் கற்பனை செலுத்தி உன்னை இழந்து விடாதே. அது உனக்கு சில குறிப்புகள் மட்டுமே.

மனிதம் என்பதை மட்டும் தேடு. அவசரமாய் கடந்து போகும் எதனிலும் அது தெரியாது.

ஒரு வேற்று மொழி சகோதரன் உன்னை கால்கள் இன்றி கடந்து போவான். ஒரு பிச்சைக்காரர் உன்னிடம் எந்த தயவும் எதிர்பார்ப்பும் இன்றி நீங்கிப்போவார். பசித்த குழந்தைகள் இரவை குடிசையில் எதிர்த்து கொண்டிருக்கும்.

நகரத்தின் பாழடைந்த வாழ்க்கை ஒன்று தன்னிரக்கமின்றி தன்னால் முடிந்தளவு மகிழ்ச்சிகரமாய் பூத்துக்குலுங்கும் காட்சிகளை நுட்பமாக குறித்துக்கொள்.

வாழ்க்கையில் நமக்காக யார் யாரோ நேரமின்றி உழைத்துக்கொண்டு இருப்பதை பயணங்கள் மட்டுமே வெளிப்படுத்தும். அவர்கள் தூக்கமின்றி பசியை மறந்து காமத்தை தொலைத்துவிட்டு காதலியை மறந்துவிட்டு உடலின் ஏதோ ஒரு பாகம் அயர்ந்து போகும்படி நோயுறும்படி அழுகும்படி பணியில் சிரித்துக்கொண்டே ஈடுபடுவார்.

அதுவும் அவர் குடும்பத்திற்காக மட்டுமே என்பதை பயணங்கள்தான் காட்டும். இவைகளில் மட்டுமே எந்த ஒரு கலையின் ஜீவனும் அடங்கி இருக்கிறது.

இவையெல்லாம் என் நினைவில் உள்ளது ஸ்பரி… உங்களுக்கு பேசுவதை விடவும் எழுதுவதுதானே பிடிக்கும். நான் எழுதி அனுப்புகிறேன்.

குழந்தைகள் நன்கு விளையாடியபின் உணவு தாருங்கள்.

போய் வருகிறேன் ஸ்பரி…

🎏🎏🎏🎏🎏🎏

மழை பெயல் மறந்த கழை (பாகம் 3)🔞

                    பாகம் 3

அன்று இரவு மணி பதினொன்று.

நரேஷ் போனுக்கு சாந்தி கால் செய்தாள்.

தூங்கிட்டியா?

இல்ல. சொல்லு.

பாடம் படிக்கணுமா?

இல்ல. சும்மா முழிச்சிட்டு இருக்கேன். நாளைக்கி காலேஜ் போகலை.

ஏன்?

எனக்கு போக பிடிக்கலை.

போக பிடிக்கணும். நல்லா படி.

ம்ம்ம்.

நரேஷ்…

சொல்லு.

இப்ப எங்கே இருக்க?

என் ரூமில்.

வாட்ஸாப்பில் வீடியோ கால் பண்ணவா?

வேண்டாம். நீ தூங்கு. ஷான்.

சாந்தி எந்த அவகாசமும் இன்றி உடனே அவனை கூப்பிட்டாள்.

                🎯🎯🎯🎯🎯🎯

நரேஷ் அவள் முகத்தை பார்த்தான்.

சாந்தி இப்போது மெல்ல போனை இறக்கினாள்.

எந்த உடையும் இன்றி அவள் இருந்தாள். தன் ஒரு மார்பகத்தை  ஒரு கையால் பற்றி கொண்டிருந்தாள்.

அந்த காமிரா அவளை துரத்தி துரத்தி நரேஷுக்கு ஒவ்வொரு அங்கமாக காட்டிகொண்டிருந்தது.

நன்கு சவரம் செய்த தன் கீழ் உறுப்பை காட்டும்போது நரேஷ் வியர்த்து கொண்டிருந்தான்.
இரு விரல்களை துளைக்குள் செலுத்தி லாவகமாக அதை பிளந்து காட்டினாள்.

உள்ளே ரத்தமாய் சிவந்திருந்த இருளுக்குள் நரேஷின் இருபது வயது ஆண்மை விழிக்க ஆரம்பித்தது.

ஷான்… என்ன இது… வேண்டாம். ப்ளீஸ்.

இப்போது பேசாதே. நீயும் உன் உடைகளை கழற்று.

அவசரமாக கழற்றியதும் அவன் ஆண்மை முறுக்கேறி இருந்தது.

அனிச்சையாக தன் காமிராவில் அதை தொகுத்தான் நரேஷ்.

இருவரின் வெட்கமும் அறவே பொலிவிழந்து உயிரின் உண்மையான வாழ்வு அங்கே வெளிப்பட துவங்கியது.

               🎯🎯🎯🎯🎯🎯

நரேஷ்….

ஷான்…

இயர் போன் மாட்டிக்க. இப்போ நான் கால் பண்றேன்.

சரி.

*********
*********

ஹலோ…

ஷான்…

ட்ரஸ் போட்டியா…

இல்ல…போட்டுக்கவா?

வேண்டாம் போட்டுக்காத… இரு…

ம்ம்ம்.

சற்று நிசப்தம்.

இன்னும் நிசப்தம்.

ஷான்…அடிக்குரலில் அழைத்தான்.

ம்ம்ம்ம்…

இந்த வினோத முனகல் அவனை தீவிரமாக்கியது. அவன் அவனுக்கு அப்பாற்பட்டு வழிந்து கொண்டிருக்கும் உணர்வை அடைந்தான்.

மனதை கல்லாக்கி கொள்ள தீவிரம் கொண்டான். பிஸ்னெஸ் அனலிட்டிக்ஸ் பாடத்தை நினைத்து கொண்டான்.

ஷான்…

ஸ்ஸ்ஸ்…ம்ம்…வரேன்.

என்ன செய்கிறாள்?

நரேஷ்… அவள் அழைத்தாள்.

ஷான் என்ன பண்றே.

நீ இப்ப இங்கே இருந்தா என்னை என்னடா செய்வே? கொஞ்சினாள்.

சாந்தியின் குரல் முற்றிலும் மாறி இருந்தது. அது சாந்தி இல்லை என்று நினைக்கும் அளவு கருணையும் அன்பும் நிரம்பி இருந்தது. மந்திரக்குரலை நோக்கி நழுவி நழுவி விரைந்தான் நரேஷ்.

                 🎯🎯🎯🎯🎯🎯

என்ன செய்யணும்.

என்ன செய்வே?

உம் மேல் படுப்பேன்.

ம்ம்ம்

கிஸ் பண்ணுவேன்.

எங்கே?

பூப்ஸ் முழுக்க.

ம்ம்ம்… அப்பறம்..

உன் புஸியில் கிஸ் பண்ணுவேன்.

ம்ம்ம்…அப்பறம்…

பூப்ஸ்ல ஷக் பண்ணுவேன்.

ம்ம்ம்

அது ரெண்டையும் விடாம கசக்குவேன்..

ம்ம்ம்…

அப்போ நீ….

நான்..?

என்னோடதை எடுத்து…?

எடுத்து?

கீழ… உனக்குஉள்ளே விட்டுக்கணும்…

மாட்டேன்.

ஏண்டி…

நீயாதாண்டா செய்யணும் அதை.

இருட்டுல ஹோல் தெரியாது ஷான்.

கீழ தடவி ஒவ்வொரு விரலா விட்டு விட்டு  பாரு. ஹோல் தெரியும்.

அக்கணமே நரேஷ் தன் முழு உடலும் மெல்ல குலுங்குவதை அறிந்தான்.

ஷான்….இப்ப…

நரேஷ்…..

நரேஷ் கனவில் விரட்டும் தோட்டாவை போல் இயங்கினான்.

ஷான்…. எனக்கு வந்துருச்சு. போயிடுச்சு…

நீள் மௌனம்.

ஷான்….?

ம்ம்ம்.

உனக்கு?

அப்பவே ஆயிடுச்சு. உனக்கு கம்பெனி குடுத்தேன். அவ்ளோதான்.

எப்படி?

மாஸ்டெர்பேட் பண்ணிட்டேன். பழகின விஷயம்தானே எனக்கு அது.

நரேஷின் தொடை எங்கும் தீவிரமாய் வழிந்திருந்த திரவம் வேகமாய் காய ஆரம்பித்தபோது அவன் தொடை முடிகள் அனைத்திலும் ஈர்ப்பு நிறைந்திருந்தது.

நரேஷுக்கு இப்போது கைகள் நடுங்கினாலும் ஏதேனும் சாந்தியோடு பேசிக் கொண்டிருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவளுக்கும் கூட.

                🎯🎯🎯🎯🎯🎯

ஷான்…

அவ்ளோதான் நரேஷ். முடிஞ்சுபோச்சு.

இன்னொரு தடவை செய்யணும்டி.

செய்யலாம்.

எப்போ?

இன்னிக்கே… போதுமா?

தேங்க்ஸ்டி.

எதுக்கு?

சொல்ல தெரியல. காது மடல் கூட  ஹீட்டா இருக்கு உடம்பு இப்போவும் அதிருது. ரொம்ப தூரம் அலுப்பே இல்லாம ரன்னிங் போற மாதிரி இருக்கு.

அப்படித்தான் இருக்கும்.

எப்பவுமே இருக்குமா?

உடம்பு சலிக்கும் வரை.

எனக்கு சலிக்காது ஷான்.

சலிக்கும். உடம்பு சலிச்சு போய்டும்.

எப்படி?

உங்க வீட்டுல எலி இருக்கா?

அதுக்கு வாய்ப்பே இல்ல.

எங்க வீட்டுல நிறைய இருக்கு.

ஓ…

நிறைய இருக்கு. ஒருநாள் ராத்திரி எலிகள் கீச் கீச்ன்னு சத்தம். ரொம்ப நேரம் கேட்டுச்சு. போய் பார்த்தா ரெண்டு பெரிய எலிகள் அது செஞ்சுட்டு இருக்கு.

அப்போ எங்க அப்பா இருக்கார்ல… அவரு ஒரு பெரிய உலக்கையை எடுத்து ஒரே அடியில் ரெண்டையும் மண்டையில் ஓங்கி அறைஞ்சு கொன்னார்.
வீடு முழுக்க ப்ளக் னு ரத்தம். என் மூஞ்சில் கூட அப்ப சரட்டுன்னு துளிகளா தெறிச்சிச்சு.

நரேஷ் ஆடிப்போனான்.

ஷான்… என்ன இது?

ம். அதான் நரேஷ். ஒரு பொண்ணு  அவளோட ரத்தத்தில் குளிச்சிட்டு வந்ததும் ஒரு ஆம்பிளை புழுவை வளர்த்து காத்திட்டு இருக்கான். அவன் உறுப்பை அவள் உடம்புக்குள்ள திணிக்கணும். புழுவை கக்கணும். புழுவை பெக்கணும்.

ஷான்…

பார்த்தே இல்ல இப்ப நீ… எங்களுக்கு அது எவ்ளோ சாஃப்ட்டா இருக்கும் தெரியுமா?

தெரியாது…

பூ மாதிரி இருக்கும். அதுக்குள்ள துருப்பிடிச்ச கொக்கி கம்பியை விட்டு குடல் வரைக்கும் வெளியே இழுத்து அப்படி என்னடா பாக்கறீங்க?

வெறும் விஷத்தை மட்டுமே சாப்பிட்டு வளர்ந்தாலும் இப்படி சிந்திக்க முடியாதே?

மிருகங்கள் கூட ஆணுக்கு ஆண்தான் அடிச்சிக்கும். நீங்க எல்லோரும் ஒண்ணா சேர்ந்து எங்களை ஏண்டா இப்படி குதறி எடுக்கறீங்க?

ஷான்….போதும்..ப்ளீஸ்…

உன்னை சொல்லலை நரேஷ். ப்ளீஸ்…

எனக்கு புரியுது ஷான்.

நான் தோட்டத்தில், மொட்டை மாடியில் வாசலில் நின்னா போதும்… அப்பா என்னை தாண்டி போகும்போது எல்லாம் சிரிச்சிட்டே கேப்பார்…

“யாரைம்மா தேடற? கீழே ரொம்ப அரிப்பா இருக்காம்மா உனக்குன்னு”?

எவனாச்சும் டிவி சினிமாவில் கட்டி பிடிச்சா கூட நான் எந்திரிச்சு போய்டுவேன். நான் திருப்பி கேட்கலாம், “ஏண்டா நாயே நீ வெக்கமில்லாம பத்தாம் கிளாஸ் பொண்ணை போயும் போயும் புண்டைக்காக சொரண்டிட்டு நிக்கிறியே. என்கிட்டே வாயேன்” னு சொல்ல முடியும். இந்த குடும்பம் இல்ல நாறிடும்.

ஷான்… கொஞ்சம்…

இரு. பேசிடறேன். உன்கிட்ட நேர்மை இருக்கு. நீ காதலிக்கறேன் னு சொன்னே. சின்ன பையன். அப்படித்தான் பேசுவே. அட்மைர் இருக்கிறது தப்பு இல்ல.

ஆனா இப்போ நிறைய சுதந்திரம் இருக்கு. ஸோ நீ நான் எல்லோருமே மறைக்க முடியாத நிர்வாணம்தான்.

இது பொய் னு சொல்லி அதை நம்ப வைக்கிறவனை சம உரிமை னு சொல்லி குழப்பி விடரவனை இது பெண்ணடிமை நான்தான் காப்பாத்துவேன் னு சொல்ற எல்லா நாயையும் நான் செருப்பால அடிப்பேன்.

என் அம்மா செத்தப்ப எனக்கு மூணு வயசு. என் பத்து வயசில் என் அப்பா மாதிரி தங்கமான மனுஷனை நான் பார்த்ததே இல்லை.

பதினாறு வயசில் வயசுக்கு வந்தேன். தலை குளிச்சு எத்தனை கோவிலுக்கு கூட்டிட்டு போனார் தெரியுமா? எனக்கு எத்தனை நகை புடவை வாங்கி தந்திருக்கார் தெரியுமா?

இப்ப அவருக்கு என்ன ஆச்சு… தெரியலை. எனக்கு சத்தியமா தெரியல. எனக்கு ஒண்ணுமே புரியலை. நான் என்ன பண்ணட்டும் நரேஷ்?

சாந்தி அன்று அழுதாள். அவள் மீது பரவிக்கிடந்த மொத்த ஆண்களின் கண்களும் கருகி உதிரும் வரை செருமி செருமி அழுது தீர்த்தாள்.

நரேஷின் கைகள் போனை பிடித்தபடி நடுங்கி கொண்டே இருந்தன. அவனுக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை.

சற்று நேரம் மௌனம்.

நரேஷ்…

ஷான்…

ஆசையா கேட்டியே… வா செய்யலாம்.

வேண்டாம் என்றான் உறுதியாக.

இல்ல…என் கண்ணு…வாடா…

வேண்டாம் ஷான். இப்ப உடம்புனா என்னன்னு புரிஞ்சுடுச்சு. நீ தேவதை.

சாந்தி வெறுமையாய் சிரித்தாள்.

நரேஷ்…ஒண்ணு செய்வியா. எனக்காக?

எது வேண்டுமானாலும்… சொல்லு ஷான்.

நீ நல்லா படி. படிச்சு பிலிப் கோட்லர் மாதிரி நிறைய புஸ்தகம் எழுதணும்.

கண்டிப்பா ஷான்.

அதுக்கு நீ…

நான்…

இனி நாம் போனில் பேசிக்க வேண்டாம். இனிமேல் நாம் தொடர்பு கொள்ள வேண்டாம். எனக்கு தெரியும் என்னை கண்டுபிடிக்கறது உனக்கு ரொம்ப ஈஸி னு. ஆனா அப்படி ஒருபோதும் செய்யாதே.

எனக்கு உன்னை பிடிக்கும். உன்னை என் காதலனா இப்போ பார்க்கிறேன்.

அது நம்ம மனசில் ஆரம்பிச்சு மனசோடவே போகட்டும். உன் வாழ்க்கை வேறு. எனக்காக நீ இதை செய்வியா நரேஷ்…. ப்ளீஸ்…

ஷான்… கண்டிப்பா செய்வேன்.

ஸோ..

ஸோ…நாளைக்கு நான் காலேஜ் போய்டறேன். சரியா?

                      🎯🎯🎯🎯🎯🎯

இரண்டு பக்கமும் போன் அணைந்தது. விடிவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. அது மெதுவாக விடியட்டும்.

அறிவில் ஒளி வந்தபின் இரவென்ன பகலென்ன?

               (முற்றிற்று)

(21) அவளுடன் பேசும்போது…

திங்கள் 21.2019 மாலை 6.30

              ➿➿➿➿➿

அவள் வீட்டுக்கு போனபோது தன் பயண ஏற்பாடுகளில் தீவிரமாக இருந்தாள்.

ஸ்பரி… என்று ஆர்வமாய் கூக்குரலிட்டாள்.

ஆலப்புழை பற்றிய இணையக்குறிப்புகள் சேகரிக்கப்பட்டு ஒழுங்குடன் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது.

ஒவ்வொன்றாக பார்த்தபடி இருந்தேன்.

அவளை மெள்ள ஆதுரத்துடன் அழைத்தேன்.

என்ன என்பதை போல ஒரு பார்வை.

“நாம் திருமணம் செய்து கொள்வோமா?”

அவள் அடக்கவொட்டாது சிரித்தாள்.

“நீங்கள் இப்படி கேட்பது எட்டோ அல்லது ஒன்பதாய் கூட இருக்கலாம். ஏதேனும் தோழியின் வாட்ஸப் கருத்து வந்ததோ?”

அவள் சிரிப்பு அடங்கவில்லை.

இந்த விஷயத்தில் நானும் எப்போதும் அவளுடன் பல்லை கடித்துக்கொண்டே சிரிப்பேன்.

ஸ்பரி… நீங்கள் அதை விரும்பினால் நான் மறுப்பு சொல்லவா போகிறேன்… உண்மையில் உங்கள் மனதில் இருப்பது எனக்கும் தெரியுமே.

நான் என்று அல்ல. நீ யாரையேனும் திருமணம் செய்தால் ஒரு பாதுகாப்பு அன்பு நிம்மதி எல்லாம் கிடைக்குமே.

இப்போது மட்டும் அவை இல்லாமலா நான் இருக்கிறேன்?

மேலும் நாம் திருமணம் என்பது பற்றி பலமுறை பேசி விட்டோமே… அதை ஒரு காப்பீடு போல என்னால் வைத்து கொள்ள, பராமரிக்க இயலாது.

ஸ்பரி… ஒரு பெண்ணுக்கு உருகுவதும் ஒரு பெண்ணை உருக்குவதும் உங்கள் வேலை அல்ல என்பதும் எனக்கு தெரியும்.

இருந்தாலும்… நீ என்னை…

“பாருங்கள் ஸ்பரி… என்ன விளையாட்டு இது? நீங்கள் உணர்ந்து கொண்டிருக்கும்
உங்கள் கருணையால், அன்பால் என்னிடம் கொஞ்சக்கூட தெரியாது உங்களுக்கு…

ஒரு கணவன் என்பவன் எனக்கு தரும் பாதுகாப்பு என்பது மட்டும் பற்றாது. என் கற்பனைகளை, நப்பாசைகளை, வளைந்து கிடக்கும் ஈர்ப்புகளை கருத்தால் நொறுக்க வேண்டும்.

அவன் வேட்டி நுனியில் மட்டுமே எனது நிழல்கள் எப்போதும் காப்பாற்றப்பட வேண்டும் என்ற பூச்சாண்டித்தனங்கள் எனக்கில்லை ஸ்பரி”

உன் மனதுக்கு கொஞ்சம் இனிமை, சாந்தம் கிடைக்கும். காதல் எத்துணை அழகிய அன்பு தெரியுமா? ஆகவே நீ…

“நாம் காதலிக்கிறோமா ஸ்பரி..? இந்த ஊர் அப்படித்தான் பேசுகிறது. உங்கள் பால்ய தோழர்கள் சிலர் என்னிடம் உங்கள் காதலிகளின் பெயர்களை கால் விரல் விட்டும் எண்ண முடியாது என்று சொன்னது உண்டு.

அந்த பெண்களில் எத்தனை பேர் உங்களிடம் சொந்த பிரச்சனைக்கு கொதித்து அழுததுண்டு என்பதும் தெரியும். பிறகு ஏன் என்னிடம் மட்டும் இப்போது கல்யாண வாஞ்சை.”

அதாவது… என்று ஆரம்பித்தேன்.

இல்லை ஸ்பரி… இன்று ஏதோ நடந்து உள்ளது. இல்லையேல் இப்படி பேச மாட்டீர்கள். என்ன ஆயிற்று?

வழக்கம்போல் நடப்பதுதான்.

சொல்லுங்கள் ஸ்பரி…

பெண்கள் தன்னைத்தானே கொஞ்சிக்கொள்ளவும் சீராட்டவும் கூடாது என்பதில் மிகவும் பிடிவாதமானவள் நீ.

ஒரு முற்றுப்புள்ளியை வைக்கும் இடம் தீர்ப்புக்கு அடுத்த அம்சமாய் இருக்க வேண்டும் என்னும் உன் துல்லியம் பார்த்து வியந்து போனவன் நான்.
கனவுகள் அற்ற, பசியை , நோயை பொருட்படுத்தாத குணம் கொண்டவள்.

எனது முட்டாள்தனம் எனக்கு புரிகிறது ஸ்பரி… இந்த கவிதையில் நான் சொல்ல நினைத்தது இல்லை. ஆயினும் பாராட்டுங்கள்… உழைத்திருக்கிறேன்… என்று என் கரத்தை பற்றி உன் தலையில் வைத்து கொண்ட நாட்கள் மட்டும் கொஞ்சமா என்ன?

உன் வாழ்க்கையில் நீ பலமாய் பற்றிக்கொண்டது உன்னைமட்டுமே என்பது எனக்கு தெரியும். ஆனால் இப்படி உன் போல் நான் எந்த பெண்ணையும் பார்க்கவில்லை. அப்படி ஒரு பெண்ணின் அனுபவம்தான் இன்று வந்து சென்று மறைந்தது.

பேசும்போதே பின் நகர்ந்து செல்வது, உடைந்து சிதறிப்போவது, ஆசைகளில் கற்பனைகளில் தன்னை ஆதிக்கமாய் பெருக்கிப்பார்ப்பது, இப்படி எல்லாம் ஒருவர் தன்னை அறிய முற்படும்போது அது தனக்கே ஒரு சுயகொடுமை செய்து கொள்வது அல்லவா?

அதை உணர்த்த முயல்கையில் அந்த உறவில் பல சமயம் சிடுக்கும் அனர்த்தமும் உருவாகி விடுவதை பார்க்கும் போது இன்னும் வேதனை வருகிறது என்றேன்.

மடித்துக்கொண்டிருந்த உடைகளை வைத்துவிட்டு கன்னங்களை பற்றிக்கொண்டாள்…

ஸ்பரி…

“நாம் திருமணம் செய்து கொள்வோமா?”

ஒரு கணம் கண்களை பார்த்தாள்.

நான் சிரிக்க சிரிக்க அவளும் சிரித்தாள். குட்டிகள் கும்மாளமாய் வளையமிட்டது.


                 🔯🔯🔯🔯🔯🔯

நீங்கள் நாள் என்று சொல்வது வெண்மையும் கருமையும் கொண்டதா?

வாசலில்
அமர்ந்திருந்தேன்.

முதலில் காலை வந்தது.

அரவமற்ற சாலையில்
ஓரிரு காக்கை அணில்
மரக்கிளை நாரைகள்
காக்கையை முறைத்தன.
ஒரு நாயை நான்கு
பெண் நாய்கள் விரட்டின.

ஒவ்வொரு மணித்துளியும்
கேள்வி கேட்பாரற்று விழுந்தன.

ஒரு நோய் கடந்து போனது.
பின்னே துன்பமும் அதன்
பின்னே ஒரு மரணமும்.
பின் கடவுளர் போயினர்.

தொடர்ந்து சில
சிந்தனைவாதிகள் நின்று
வாந்தி எடுத்து விட்டு நகர்ந்தனர்.
(இந்தியாவில் தெருக்கு 5 சிந்தனைவாதி)

மதியத்தை சுமந்து மீண்டும்
அதே காக்காய்கள்… நாரைகள்.
சில சிறுவர்கள் போனில்
ஏதோ பார்த்தபடி போயினர்.
(ஏதோ என்றால்…என்னவாக இருக்கும்?)

வெயில் கவ்விய மேகங்கள்
ஆவலுடன் அலைந்தபோதே
வெட்கப்பட்ட அந்தியும்
சிலிர்ப்பாய் பவனித்தது.

இளம்பெண்கள்
அடிக்கொருமுறை
மார்புகளை பார்த்துக்கொண்டு
பார்ப்பவரை பார்த்துக்கொண்டும்
கோவில்களில் ஏறியிறங்கினர்.

அந்தியை கசக்கிவிட்டு
இருள் பரவ
வீட்டுக்குள் போனேன்.

பாதி காலமாகவும்
பாதி பருவமாகவும்…

நீ இல்லையென்றால்

மெல்ல நீ நழுவுகிறாய்
என்பதை அறிந்தும்
உன்னுடன் இருக்கிறேன்…
நீ விலகிச்செல்ல
சொல்லப்போகும்
காரணங்களுக்கு…

புல் தரையில்
உடைந்த வாளியாய் நீ.
உன்னுள் திட்டமிடும் பொய்கள்
வரிசையாகிக்கொள்கின்றன.
சாத்தானின் புன்னகையுடன்
அவ்வப்போது வெளிப்படும்
ஏதேதோ கேள்விகளில்
வெறுப்பின் கரகரப்பு.

ஓய்ந்து கிடந்த மொபைலை
மூடி மூடி திறக்கும் உன்
கைகளில் படபடக்கும் மனம்.
வெளியே எட்டி எட்டி பார்க்கும்
உன் பித்துப்பிடித்த விழிகள்.

அனைத்தும் அறிந்தும்
அமைதியாய் இருக்கிறேன்.

நானும் நேற்றே
பேசிவிட்டேன்
வசந்தியிடம்.