Category Archives: இரண்டாம் தொகுப்பு

நேத்து ராத்திரி…Disclaimer: This is a work of fiction. Names, characters, places, events, locales, and incidents are either the products of the author’s imagination or used in a fictitious manner. It is not suitable for anyone under the age of 18 and may not be suitable for ALL adult readers. Read at your discretion.

               🚫🚫🚫🚫🚫🚫🚫


நீ நாக்கு போடுவியா?

அப்படினா…

யோவ்… நடிக்காதே. போடுவியா மாட்டியா? சொல்லுயா.

               ♋♋♋♋♋♋

அப்பட்டமான இந்த உரையாடலை நாம் மேலும் அவதானிக்கும் முன்பாக யார் இவர்கள் என்ற ஆர்வம் உருவாகி விடுகிறது அல்லவா?

இந்த உலகின் பிரஜைகள்தான் என்று நான் முடிவு செய்து விட்டேன். ஆனால் எங்கிருந்து யாருடன் இப்படி பேசிப்பேசி காம ஊழி நிகழ்கிறது என்பதை கணிக்க நமக்கு காலம் கூடி வர வேண்டும்.

இப்போது நீங்கள் வெறுப்பு கக்க எழுந்து போய் விடலாம்.இதை மறந்து போய் விடலாம். என்னை சபிக்கலாம். தூற்றலாம். அது உங்கள் விருப்பம்.

ஆனாலும் உலகில் இனி இப்படி பலவும் அழியாமல் இருந்து கொண்டிருக்கும்.

ஒரு மேஜைக்கு முன்னால்  கால் நீட்டி ஃப்ளெமிங்கோ மூட்டு வலி எலெக்ட்ரிக் மசாஜரை ஓடவிட்டு இடையிடையே ரெண்டு மூணு வாராந்திரி படித்து விட்டு சேனல் டப்பாவை வெறிக்க வெறிக்க பார்த்து விட்டு தனக்கு தெரிந்த நியாய தர்மங்கள் மூலம் தனக்குள் சொறிந்து கொண்ட நீதி அநீதிகளை வைத்து ஒன்றை எழுதுவது மட்டுமே சமூக அழுக்கை முற்றிலும் போக்கி விடும் என்ற ஒரே ஒரு அசட்டு நம்பிக்கையில் எழுத ஆரம்பித்து அதற்கு வேண்டிய மட்டிலும் முரட்டுத்தனமான தத்துவமுட்டு கொடுத்து எழுதி எழுதி நேர விரயம் ஆகி நரை விழுந்து பல் உதிர்ந்த பற்பல ஆண் பெண் எழுத்தாளர்கள் மத்தியில்தான்….

நம்ம ஆளு மனித நாக்கின் இன்னொரு பலாபலன் பற்றி அவள் சொல்லி தெரிந்து கொண்ட போது எனக்கும் இவர்களை பற்றி ஒன்றுமே தெரியாதுதான்.

பின்னர் விசாரிக்க முழுக்கவும் தெரிந்தது.

                ♋♋♋♋♋♋

கரப்பான்பூச்சி.

அட, பூச்சி இல்லீங்க. அது ஆண்டிராய்டு அப்ப்ளிகேஷன்.

அங்கு நீங்கள் எழுதலாம். படிக்கலாம். இலக்கியம் என்ற பெயரில் ஊர் வம்பு பேசலாம். ஒப்பாரி வைக்கலாம். ஜபிக்கலாம். சபிக்கலாம். யூட்யூபில் வரும் பேய் பிசாசு படங்களை பார்த்து அதையே குழப்பி அடித்து கதை எழுதலாம்.

மர்மம், ஹாரர், குடும்பம், சமூகம், காதல், ஜாதி மதம் என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஆபாசம் காமம் மட்டும் கூடாது.

ஏன் காமம் மனிதனின் நுட்ப உணர்வு அல்லவா? அதை பேச கூடாதா? வீட்டுக்கு வீடு பேயும் பிசாசும் பிடித்து வித்தை காட்டி கொண்டிருக்கிறார்களா அதை மட்டும் எழுதி கொண்டே இருக்க…

இப்படி எல்லாம் நாம் கேட்க கூடாது.

ஏன் எனில் அங்கே எழுதும் யாரும் அதை கேட்க மாட்டார்கள்.

ஏன் எனில் பைத்தியங்கள் தங்களுக்குள் விமரிசனம் செய்து கொள்ளாது.

ஏன் எனில்…. சரி போதும். கதைக்கு இனி செல்ல வேண்டும்.

கரப்பான்பூச்சி.

அதென்ன அப்படி ஒரு பெயர் என்று எனக்கு ஆச்சர்யம். விசாரித்ததில் தெரிந்தது இதுதான்.

Kafka எழுதிய The Metamorphosis பாதிப்பு என்றார் சிலோ.

சரி. அப்படியென்றால் monstrous vermin என்று அல்லவா இருக்க வேண்டும் என்று கேட்டேன். “போவே… உம்ம சோலிய பார்த்துக்கிட்டு சும்மா” என்றார்.

இப்போது எழுதும் இந்த ஜோடிகள் பற்றியும் நாம் பார்த்து விடலாம்.

                 ♋♋♋

ஐயாவாள் ரொம்ப பிற்போக்கு போல் காட்டிக்கொள்ளும் அதி முற்போக்குவாதி. எதனிலும் எள் என்றால் எண்ணெய். பெண்களின் சூது வாதில்லாத எல்லா துயரங்களையும் அலசி ஆராய்ந்த மேதை.

“பொம்மனாட்டிக்கு புருஷன் புள்ளங்க இதுதானப்பு உலகம். நாம சர்வ ஜாக்கிறதையா அவங்களுக்கு அதை மட்டுமே சொல்லி சொல்லி வளர்த்து ஊரில் நடப்பதை எல்லாம் காட்டி கொடுத்து அதுதான் பொழப்பு னு இன்னிக்கு வரைக்கும் நம்ப வச்சிட்டோம். பாவம்யா… இந்த பொட்ட பிள்ளைங்க” என்று சினிமா கிராமத்து பெருசு போல் ஒருவிதமான செருமலோடு தன் அங்கலாய்ப்பை வெளியிடுவார்.

அவர் கதை கவிதை அனைத்திலும் இந்த கருத்தாழம் அப்படியே மின்னி மின்னி ஒளிரும். பற்றி எரியும். மாமியாரை சாவடிக்கும் வார்த்தைகளை வீசி குமுறிவிட்டு இங்கே வரும் சில பெண்கள் அவர் வேட்டி நுனியால் கண்களை துடைத்து கொள்வதும்… அருமை போடுவதும்… என்ன ஒரு காட்சி அது.

உண்மையில் களத்து மேட்டு வரப்பு பெண்களை எப்படி கையாள வேண்டும். “வி ஆர் எக்ஸிக்யூடிவ்ஸ்” என்று டாப் அதிர துள்ளும் மார்டன் பனியன் கேர்ள்ஸை எப்படி கையாள வேண்டும் என்பது எல்லாம் அத்துப்படி.

அவர்… தான் எழுதுவதே அதுக்குத்தான் என்பார்.

ஏங்க இப்படி என்றால்…ஒரு தெய்வீக சிரிப்பு மட்டுமே அவரிடம் இருந்து வரும்.

இப்போ அம்மணியை பார்க்கலாம்.

                   ♋♋♋♋♋♋

இந்த அம்மணி மார்டன் கேர்ள் வகையறா. படு முற்போக்கு போல் காட்டிக்கொண்டு ஆக பிற்போக்காய் வாழ்ந்து வரும் அசகாய சூரர்.

டின் பீர் அடிப்பாரா என்பது  பற்றி எனக்கு தெரியவில்லை. அவரிடம் கேட்டால் கள்ள சாராயமே குடிப்பேன் என்று சொல்லி ஆளை அசர அடிப்பார் என்பதால் நான் அதிகம் கேட்கவில்லை.

இவரின் ஆணாதிக்க சமூகத்தின் மீதான எதிர்ப்பு பார்வை எல்லாம் ரொம்ப அதிகமாய் போனால் தொடை தெரிய ட்ராயர் போட்டு தள்ளு வண்டிக்காரனிடம் கத்திரிக்கா மிளகாய் வாங்குவது மட்டும்தான். அப்போதும் அம்மா மாடியில் இருந்து பார்ப்பார்.

இவர் எழுதியது சில சப்பையான காதல் கவிதைகள் எழுதிய கையோடு பின் வழக்கம்போல் குடும்ப பிரச்சனை கதை சில ஓரின சேர்க்கை கதை அவ்வளவு மட்டுமே. அதையும் மாறுவேடம் போட்டு புனை பெயர் இணை பெயர் வைத்து ஒரு ரெண்டுக்கு நாலு அடி ரூமில் அமர்ந்து இன்டர்நெட்டை மேய் மேய் என்று மேய்ந்து மனம் போன போக்கில் எழுதி குருட்டு ஆட்டம் ஆடி இஸ்திரி போட்டு பதிப்பித்த உடன் வந்து சேருவார்கள் வாசகர்கள்.
அங்கே சகோ சகோ என்று கொஞ்சும் காட்சிகள் வேறு.

அந்த புரச்சி எழுத்தாலினியிடம் உங்கள் கூட பிறந்த சகோக்கும் இதே கதைகளை சொல்வீர்களா என்று கேட்க நினைத்தேன். பிளாக் செய்து ஓடி விட்டார்.

இதில் என்ன குறை கண்டாய் என்று நீங்கள் கேட்பதுபோலவே நானும் என்னிடமே கேட்டு கொண்டேன்.

குறைகளே இல்லாத இந்த நாட்டு நடப்பு நிகழ்வுகளில் ஏன் இப்படி குறைகள் கொண்டாடுகின்றனர் என்பதுதான் என் குறை. வேறொன்றறியேன் பராபரமே.

இப்ப ரெண்டு பேரும் அங்கே என்ன எப்படி எழுதராங்கன்னு பார்க்கலாம்.

                   ♋♋♋

முதலில் ஐயாவாள்…

நம்ம ஐயாவாள் ஒரு லட்சியவாதி. ஆனா இந்த சமூகம் அப்படி அவரை வாழ்நாள் முழுக்க இருக்க விடவில்லை அப்டிங்கறது அவரோட நீண்டநாள் ஆனால் ஒருபோதும் தீரவே தீராத பெரிய மனக்குறை.

அவருக்கு ஊரோடு ஒத்தும் வாழ முடியலை. ஊருக்கு வெளியில் போகவும் நேரம் வாய்க்கலை. கரப்பாம்பூச்சியில் எழுதிட்டே இருந்தார். அப்போது அங்கே அவர் ரொம்ப நிம்மதியா இருந்தார்.

ஒண்ணை எழுதி போட்டுட்டு கேக்கிறவங்களுக்கு கெத்தா விளக்கம் கொடுப்பார்.

பின் மாலையில் வாக்கிங் போகும்போது அவர் ஊருக்குள் பொறிகடலைக்காரன்ல ஆரம்பிச்சு லயன்ஸ் கிளப் வரைக்கும் ஒரு பயலை விடாம எல்லோர்கிட்டையும் நான் இன்டர்நெட்ல பெரிய ரைட்டர் னு காலர் தூக்கி பந்தா பண்ணிட்டு…

அந்த காலம் உண்மையில் கிக்கா நல்லா இருந்துச்சு. ஆனாலும் அவருக்கு மனதில் எதுவோ உறுத்தியபடி இருந்தது.

சும்மா பாவ்லா பண்றவங்க கூடவே இருந்து நாமும் அப்படியே மாறி விட்டோம் என்று தோன்றியது.

உடனே நடையை தொனியை மாத்திக்கிட்டார். போங்கடா நீங்களும் உங்க லைஃக்ஸும் னு ஒருபாடா நின்னப்பதான் ஆளுக்கு மூச்சே வந்துச்சு.

மறுபடி தனக்குத்தானே சொல்லிக்கிட்டார் நான் எப்பவும் நான்தான் னு. கொஞ்சம் நிம்மதியா பீல் பண்ணிட்டு வெளிநாட்டுக்கு இலக்கியம் படிக்க போய்ட்டார்.

இன்டெர்நெட் மூலம்தான். பாஸ்போர்ட் விசா எல்லாம் அதுக்கு எதுக்கு? தள்ளுபடியில் ஜிபி கிடைக்குதே.

அங்கே ஆணும் பெண்ணும் வரிஞ்சு கட்டிட்டு வரிஞ்சு காட்டிட்டு எழுதரதை பார்த்ததும் அதுக்குள்ள தென்படும் ஒரு சமூக நோக்கம், நல்லிணக்கம், மதவாத ஒழிப்பு, பெண்ணுரிமை, போதும் போதுங்க பெண் விடுதலை எல்லாம் தேவைக்கு மேலேயே இருப்பதை பார்த்ததும் ஐயாவாளுக்கு மோட்ஷமே கிடைச்ச திருப்தி. ஆனா நாம இதை நம்ம நாட்ல கரப்பான்பூச்சியில் அப்படியே உரிச்சு சொல்ல முடியுமா…

சொல்ல முடியும். சொல்லலாம். சொல்லியே ஆகணும்னுதான் இன்னிக்கு நாட்டு நடப்பும் இருந்தது.

ஐயாவாள் பேனாவை தீட்டிக்கொண்டு ராவும் பகலுமாய் மன்மதன் போல் காம இந்திரியங்களை குறித்தும் அதில் படிந்து குவிந்து போன இரண்டாயிரம் வருட அடிமைத்தனம், ஜாதி மதம், பொய் பித்தலாட்டம், சொத்துடமை (ஃபியூடலிஸம்) , பெண்ணடிமை, ஊழல், மனவசியம், மனோதைரிய  நோய்கள்
எல்லாமும் கலந்து கட்டி ராவாக வாசக சிகாமணிகளுக்கு வாரி வழங்கினார்.

அடிச்ச மணி மாந்தர்களுக்கு கேட்டதோ இல்லையோ அதை ரகசியமாக வாசிக்க காதும் காதும் வைத்தாற்போல் மங்கையர் மலர்கள் பூத்து பூத்து குவிந்தனர்.

                   ♋♋♋

இப்போ அம்மணியை பார்க்கலாம்.

இந்த அம்மணிக்கு முன்னால் இன்னும் வேறு சில அம்மணிகள் ஐயாவாள் வாழ்வில் குறுக்கிட்டு மின்னி மறைந்து தொலைந்து போயே போய் விட்டார்கள்.

அப்படி தொலைந்து போகும் அந்தநாள் வரும்போது  பிரிவு உபச்சார விழாவில் அம்மணிகள் “ரெண்டுக்கு நாலு வாட்டி என்னை நினச்சு கையடிச்சு விட்டீங்கனா நெனப்பு போய்டும்” என்ற எளிய கை வைத்திய குறிப்பும் நல்கி விடுவார்கள்.

எல்லா அம்மணிகளுக்கும் ஒரே ஒற்றுமை திருமணம் முடிந்தவர்கள். குறைந்தது ரெண்டு மூன்று பிள்ளைகள் கூட உண்டு.

இவர்கள் ஏன் இப்படி வந்தார்கள் பின் சென்றார்கள் என்று ஐயாவாளிடம் கேட்டால் பந்தாடி விடுவார்.

அவர்கள் மனதில் இருக்கும் கலை பசியை காமப்பசியாக்கிய இந்த சமூக அவலங்களை பிய்த்து தோலுரித்து தொங்க விடுவார்.

“அப்புச்சி, என்ன இருந்தாலும் இன்னிக்கி ரவைக்கு அந்த பழைய பணியாரத்தில் யாரோதானே களி கிண்ட போறாங்க” என்ற ஐயாவாளுக்கு நாம் யதார்த்தமாக நினைப்பூட்டினால் பாவம் அவரால் தாங்கவே முடியாது.

அவர்களை விட்டு விடுவோம். இந்த அம்மணியை பார்க்கலாம். இவர் ரொம்ப ஸ்பெஷல். இருட்டுக்கடை அல்வா.

இவர் எழுத வந்த காலத்தில் வழக்கம் போலவே பூ, புஸ்பம், மலம்புழா டேம், சப்த கன்னிகை படமெல்லாம் தனது dp என்று போட்டு கதை, கவிதை எல்லாம் ஆக்கி கொண்டிருந்தார்.

வாயில் நுழையாத புனைபெயர் வேறு. இருந்தும் அம்மணியால் லைக்ஸ் வாங்கி அங்கே கல்லா கட்ட முடியவில்லை.

இதற்கு முன்பே ஒரு சூரப்புலி பெண் எழுத்தாளர் வழக்கமான ஓல்ட் டேடேட் குடும்ப மசாலாவை இருபது அத்தியாயம் அரை அரையென அரைத்தும் எதிர்பார்த்த லைக்ஸ் வருகை இல்லை.

ஒருநாள் தனது தொப்புளில் வளையம் தெரிய படம் ஒன்றை தன் dp’ யாக போட்டதும் கரப்பான்பூச்சியில் டி ஆர் பி எகிறி விட்டது.

சந்தடி சாக்கில் அந்த அம்மணி தன் சொந்த பிளாக்கை வலுப்படுத்தி கொண்டு “அம்ரிக்காவில் கூப்பிட்டாக அமேசானில் கூப்பிட்டாக” என்று சிட்டாய் பறந்து விட்டார்.

வாசக புலிகள் வாயில் விரல் வைத்து சூப்பி கொண்டா இருப்பார்கள். நம் புதிய சூரப்புலியிடம் வந்து சேர்ந்தனர்.

அம்மணிக்கு மேலே மூடி இருந்த ட்ரான்ஸ்ப்ரெண்ட் புடைவைக்குள் இருந்து காலே அரைக்கால் மார்பு தெரியும் படம் dp’யாக ஆனதும் டி ஆர் பி துள்ளி துள்ளி எகிறி விழுந்தது.

பிறகு கேட்பானேன் வாசக உள்ளங்களை.

அம்மணி எழுதுவது இது தொடர் கதைதான் என்று நினைக்கும் போதே சிறுகதை போலவே இருக்கும். சிறுகதை என்று நம்பினால் அது அப்படியே நாடகம் ஆகிவிடும்.

யாரோ வருவார்கள். யாரோ போவார்கள்.. யார் வந்து என்ன சொல்ல போகிறார் என்று நினைக்கும்போதே யாரோ வந்து என்னவோ சொல்லி குழப்பி விடுவார்கள்.

இப்படியெல்லாம் பல்வேறு மாந்த்ரீக யாதர்த்தவாதம், மாய யதார்த்தவாதம், சரியலிசம் தாதாயிஸம் புளுக்கு விட்டான் இஸம் எல்லாம் கலந்து கட்டி ஊசிப்போன பழைய கட்டுசோற்று கூடையை  படிப்போர் தலையில் கவிழ்த்து விடுவார். கதை எங்கும் யாரோ யாருக்கோ முத்தம் கொடுத்து கொண்டே இருப்பார்கள்.

இது என்ன? இறுதியில் என்ன சொல்ல போகிறார்? என்று நாம் தலையை பிய்த்துக்கொண்டு நிற்கும்போதுதான் மாசிலா வாசக மணிகள் புதிது புதிதாய் அங்கே வந்து விமரிசிப்பர்.
அந்த கதைக்கு செம லீடு கொடுக்கிறார்களாம்.

அதையும் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து நாமும் படிக்கும் போது இந்த பைத்தியங்களுக்கு யார் வோட்டுரிமை கொடுத்தது என்று கேட்டால் நம் மீது சட்டம் பாயும். குற்றம் ஆகும்.

சரி. இப்படி ஏதோ ஒரு சிற்றின்பத்தில் இந்த உலகம் திளைப்பதில் என்ன குடியா முழுகி விடும்? கொரோனா வந்ததால் இனி இதில் கூட மண் விழலாம்.

நாம் வந்த வேலையை பார்க்கலாம்.

                     ♋♋♋♋♋♋

நம் ஐயாவாள் பரம யோக்கியர். அவராக யாரிடமும் செல்ல மாட்டார். நம் அம்மணி ஆசாமியை துரத்தி துரத்தி வந்தார்.

ஸார் மேடம் என்பது நீங்க வாங்க என்னங்க என்று மாறி பின்னர் நீ, வாடி என்று சுருங்கி யோவ் ஓய் என்று மாறியதும் இருவரும் மனதளவில் நெகிழ்ந்து அந்நியோன்னியமாக  மாறி இருந்தனர்.

அம்மணி, “என்னைப்பத்தி எழுதுவியா? என் பேர் போட்டு எழுதுவியா” என்றாரே பார்க்கலாம். ஐயாவாள் ஆடி விட்டார்.

ஐயாவாள் இன்டர்நெட்டில் அரைகுறை ஆங்கிலத்தில் எழுத்துக்கூட்டி படிச்ச பம்பரக்கதைகள் எல்லாம் இன்றைய பொடிசுகள் மதிக்கவே இல்லை.

அவர்களுக்கு ரொம்ப ராவான பட்டை தேவைப்பட்டது. ஐயாவாளுக்கோ அப்படி எழுத கூச்சம் பிடுங்கி தின்றது. ஆனது ஆகட்டும் இதிலும் அரசியல் பண்ணி விடலாம் என்றே முடிவு செய்திருந்தார்.

அம்மணி எழுத அப்பப்போ நிறைய டிப்ஸ் கொடுத்தார். ஐயாவாள் சந்தேகமாக கேட்ட எந்த ஒன்றையும் அம்மணி படு ப்ராக்டிக்கலாய் சிதறுகாய் அடித்தார்.

திருமணம் ஆகாத ஐயாவாள் திருமதி எழுத்தாளரிடம் இப்படித்தான் பாடம் படிக்க ஆரம்பித்தார்.

நீங்கள் வாத்ஸ்யாயனாரின் காமசூத்ராவில் எழுபத்தி எட்டாவது ஸ்லோகம் படித்தீரென்றால் என்று ஐயாவாள் ஆரம்பிக்கும்போதே “ஐய, அத்தை படிச்சா மூடே வர மாட்டங்குது. எனக்கு நேபாள் பிட் படம் அனுப்பிரியலா” என்று திக்கு முக்காட வைத்தார்.

ஐயாவாள் குளிர்ந்து போய் சுய இன்பம் செய்வது பற்றி என்று ஆரம்பிக்க அம்மணி கேரட்டா கத்திரிக்காயா இல்ல தக்காளியா நான் சீசா பாட்டிலே போட்டிருக்கேன் ஒண்ணும் ஆவலை என்று அம்மணி முடித்தபோது ஐயாவாளுக்கு வேர்த்து விட்டது.

என்ன தடை வந்தாலும் அம்மணியை எப்படியாவது கொக்கோகத்தில் வீழ்த்திவிட வேண்டுமென்று சபதம் எடுத்து கொண்டபின் ஐயாவாளுக்கு தூக்கம் இன்றி போனது.

ஒருநாள் நள்ளிரவில் கண் கண்ட கணவனை துயிலில் ஆழ்த்தியபின் அம்மணி வெறி கொண்ட வேங்கையாய் உரிந்து நின்ற பல படங்கள் ஐயாவாளின் மொபைலுக்கு வந்து அடைந்தது.

பல கோணங்களில் மேலும் கீழுமாக வண்ண வண்ண காட்சிகள் வந்தன. ஐயாவாள் பொறுமையாக பார்த்துவிட்டு ஒன்றன் பின் ஒன்றை அழித்து முடித்தார்.

எப்படி இருந்திச்சி

சூப்பர்.

வேற வேணுமா?

ஒரு குளிக்கிற சீன் கிடைக்குமா?

அது கஷ்டம்.

சரி விரலை உள்ளே விட்டு ஒண்ணு போடு.

அது நுழையாது.

ஏண்டி… நீதான் பாட்டில் குதிரை நீக்ரோ எல்லாம் கேப்பியே. உன் விரல் உள்ளே போவாதா?

அவரு எனக்கு செஞ்சு ரெண்டு மாசத்துக்கு மேலே ஆச்சு.

ஸோ…

அது இப்ப புது பொண்ணுக்கு இருக்கிற மாதிரி டைட்டா இருக்கும்.

ஐயாவாளுக்கு அடுத்த மூவ் எப்படி என்று தெரியவில்லை. அப்போதுதான் அம்மணி கேட்டாள்…

யோவ்… நீ நாக்கு போடுவியா?

                    ♋♋♋

இப்படி கேட்டதும் நம் ஐயாவாளுக்கு ரொம்ப கஷ்டமாக போய் விட்டது. என்ன இருந்தாலும் சமூகத்தை எழுத்தால் எண்ணத்தால் உய்விக்க வந்த பெருமகன், போயும் போயும் இப்படி ஒரு மனித உடலில் இருக்கும் பாத்ரூம் சமாச்சாரத்தில் தடுமாறுவதா என்று மனம் கலங்கி போய் விட்டார்.

என்ன தவறு? காமசூத்ரா கொக்கோகம் எல்லாம் அதை கலை என்று பாடிப்பாடி பரவசம் அடைந்து இருக்கிறதே.

ஐயாவாள் வெட்கத்தை விட்டு கேட்டார்.

அப்படினா…

போய்யா… என் எக்ஸ் அங்கே பால் தயிர் தேன் எல்லாம் விட்டு எப்படி செய்வான் தெரியுமா?

இத்தனையுமா? அது என்ன பிரிட்ஜா என்று கேட்க நினைத்து வாயை மூடிக்கொண்டார்.

பின் அவர் ஆண்மை அம்மணி தரும் மறு மொழியில் சிக்கி சிதறி சிதிலமாகிவிடும்.

அன்று நள்ளிரவில் இருவருக்கும் மொபைல் மூலம் காம ஊழி ஒரு வழியாய் முடிந்த போது ஐயாவாள் “எனக்கு ஆச்சு உனக்கு” என்றார்… நள்ளிரவில் ஹார்லிக்ஸ் கேக்கும் குழந்தையாய்.

எனக்கு மூத்திரம்தான் வருது. போய்யா. போய் தூங்கு. அம்மணி போய் விட்டார்.

                    ♋♋♋

ஒரு வாரம் எந்த பேச்சும் இல்லை.

அம்மணி தொடர்கதை மற்றும் சிறுகதை என்று எழுதுவதில் மூழ்கிப்போனார்.

வழக்கம்போல் காதல் கதை. அதில் சமூக மாற்றம் புரட்சி பெண் விடுதலை ஓங்குக எல்லாம் மாறி மாறி வந்து விழுந்தது.

எங்கேயாவது ஜாடை மாடையாய் தன்னை அம்மணி குறிக்கிறாரா அதில் ஏதேனும் விரகதாபமும் காமமும் மோகமும் கொந்தளிக்கிறதா என்று அசைத்து அசைத்து ஐயாவாள் படித்தார்.

அம்மணி அவரை சீந்தவே இல்லை.

ஐயாவாளுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. ஒரு முறை தனக்கு பழைய அம்மணிகள் கொடுத்த ஐடியாவை பின்பற்றி கற்பனையில் ஒரு கட்டிலை உடைக்கலாமா என்று நினைத்து பின் அந்த யோசனையை நிராகரித்தார்.

பொறுமையாக இருப்போம் என்று ஒரு பெருமூச்சை விட்டு மீண்டும் “ஒலக இலக்கியம்” படிக்க ஏகினார்.

அம்மணி பிடி கொடுக்கவில்லை.

மாறாக அவர் கதைக்கு பொம்மை படம் பார்க்கும் விசிலடிச்சான் குஞ்சுகள் பாராட்டுகளை அள்ளி அள்ளி வீசிக்கொண்டிருந்தன. ஐயாவாளுக்கு இந்த போக்கில் கொஞ்சம் பயம் வந்து விட்டது.

ஏற்கனவே அம்மணி இணைய உலகில் இருக்கும் அநேக விதமான சமூக தளங்களிலும் மாறி மாறி கலைச்சேவை புரிந்து கொண்டிருக்கிறார் என்பதும் அம்மணியின் ஒரே ஆதர்சம் ஹிருத்திக் ரோஷன் என்பதுமே அந்த பயம்.

அம்மணி இருக்கும் ஊரில் வாட்ட சாட்டமான பையன்களுக்கு எந்த குறையும் இல்லை. ஐயாவாள் அறுபது கிலோ இருந்தும் படு நோஞ்சான். என்ன செய்தும் “மஸில்ஸ்” ஏறவே இல்லை.

தன் ஒல்லியான அந்த கையை பிடித்து பிடித்து பார்த்தார் ஐயாவாள். தலையை உதறிக்கொண்டார்.

சே. என்ன நாடு இது. காமத்தை கொண்டாட எத்தனை சிக்கல்கள். எத்தனை அவஸ்தைகள். இதற்கெல்லாம் இட ஒதுக்கீடு வரக்கூடாதா என்றெல்லாம் சிந்தித்து கொண்டே இருந்தார்.

அம்மணி கூட ஒரு முறை சொல்லி வருந்தினாள். “அவரு ராவுல என்னை செய்யும்போது நான் வேற யாரையாச்சும் நினைச்சிட்டுதான் இருப்பேன். விவரமில்லாதைக்கி அவரு பாட்டுக்கு என்னை குத்திட்டு இருப்பாரு”.

ஐயாவாள் அங்கேயே எடுத்தார் நியோ ஃப்ராய்டிய அஸ்திரத்தை. மனிதகுலம் எத்தனை நூற்றாண்டுகளாக இதை நுட்பமாக செயல் புரிந்து வந்திருக்கிறது என்பதை கரிசனத்துடன் எடுத்துக்கூறி இதனால் அதில் எந்த தவறும் இல்லை என்று பேருரையை முடித்தார்.

பின் என்ன நினைத்தாரோ “அடுத்தவாட்டி அப்படி செய்யும்போது என்னையும் நினைச்சுக்க” என்றார்.

பின் இன்னும் ஒரு முன் யோசனை வர “நாளைக்கி  காலேல நீ குளிக்கும்போது சோப்பு போடுவே இல்ல. அப்பவும் என்னை நினச்சு கழுத்துக்கு கீழ நல்லா ரெண்டு பக்கமும் தேய்ச்சுக்க” என்றார்.

அம்மணி அன்று ரிப்ளை தரவில்லை.

                   ♋♋♋

அந்த வேலை இந்த வேலை என்று ஒரு வாரம் முழுமையாக இருவருக்கும் ஓடி விட்டது. காலம் சென்றது.

அம்மணி வரவேயில்லை. அவரின் வாட்ஸாப் ஸ்டேட்டஸில் தெய்வப்படங்கள் அருள் பாலிக்க ஆரம்பித்த போது ஐயாவாள் வயிற்றில் புளியை கரைத்தது.

இது சரி இல்லை என்று தோன்றியது. பட்சி பறந்து விட்டது என்பது புரிந்தது.
இணையத்தின் தேடுபொறியில் நோண்டி கொண்டிருக்கும்போது புகழ் வாய்ந்த சில பழைய உள்ளூர் கவிதாயினிகளின் மர்மப்படங்களும் அவர்களின் அந்தரங்க சேட்டைகள் பற்றிய கட்டுரைகளும் சிக்கின. அம்மணிக்கு இதை ஒரு லிங்க் அனுப்பி விட்டு பதிலுக்கு காத்திருந்தார்.

பதில் வரவில்லை.

ஐயாவாள் ஒரு டாப் கிளாஸ் பிட் படத்தை ஒரு கல்லூரி பேராசிரியர் மூலம் வாங்கி வைத்திருந்தார். அதை அம்மணிக்கு அனுப்பியபோது கொஞ்சம் வேலை செய்தது.

“எனக்கு தைவான் படம் பிடிக்கும்” என்ற பதில் வந்ததும் ஐயாவாள் ஊர்ப்பட்ட வி.பி.என் களை டவுன்லோட் செய்து பார்த்தாலே நிலை குலைய வைக்கும் படங்களை லாவிக்கொண்டு வந்தார்.

ஒன்றொன்றாய் அனுப்பினார். முதலில் நன்றாக இருந்த அந்த உறவு பின் மீண்டும் காரணமின்றி மாறியது.
வசீகர தொடர்பு முற்றிலும் அறுந்து போனது.

ஐயாவாள் பழைய அம்மணிகளின் யோசனைப்படி மனநோய் மருத்துவத்தை ரெண்டுக்கு நான்கு முறை தனக்கு தானே செய்து கொண்டதும் கொஞ்சம் ஆசுவாசமாய் இருந்ததாக தோன்றியது.

ஐயாவாள் இப்போது முற்போக்கு முகமூடியை மாட்டிக்கொள்ள அம்மணி குடும்ப விளக்காய் மாறி பின் பிற்போக்கு முகமூடியை மாட்டி கொண்டார்.

இருவரும் தத்தம் பாதையில் பிரிந்து சென்று மீண்டும் கரப்பான்பூச்சியில் எழுத ஆரம்பித்து விட்டனர் என்று கேள்வி.

வாசக சிகாமணிகள் இந்த இருவரையும் இன்னும் கொண்டாடி ஆடி பாடி வருகிறார்கள். நான் அதை பார்த்து ரசித்து கொண்டிருக்கிறேன் என்று சிலோ இந்த கதையை முடித்தார்.

அம்மணிக்கு ஹ்ருதிக் ரோஷன் பிடிக்கும். முயற்சிக்க விரும்புவோர் முயற்சி செய்யலாம். ஐயாவாள் கொஞ்சம் ஓய்ந்து போய் இருக்கிறார். கொஞ்ச காலம் கழித்து அவரை விரும்புவோர் தொடர்பு கொள்ளலாம்.

               🌹🌹🌹🌹🌹🌹

ஜிகுஜிக்கான்ஞ் ஜிகுஜிக்கான்ஞ் ஜிக்கான்… ஜிக்கு…

(குறிப்பு: இந்த கதையை எழுதி மணிவேல் என்னிடம் கொடுத்து என் பெயரில் போட்டு கொள்ள அனுமதித்தான். இனி கதை.)

         🎵 🎵 🎵 🎵 🎵

பள்ளிப்பிராயத்தில் இந்த ஜிக்கு பாடல் மிகவும் பிரபலமாக இருந்தது.

இவை 1980களில்…

எனக்கு அப்போது இளையராஜா பாடல்கள் கூட புரியாத ஒற்றைப்படை வயது. ஆனால் இந்த சந்த வரிகள் மட்டும் மனதில் சுகமாய் நின்று பரவியது.

இந்த வரிகள் முடிந்து ஒரு அழகான தெம்மாங்கு பாடல் கிளம்பி வரும். இன்று யோசித்தால் அது என்ன பாடல் என மனதில் தோன்றவில்லை. அன்றொடு அது எனக்கு மறந்தும் போனது.

காரணம் உண்டு.

எண்பதுகளில் இந்த ஸ்வரத்துக்கு அப்பால் (?) வேறு புனை பாடல்கள் அசை மாறாது வந்தன. அந்த வரிகளை அப்படியே இங்கு நான் எழுத முடியாது.

அப்போது ராதா அம்பிகா ஸ்ரீப்ரியா ஸ்ரீதேவி அனைவரும் பூப்போட்ட லுங்கி கட்டி சார்மினார் ஊதிக்கொண்டிருந்த இளவட்டங்களை தங்கள் கட்டுக்குள் வைத்து மயக்கி இருந்தனர்.

இந்த நடிக நடிகையர் பெயரை வரிகளில் சொருகி கண் சொக்கினர். மேலும் அன்றைய அரசியல்வாதிகளுக்கும் தலா ரெண்டு பாட்டுக்கள் வீதம் இந்த ஜிக்கு ஜிம்கானாக்கள் ஊரில் உலா வந்தன.

வீட்டில் நானும் வாய் விட்டு இந்த ஸ்வரம் போட்டு அதன் பின்னால் வரும் வரிகளை மனதுக்குள் பாடி பரவசம் கொள்வேன்.

அப்போது நான் ஆம்பிளை அல்ல.

எண்பது கடைசிகளில் வசனமே புரியாத படத்துக்கு நண்பர்களோடு போகும் போதுதான் இந்த பாடலின் வரிகள் அரசல் புரசலாக புரிய ஆரம்பித்தது.

ஒரு இங்கிலிஷ் படம் பார்த்து விட்டு வந்தபோது ஒரு பெரிய மௌனம் எங்களிடம் கொதித்து கிடந்தது.

மணிவேல்தான் சொன்னான்…
“வெள்ளைக்காரிக்கு சோப் ரொம்ப செலவாகும் போல் இருக்குடா”…

அப்போதுதான் நான் வாய் விட்டு விஸிலோடு பாட ஆரம்பித்தேன். இட்டுக்கட்டிய அந்த பாடலின் ஸ்வரம் ஜிகுஜிக்கான்ஞ் ஜிகுஜிக்கான்ஞ்….

இப்படித்தான் கவிதை எழுத ஆரம்பித்து இருப்பேன் என்று நினைக்கிறேன்.

ஒருநாள் அந்த தியேட்டர் ஆப்ரேட்டர் “என்னிடம் தம்பி வோணும்னா ஒரு சீசன் டிக்கெட் எடுத்து வச்சிக்க” என்று பரிவாய் நக்கலாய் சொன்ன போதும் சிரித்து கொண்டுதான் நின்றேன். அவ்வளவு ஆரோக்கியமாக இருந்தோம்.

அந்த காலத்தில் இரவில் புருஷன்கள் காதலிக்கும் போது மனைவியிடம் இந்த பாடல்கள் பாடுவார்கள் என்று தங்கம் ஒருநாள் என்னிடம் சொன்னாள்.

சகலகலா வல்லவன் படத்தை நாங்கள் இருவரும் பக்கத்து பக்கத்தில் உட்கார்ந்து பார்த்தவர்கள். எங்களை குழந்தைகள் என்று ரெண்டு குடும்பமும் நம்பியது. நாங்கள் அப்படித்தான் இருந்தோம். இருந்தாலும் எங்களுக்குள் என்னமோ இருந்தது.

அப்பறம் என்ன ஆவும்? என்று நான் அவளிடம் கேட்ட நினைவு நன்றாக இருக்கிறது. தங்கம் அதன் பின் பேசவில்லை. பெரியவள் ஆகி விட்டாளாம்.

அவள் ஜாதி வழக்கப்படி சடங்கு சுத்த என்னை கூப்பிட்டு கையில் ரெண்டு எள்ளு உருண்டை கொடுத்து அனுப்பி விட்டார்கள்.

இப்போது இரண்டு கல்யாணம் முடித்துவிட்டு திருப்பூர் பக்கம் டீக்கடை போட்டு இருக்கிறாள் என்று கேள்வி.

இந்த ஆய்வுகளில் அதென்ன வெட்கம் மானம் என்றெல்லாம் சொல்வார்களே அது எனக்கு கிடையாது. அப்படியே சூடு, சுரணையும் சேர்த்துதான் சொல்கிறேன்.

தொண்ணூறுகளில் வேலைக்கு போகும்போது எனது நட்பு வட்டாரம் படை போல் இருந்தது.

அந்த கூட்டத்தில் உற்சாகம் மிகும்போது பாடல் ஒன்றை நான் இந்த மெட்டில் இட்டு கட்டுவேன். கூட்டம் மெய் சிலிர்க்கும்.

அவரவர் விட்டுப்போன காதலியின் நினைவில் இந்த இசை வசையாய் மாறி பீரில் நுரைத்து விஸ்கியில் கொந்தளித்து உளறலில் பிணைந்து கண்ணீராய் கொட்டினால்… மறுநாள் பொழுது விடிந்திருக்கும்.

ஒவ்வொரு நாளும் பொழுது விடிந்ததே தவிர எங்கள் வாழ்க்கை ஒருபோதும் விடியவில்லை.

தொழில் சரிந்தால் அரசியல் சரி இல்லை. அரசியல் சரிந்தால் ஊழல் பெருகிற்று. விலை ஏறியது போல் வேலை கிடைக்கவில்லை. ஒன்றுக்கு ஒன்று காரணம் சரியாய் இருந்தது. ஜாதி கலவரம் உள்ளூரில் ஒரு பொழுது போக்காகவே மாறியது.

அப்போது பல முதலாளிகள் ரத்த வெறியுடன் அலைந்த காலம். ஒவ்வொரு ஓநாயிடமும் விஷயமுள்ள நூறு நூறு ஆட்டுக்குட்டிகள் இருந்தன.

தேர்தல் மட்டும் தப்பாது வந்தது. இந்தியா உலகமயமாக்கலில் தன்னை ஈடுபடுத்தி கொண்டதும் கம்யூனிஸ்ட் மட்டும் எதிர்குரல் கொடுத்து கொண்டே அடுத்த தேர்தலில் காங்கிரசோடு இணைந்தனர்.

எல்லாம் முடிந்தது. காலம் மாறின.

          🖥️🖥️🖥️🖥️🖥️

கம்ப்யூட்டர் வந்ததும் தியேட்டர்களில் பதினோரு மணி காட்சி நின்று போனது. எம்ஜியார் இருந்த போது இந்த பிரச்சனை இல்லை சாராயமும் செக்ஸ் படமும் தாராளமாய் இருந்தது என்று பெருசுகள் புலம்பின. எம்ஜியாரோடு அவர்களும் நிம்மதியாக போய் சேர்ந்தார்கள்.

இப்போதும் டிவியில் பழைய எம்ஜியார் படம் பார்க்கும் போது பாடல் காட்சிகளில் அவர் தன் முழங்கையால் நடிகைகளின் முலையை உரசும் காட்சிகளில் காலமான எங்களூர் பெருசுகள் காம வேதனை முகத்தில் அறைவது போல் வந்து போகும்.

அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

இன்டர்நெட் வந்தது. கூகிள் கேட்டதெல்லாம் கொட்டும் என்றார்கள்.

திரையில் பெருக்கல் குறியில் மௌஸின் அம்புகுறியை ரெடியாய் வைத்து கொண்டு அலுவலகத்திலும் வீட்டிலும் இந்திய ஆண்களும் பெண்களும் ஒளிந்து ஒளிந்து வெள்ளைக்காரிகளும் சேச்சிகளும் இனச்சேர்க்கையில் துன்புறும் பிரேம வேட்டையை பயந்து பயந்து அரைக்கண்ணால் ஓரக்கண்ணால் கடைக்கண்ணால் பார்த்து பார்த்து அவஸ்தைப்பட்டபோது ஸ்மார்ட் மொபைல் போனும் வந்தது.

மொபைல் வந்தபோது நான்
அரைக்கிழவனாகி விட்டேன் என்றதால் நரை பூக்க ஆரம்பித்து விட்டதால் போனில் அடிக்கடி பேட்டரி வாட ஆரம்பித்ததால் இந்த உலகம் நாசமாய் போகட்டும் என்ற ஒரு சாபத்தை கையால் ஆகாத மற்றவர்கள் போலவே வழக்கம் போல வழங்கி விட்டு அந்த சப்ஜெக்ட்டில் இருந்து வெளியேறினேன்.

இன்டர்நெட் ஜித்தர்கள் பலரும்
20kids என்று ஒன்றை நெட்டில் கிளப்பி விட்டு அவர்களை பற்றி இந்த மீம்ஸ்காரன் மட்டுமே கவலைப்படுவது போலவும் ஒரு பிம்பம் உண்டாக்கி உருவாக்கி பரப்பியும் வைத்தனர்.

அப்போதுதான் இந்த வாட்ஸாப் வந்தது.

அந்த காலத்து பிட் படமெல்லாம் பிச்சை வாங்கும் அளவு இதில் உலக விஷயங்கள் அரங்கேற ஆரம்பித்தது என்றார்கள்.

மீசை நரைத்தாலும்…. எனவே நான்…

காமாட்சியை நாடினேன். அவனுக்கு ஏதேதோ க்ரூப்பில் இருந்து 2K தரத்தில் ஒளிர ஒளிர வெள்ளைக்காரிகள் சேஷ்டை செய்து காண்பித்தனர்.

எனக்கும் அவனே வாட்ஸப் பொறுத்தி கொடுத்து ரெண்டு குட்டிகளை இலவசமாய் அனுப்பியும் விட்டான்.

முதலில் அவன் dp யைத்தான் பார்த்தேன். தூக்கி வாரி போட்டது எனக்கு.

ஒரு சிவனை ஏறத்தாழ ஆலிங்கனம் செய்து கொண்டு நவீன நசிகேதனாய் ஒரு போஸ் கொடுத்து இருந்தான்.

போன் செய்து இது நியாயமா என்றேன்.

கல்யாணம் ஆயிடுச்சு மணி. உனக்கு ஆவலை. இப்படி சாமி பாப்பா குடும்ப போட்டோ வச்சா பொண்டாட்டிக்கு சந்தேகம் எப்பவும் வராது. சொன்னா எப்பவும் உனக்கெல்லாம் புரியாது.

போனை வைத்து விட்டான்.

          🎸🎸🎸🎸🎸

நானும் வாட்ஸாப்பில் நங்கையர் பேசவும் காட்டவும் ஆட்டவும் வருவார்கள் என்று நம்பி இறுதியில் ஒன்றும் ஆகாது போகவே திரும்பி ஒரு உலகத்துக்கு ஒரு சாபம் கொடுத்துவிட்டு கடுப்பில் அதை அன்இன்ஸ்ட்டால் செய்தேன்.

சொக்கலால் பீடியோடு பட்டினத்தாரை போல் அலைந்து கொண்டிருந்தேன்.
என்ஜினீயரிங் தவிர மற்ற படிப்புகள் அனைத்தும் குப்பைக்கு சமமாய் போனது.

வரலாறு, தத்துவம், இலக்கியம் படித்து இருக்கிறேன் என்றால் அவனை அவளை பீயை பார்ப்பது போல் பார்த்தார்கள்.

எழுபதுகளில் பிறந்தவர் வாழ்க்கை உச்ச கேவலமாக மாறியதை எந்த அரசும் வெளியில் சொல்லவில்லை. மாறாக பொறியியல் விஞ்ஞானம் முதலீடு ஈர்ப்பு என்று விதம் விதமான கதைகள் விட்டார்கள்.

எல்லாவற்றையும் கோழி இறகால் காது குடைந்து கேட்டு கொண்டு டீவி மொபைலில் படம் பார்த்தபடி நம் மக்கள் வரப்போகும் வைகாசி கொடைக்கு காத்திருந்தனர்.

பொறியியல் படிப்பு சந்தி சிரிக்க ஆரம்பித்தபோது மக்கள் வாட்ஸப் மூலம் கிசுகிசுப்பில் தன்னை மறந்து ஓங்கி உலகளந்து கொண்டிருந்தனர்.

வசனம் படம் என்று 20kids எக்கச்சக்கமாய் போய் விட்டார்கள் என்று ஏதேதோ ஆய்வு அறிக்கைகள் வந்தன. படித்தனர். பின் விவாதித்தனர். பின்னரும் ஆய்வு அறிக்கைகள் வந்தன. அனைத்தும் குப்பைக்கு போய் சேர்ந்தன.

அங்கே மாட்டிக்கொள்ளாத வரையில் ஆணுக்கும் பெண்ணுக்கும் மங்களகரமாய் போகிறது என்றுதான் இப்போதும் கேள்விப்படுகிறேன்.

வாழ்க ஜனநாயகம். வளர்க உலக தொழில் புரட்சி.

             📲📲📲📲📲

காமாட்சி நேற்று வந்திருந்தான்.

போன் புதுசுடே… பார்த்தியா…

சாம்சங் கெலெக்சி. வெர்சன்…

சரி அதுக்கென்ன?

பாருடா என்றான்.

ஆன் செய்ததும் சனியன் பிடித்த வாட்ஸாப்பில் தகவல் இசை வந்தது.

வெடுக்கென்று என்னிடமிருந்து பறித்து அவன் பார்க்க இயங்க ஆரம்பித்தான்.

கோழியை போல் நானும் தலையை சாய்த்து கொண்டு இங்கிதம் இல்லாமல் நோட்டம் விட்டேன்.

இரண்டு வெள்ளைக்காரிகள்…

இவ ஜெர்மன்காரி என்றான்.

அடப்பாவி…தோலை பார்த்தே நாடு என்ன னு கண்டுபிடிக்கரே என்றேன்.

ஷ்…பேசாம இரு…

டேய்… சிவன் படம். பட்டை விபூதி… உன் dp… நீ கல்யாணம் ஆனவண்டா… என்று அவனிடம் நான் என்னென்னவோ சொன்னேன்.

போனை ஆஃப் செய்தான்.

நேரே நிமிர்ந்து பார்த்தான்.

மணி, படிச்சு படிச்சி நீ என்ன கிழிச்சே? இனிமேல் நீயும் சாகிற வரைக்கும் லைப்ரரி போகப்போறே வரப்போறே. இதை விட்டா வேற என்ன தெரியும்?

ஒண்ணும் இல்லைடா. நான் தலையை குனிந்தேன்.

வேலைக்கு போய் நானும் ஒண்ணும் கிழிக்கலை. பணம் அந்தஸ்து பேரு எல்லாம் இருக்கு. ஆனா என்னமோ இல்லை. மனசு அலையுது. பயப்படுது. என்னமோ எதுவோ சரியா இல்லை னு சொல்லிட்டே இருக்கு. ஸோ எங்கேயோ தப்பு நடக்குது. நல்லா சிக்கிக்கிட்டோம்.

அதுக்கு…

யோக்கியனுக்கு இருட்டில் என்ன வேலை என்றான் காமாட்சி.

சற்று யோசித்து அதானே என்றேன் நான்.

இப்போ என்ன செய்ய நான் என்றான்.

பிளே பட்டனை அமுக்கு என்றேன் நான்.

ஜிகுஜிக்கான்ஞ் ஜிகுஜிக்கான்ஞ் ஜிக்கான்… ஜிக்கு…

             
                🎷🎷🎷🎷🎷

கனிஸ் லுபஸ்

நரேந்திரன் நிஜமான மனிதன்.

அப்படியென்றால் அவன் இன்று எப்படி இருக்க வேண்டுமோ அப்படித்தான் இருக்கிறான் என்று அர்த்தம்.

அவனை நிபுணன் என்றார்கள்.

முக்கியமாக பொருளியலில் நிபுணன். அதி முக்கியமாக தன் கையில் இருக்கும் ஐந்து பைசாவை ஒருவனுக்கு நிமிர்த்தி காட்டி பல ஆயிரங்களை உண்டாக்கும் சாமர்த்தியம் ஏராளம் இருந்தது.

இல்லை. கற்றுக்கொண்டான். பரிமாணம்.

              ✳️✳️✳️✳️✳️

கால் வயிற்று கஞ்சியை கால் கால் கால் காலாக பிரித்து பிரித்து விதம் விதமான பெயர் சூட்டி அரியவகை அமுதாக்கி மூன்று வேளையும் ஸ்பூனில் ஊட்டி விட்டு பெயர் சம்பாதித்து வெறும் பெயரை பணமாக்கும் பிஸ்னெஸ் கோலியாத்.

மனசாட்சி அவனிடம் ஒரு முறை இந்த வாழ்க்கை உனக்கு வெட்கமாக, குற்றமாக இல்லையா என்று கேட்டபோது வெட்கம் கொள்ள வேண்டியது இந்த ராஸ்கல்ஸ் சொசைட்டி என்றான்.

அவனுக்கு அது நியாயம்.

          💱💱💱💱💱💱

கல்லூரியில் அவன் படித்த போது சக நண்பர்கள் சக நண்பிகளின் சைஸ் பற்றி பேசும் போது மெல்ல ஒதுங்கி லைப்ரரி எப்போது திறக்கும் என்று வாசலில் இன்னொரு படிக்கட்டாய் கிடந்தவன்.

படிக்க படிக்க தன் வாசல்கள் திறந்து விடும் என்ற நம்பிக்கையில் புத்தகம் படித்து கொண்டே இருந்த ஒரு அப்பாவி.

அப்போது அவனை புக்வார்ம் என்றார்கள். பின்னர்தான் கிறுக்கன் என்றார்கள்.

காலங்கள் மாறின.

நரேனுடன் படித்து அரியர்க்கு மேல் அரியர் வைத்த மடையர்களின் வாழ்வில் நிறைய மங்கள நிகழ்வு நிகழ்ந்தது.

அவர்கள் அரசு பதவியில் இருந்தார்கள். அரசியலில் இருந்தார்கள். வாகனங்கள் வாங்கினார்கள். வெள்ளை நிற மனைவி பின் வெள்ளை துணைவியர்களுமாய் வாழ்வாங்கு வாழ்ந்தனர்.

நரேன் நூலகங்களில் வாழ்ந்து வந்தான். அங்கிருக்கும் ஒட்டடை பூச்சிகள் குஞ்சும் குளுவானுமாய் ஈக்களும் கொசுக்களும் சாப்பிட்டு வம்ச விருத்தியை பெருக்கி கொண்டே போன போதுதான் நரேன் ரத்தஅடி வாங்கிய வலி உணர்ந்தான்.

அடிபட்ட புலி விடாது.

புலிக்கு இந்த சமூக உளவியல் அத்துபடி. புலி திட்டம் வகுத்தது. புலி சக்தி மிகுந்தது. புலி காத்திருந்தது. புலி வெறியோடு பாய நேரம் கனிந்து வந்தது.

அவன் படித்தது கொண்டே பாழ் அடைந்த சமூகத்தை சாப்பிட ஆரம்பித்தான்.

நிபுணன் ஆனான்.

           💲💲💲💲💲💲

நரேன் தான் நேரிடையாக பங்கு கொள்ள மாட்டான். ஆனால் இவனை கேட்காது எந்த கம்பெனியும் மூச்சு விடாது.

ஹர்ஷத் மேத்தா என்ன பொருளாதார அறிஞரா? சின்ன டெக்னீசியன். நாட்டின் பங்கு வணிகம் படுத்தது. நரேனின் ரோல் மாடல் அவர்தான்.

ஒருநாள் ஸ்வேதா வந்தாள். அவள் ஒரு தொழில் அதிபர். முரட்டு உரையாடல்காரி.

ஆரக்கிள் படித்து கம்ப்யூட்டராய நமஹ என்று ஒரு கூட்டம் நாடு விட்டு கண்டம் விட்டு தாவி ஓடியபோது இவள் துணிந்து ஜாவாவில் பயணித்தாள்.

அதன் அல்கொரிதங்கள் மெஸ்மரைஸ் செய்யும் இடங்களில் தன் வெற்றியை உணர்ந்தாள்.

அவள் பூத்து குலுங்கினாள்.

ஸ்வேதாவின் சொந்த வாழ்க்கையோ நிஜமற்றும் பொய்யற்றும் குழப்பத்தில் விளக்கமாகவும் விளக்கத்தில் மயக்கமாகவும் தள்ளாடி ததும்பி ஒரு தருணத்துக்கு பின்னர் நின்று போயிற்று.

அவள் புருஷன் யார் என ஒருவருக்கும் தெரியவில்லை. தனக்கு கணவன் இருக்கிறார் என்றாள். நரேன் நம்பினான். அதில் அவனுக்கு நஷ்டமில்லை.

தன் கம்பனியின் பாலன்ஸ் ஷீட்டில் எங்கு எதை நிவர்த்தி செய்வது என்பதை நரேன் பிஸிர் இன்றி செய்து காட்டியதில் ஸ்வேதா அவன் திறமையை அறிந்தாள்.

“மேடம் நிர்வாணத்தை நினைவு செய்வது நிர்வாணம் அல்ல. உடைகள். நாம் உடைகள் கொடுத்து பணம் செய்ய வேண்டும். சமூகம் நிர்வாணத்தை தேட வைத்து கலைகள் செய்யும். கலைகள் எப்போதும் உடைகளை விரும்பும். விரும்ப வைப்பதுதான் வணிகம்” என்றான்.

அவள் கம்பெனி நிர்வாகி அல்லவா? உடனே புரிந்து கொண்டாள்.

          💹💹💹💹💹💹

முதலில் நரேனை தன் அலுவலகத்தில் நியமிக்கும் முன் சாமர்த்தியமாக செயல்பட்டாள். தகுந்த ஆட்களை வைத்து அவனை வேவு பார்த்தாள். கணக்குகள் போட்டாள். கூட்டி கழித்தாள்.

திருப்தி வந்ததும் அவனிடம் அவளே போனில் நெருங்கினாள்.

அந்த காட்சிகளை நாம் பார்க்க அந்த காலத்திற்கே செல்ல வேண்டும். அத்தனை உயிர்ப்புடன் இருக்கும்.

இலங்கை கண்டியை சேர்ந்த வாசகி ரக்ஷிதாவின் விருப்பத்தை நிறைவேற்ற அந்த காலத்தில் சற்று பயணிப்போம்.

               ♻️♻️♻️♻️♻️

ஹலோ மிஸ்டர் நரேன்.

யா..அண்ட் மே ஐ நோ அபௌட் யூ?

ஐ ஆம் ஸ்வேதா… உங்க ஆர்டிக்கிள் ஒண்ணு போர்ப்ஸில் படிச்சேன். ஐ வாஸ் டோட்டலி வொண்டர்ட். அமேசிங்…

அக்கட்டுரை ஒட்டு பிளாஸ்திரி போட்டு கத்திரிக்காய் விற்பது பற்றியும் அதை மக்களிடம் ஆரோக்கியமாய் கொண்டு சேர்க்கும் நுட்பம் பற்றியும் கொண்டது. படிக்கும் போது மட்டும் சத்தியமாய் அது சமூக அக்கறையுடன் கண்ணீர் விடும்.

எதை எழுதும் போதும் நரேன் தனக்குள் இப்படி நினைத்து கொள்வான்.

“ஊரே என் வயிற்று பசியையும் உடல் பசியையும் பிறர் பற்றிய எந்த அக்கறையும் இன்றி மானமின்றி, ரோஷமின்றி தின்று கூடி குதூகலம் கொண்டதற்கு இதுதான் பரிசு என்று”.

எழுத்தில் சிலர் உண்மை வைத்து சிலர் சத்தியம் வைத்து சிலர் மனிதாபிமானம் வைத்துதான் எழுதுவார்கள்.

நரேன் தந்திரங்களை அதில் செலுத்தி எழுதுவான். வெளிச்சம் தேடி விட்டில்கள் தேடி வரும். தேடித்தேடி வந்தது.

கிழட்டு விட்டில்களை எப்படி கையாள வேண்டும் இளைய விட்டில்களை எப்படி கையாள வேண்டும் என்பதை அவனுக்கு அறிவு சொல்லி தரும். கை வந்த கலை.

அறிவு என்றால் என்ன? வெளியில் நிற்கும் சமூகம். ஆக, சமூகம் தன் ஒரே ஒரு கையால் தன் பல கண்களை குத்தி கொள்வதில் பாவம் நரேனை குற்றம் சொல்ல முடியுமா? சம்பவாமி யுகே யுகே.

ஆர்கானிக் என்ற பெயரில் உலக உருண்டையில் இருக்கும் பல நாடுகள் வலுவான ஒரு சந்தையை உண்டாக்கிய போது அதன் முஷ்டியை இன்னும் இறுக்க நரேனின் கட்டுரையை வல்லுநர்கள் பலத்த ஆதாரமாக சிண்டிகேட் முன்னர் ஒப்பித்தார்கள்.

நாளை இது பொய் என்று தெரிய வரும் என இன்னொரு வல்லுநர் கோஷ்டி எதிர் கானம் பாடியது. அது நரேனுக்கு தெரியாத ஒன்றா..?

மாற்று கட்டுரை எழுதி கொண்ட பின்தான் மூல கட்டுரை எழுதுவான். மாற்று கட்டுரையை எப்போது எப்படி வெளியிட வேண்டும் என்பதை அவன் அறிவு கற்று கொடுக்கும்.

அறிவு என்றால்…

ஐயோ ஐயோ இவன் பக்கா கிரிமினல் என்று இப்போது வளசரவாக்கம் வனஜா சொன்னாலும் நடந்தது இதுதான். நடக்கப்போவதும் இதுதான்.

              ✳️✳️✳️✳️✳️

ஸ்வேதாவிடம் நீங்கள் யார் என்று நரேன் முதன்முறை போனில் கேட்டபோது “தான் ஒரு விலைமாது” என்றாள்.

இன்டர்நெஷனல் அளவில் டர்ன் ஓவரில் பில்லியன் டாலர் குவிக்கும் அசாத்திய தொழில் விபச்சாரம்.

அதில் ஏதும் உங்களுக்கு வருமான வரி சிக்கல் இருக்கிறதா மேம் என்றான். அதை நேர்மையாகவே கேட்டான்.

அவள் சிரித்தாள்.

பின் கொஞ்சம் நேரம் கழித்து தன் பற்றிய முழு விவரங்களை அவள் கொஞ்சம் சொல்லவும் பகிரவும் ஆரம்பித்தாள்.

காலங்கள் அவர்களை தொழிலில் பிணைத்து வைத்தது. அவள் கம்பெனி லாப வளர்ச்சியில் விஸ்தரிப்பில் நரேனின் பங்கு மிக அளப்பரியது.

செங்கிஸ்கான் படையெடுப்பின் அடுத்த வடிவம் பன்னாட்டு வாணிப வருகையை ஊக்குவித்தல். அரசியல்வாதிகள் தொழில் அதிபர் ஆன பின் கட்சி பேதமின்றி முதலீட்டை ஈர்க்க சலுகை மற்றும் வரி என்றவோர் போதை தரும் வசிய மருந்துடன் அலைந்தனர்.

வாக்கு அளித்தவரிடம் வெள்ளைக்காரன் பெயரில் நான் கம்பெனி கட்டுகிறேன் என்றால் விடுவார்களா? சுற்றி வளைத்து அடிக்க வேண்டும். அடித்தார்கள்.

அதற்கு கல்வியில் இருந்து ஆரம்பிக்க வேண்டும். இதற்கெல்லாம் வெளிநாடு கோட்டு சூட் ஸ்கெட்ச் போட்டு கொடுத்தது.

                ♈♈♈♈♈

“பெற்றோர்களின் முதல் குருட்டு நம்பிக்கை பிள்ளைகளின் கல்வி. இதை விட மென்மையான மோசடியை அவர்கள் மீது திணிக்க முடியாது”.

இந்திய பெற்றோரில் ஒருவர் கூட ‘காக்காய் குருவி யாருக்காக யாரிடம் வேலைக்கு போகிறது? அது தனக்கு உரிய இணையை கண்டு புணர்வதற்கு என்ன அளவுகோல் வைத்து இருக்கிறது’ என்று கேட்க மாட்டார்கள்.

இதை யார்தான் கேட்பார்கள்?

பரிணாமத்தில் மனிதன் ஒரு பூச்சி. ஜந்து. பரிணாமத்தில் நிகழ்ந்த மரபு விபத்தே அவன் சிந்திக்கும் திறன். அழிவின் உச்சம் அந்த சிந்தனை என்னும் டைனமைட்டில் இருந்து ஆரம்பித்தது.

வணிகம். வணிகம். வணிகம்.

‘ஜெயகாந்தன் தனது பிற்காலத்தில் எழுதுவதை முழுவதுமாக நிறுத்தி கொண்டார் ஏன் என்று உனக்கு தெரியுமா’? என்று ஸ்வேதா நரேனிடம் கேட்டாள்.

அவன் பதில் கூறவில்லை.

              ⚜️⚜️⚜️⚜️⚜️

ஒருநாள் அவர்கள் இருவரும் ஊட்டியில் நடந்த ஒரு கான்ஃபெரென்ஸ் சென்றனர். நிறைய வெள்ளைக்காரர்கள்… இனி அப்படி சொல்ல கூடாது, யூரோப் காம்ரேட்ஸ்கள் வந்திருந்தனர்.

ஏகப்பட்ட கார்கள் வழிகளை கடந்த போது உருளைக்கிழங்கு மூட்டைகளை லாரியில் படாத பாடு பட்டு ஏற்றிக்கொண்டிருந்த லுங்கி மனிதர்கள் இதனை அதிசயமாய் பார்த்து கொண்டனர்.

அவர்களுக்கும் தங்கள் பிள்ளைகள் நாளை இப்படி போகக்கூடும் இல்லை போவார்கள் என்ற நம்பிக்கை உண்டு. தடுக்கிய இடமெல்லாம் ஸ்கூலும் கல்லூரியும் கொப்பளித்து பொங்கின.

ஊட்டியில் நரேன் அயல் நாட்டினருக்கு ஒரு திருப்திகரமான உணர்வை உண்டாக்கி இருந்தான். சமூக மேம்பாடு திட்டங்கள் நிறையப்பெற்ற பல தொழில் கட்டமைப்புகள் அன்றைய அவன் உரையில் ஆழமாக இருந்தது.

பரம்பரை கம்யூனிஸ்ட் கூட தன் மூக்கில் விரலை வைக்கும் நிகழ்வு அது.

ஒரு காம்ரேட் நரேன் கையை பற்றி குலுக்கினார். அன்று அவனை பார்க்கும் ஒவ்வொரு நபரும் வாழ்த்தி சென்றனர்.

ஸ்வேதா பெருமிதப்பட்டாள் “எப்படி ஓர் தோழமை நமக்கு வாய்த்தது” என்று.

நரேனுக்கு தெரியும். அடக்க முடியாத மூத்திரம் போகவும் மூன்று ரூபாய் கேட்கும் தேசம் இது என்பது.

பணம் கொண்டு பணத்தை விரையடிக்கும் எந்த பன்னாட்டு அமைப்பிலும் அவன் சமூக மேம்பாட்டு திட்டங்களுடன் நிற்பான். அதன் உள்ளே தீக்குளிக்கும் விஷயங்கள் மட்டுமே விஷங்கள் போல் நிரம்பி இருக்கும். வெளியில் தெரியாது.

இந்த நாடு பால்யத்தில் நரேனுக்கு கொடுத்ததையும் கொடுக்க மறுத்ததையும் அவன் இப்படி திருப்பி கொடுக்கவும் வறுத்து எடுக்கவும் வருந்தியதும் தயங்கியதும் இல்லை.

அப்படியெல்லாம் இல்லீங்கோ நம்ம நாடு…என்று ஆரம்பித்தால் இந்த கதையில் இருந்து நீங்கள் விலகும் பொன்னான நேரம் இதுதான்.

              ☑️☑️☑️☑️☑️

ஒரு குழந்தையின் லட்சியம் டாக்டர் அல்லது என்ஜினீர் ஆக வேண்டும் என்ற குடும்பங்கள் பெருகி கிடக்கும் இந்த நாடு சகல வாய்ப்புகளையும் வழங்கியது. நீடித்த வணிகம் துவங்குவது இங்குதான்.

படித்த மகளுக்கு நூறு யோசனைகளுடன் ஆயிரம் கேள்விகளுடன் தொட்டு பார்த்து சுண்டி பார்த்து கிள்ளி பார்த்து பல் பிடித்து ஒரு கார் பங்களாவுடன் நாய்க்குட்டி வளர்க்கும் மாப்பிள்ளையிடம் கொண்டு சேர்க்க…

ஓரிரு வருடத்தில் அதே பெண் தனது கண்ணாளனின் வேர்வை வாடை பொறுக்க முடியாமல் அவனிடம் விலகி வாட்ஸாப்பில் யாரோ ஒருவனுக்கு பட்டப்பகலில் முடிந்தவரை கால் விரித்து காட்டி… (என் புருசனுக்கு கூட நான் இப்படி காட்டினது இல்ல…ஈஈஈஈஈ) என்று குலாவி கொண்டிருக்கும் செய்தி…

பின்னாளில் அந்த மானம் கெட்ட அப்பனின் காதுக்கு வரும்போது நம்ம மாப்பிள்ளை சரியில்லீங்கோ என்று பிளேட் போடும் சமூகம் நரேனுக்கு மிக உவப்பானது. வணிகம் துவங்கும் இடம் இதுதான்.

அந்த குழந்தைக்கு படிப்பை விட வணிக பார்வை முக்கியம். நரேனுக்கு எதுவும் இந்த நாட்டில் பிஞ்சில் பழுக்க கூடாது, பிஞ்சிலேயே அழுக வேண்டும். அல்லது அழுக வைக்க வேண்டும்.

                 🔰🔰🔰🔰🔰

ஸ்வேதா கேட்டாள்.

“நரேன், உங்களின் ஒவ்வொரு கட்டுரையின் வார்த்தைக்குள்ளும் ஒரு ரணம் இருக்கிறது. அது எப்படி? அதன் மூலம்தான் இந்த சமூகத்துக்கு நீங்கள் சொல்லும் உறைப்பான விஷயங்கள் நல்ல விதமாக செல்கிறது” என்றாள்.

நரேன் அவளை உற்று பார்த்தான்.

பின் அமைதியாக இருந்தான். அவள் அலுவலகம் ஏசியில் நறுமணத்தில் ஒளி வீசி கொண்டிருந்தது. சுவர் திரை விலக்கி கண்ணாடி வழியாக வெளியில் சூர்ய அஸ்தமனம் பார்த்து கொண்டிருந்தான்.

ஸ்வேதாக்கு ஓர் அழைப்பு வந்தது.

ஆடிட்டர்தான் பேசினார். “மேடம், கணக்கு கொஞ்சம் இடிக்கிறது. இதை அப்படியே இன்கம் ஆபிஸில் சப்மிட் செய்தால் வரி நிறைய கட்ட வேண்டும்”.

அவள் அதை நரேனிடம் சொன்னாள்.

அவன் கம்ப்யூட்டரில் அமர்ந்து மார்ச் மாதத்தில் இருந்து வரிசையாக படிக்க ஆரம்பித்தான்.

பின் தலையை நிமிர்த்தி அழைத்தான்.

ஸ்வேதா…

என்ன நரேன்?

ஜெயகாந்தன் பிற்காலத்தில் ஏன் எழுதலை னு தெரியுமா?

அவள் விழித்தாள்.

தெரியல நரேன்.

யாருக்கும் தெரியாது. அவர் அதுபற்றி எதுவும் சொல்லலை.

நான் நினைக்கிறேன்…இனி எழுதி சொல்லி வாசித்து இந்த நாடு ஒண்ணும் உருப்பட போறது இல்லை னு அவர் முடிவு பண்ணி இருக்கலாம். நானா இருந்தா அப்படித்தான் செய்வேன் என்றான்.

அவள் டேபிளை சுற்றி வந்து அவன் தோளில் கையை வைத்தாள்.

அவள் கையை விலக்கினான் நரேன்.

நரேன் அப்படித்தான் என்று எல்லா பெண்களுக்கும் தெரியும். லேசில் சிக்க மாட்டான்.

ஆனால் பெண் என்பவள் ஒரு ஆர்டிசியன் துளை மட்டுமே என்று அவன் நம்பினான்.

அவனிடம் போனால் வெறும் கையுடன் மட்டுமே திரும்ப வேண்டும் ஒன்றும் கிடைக்காது என்றும் சொல்வார்கள். இது ஸ்வேதாக்கும் நன்கு தெரியும். எனவே அவனிடம் அவளுக்கு பயம் இல்லை.

இல்லை நரேன். இந்த சொசைட்டி அப்படி ஆயிடுச்சு. நான் இந்த இடத்துக்கு வர எத்தனை ‘கனிஸ் லுபஸ்’ பார்க்க வேண்டி இருந்தது தெரியுமா?

கனிஸ் லுபஸ் என்றால் ஓநாய். அதாவது இந்த சமூகம் ஓநாயாம். அதாவது இந்த சமூகத்தின் ஆண்கள் ஓநாயாம்.

நரேன் தலை வளைத்து அவளை எண்பது டிகிரியில் பார்த்தான்.

இந்த வருஷம் லேபர்ஸ்க்கு தீபாவளி போனஸ் குடுத்தியா ஸ்வேதா…

இல்ல கொடுக்கலை நரேன். இந்த ஓநாய் ஒவ்வொன்னும் எப்படி குதறும் தெரியுமா. பார்க்கும் போது பழகும் போது பேசும் போது சிரிச்சுகிட்டே மனசுக்குள் இருந்து அவுத்து அவுத்து பார்க்கும். இந்த ஆண் வர்க்கம் முழுக்க அப்டித்தான் என்றாள்.

நரேன் அவளிடம் இன்னும் லேபர்ஸுக்கு பிராவிடெண்ட் ஃபண்ட் மூணு மாசமா போடலையே அது ஏன்..? என்றான்.

உங்க நண்பர் மல்ஹோத்ராவோட ஒரு ப்ராஜெக்ட் ‘டை -அப்’ பண்ணிணோமே. நீங்க சொன்னாதான் அவர் அமௌண்ட் ரிலீஸ் பண்ணுவார். பண்ணிட்டா உடனே கிளியர் பண்ணிடலாம் என்றாள்.

நீங்கள் சொன்னால் மட்டுமே அது பாசிபிள் நரேன் என்றாள் மீண்டும்.

அது முடிந்தால் இந்த ஆடிட்டிங் பிரச்னை எளிதில் முடிந்துவிடும் என்று எழுந்தான்.

ஸ்வேதா விழி விரித்தாள்.

வாவ்..உண்மையா நரேன்.

இரண்டு தோள் பட்டைகளையும் இரண்டு காதுகள் வரை கொண்டு சென்று ஷ்யூர் என்றான்.

கண்ணாடி வழியே பார்த்த போது சூரியன் அஸ்தமனம் ஆகி இருந்தது.

நரேன் ஸீட்டுக்கு வந்தான்.

நரேன், மல்ஹோத்ராவுக்கு போன் பண்ணிடுங்க சீக்கிரம்…

நிச்சயம் இன்னிக்கு ராத்திரி பேசிடறேன். ஸ்வேதா எல்லாத்துக்கும் விலை இருக்கு. அதை கணக்கில் பொருத்த தெரியணும். அது போதும் என்றான்.

ப்ரிஜ் திறந்து, கோக்? என்றாள்.

நோ..ஹார்லிக்ஸ்.

என்ன விலை மல்ஹோத்ராவுக்கு..?

கோக் உறிஞ்சி கம்ப்யூட்டரில் பரவினாள்.

நரேன், அவளையே பார்த்தான்.

“ஸ்வேதா, உண்மையில் நீ பைரேடெட் ஆப்ரேட்டிங் சிஸ்டம்” என்றான்.

“அப்படினா?…” என்றாள் சிரித்தபடி.

“அப்படினா….” என்றவன் சிரித்தபடி அவளிடம் கேட்டான்.

“எப்போ நீ என்கூட படுக்க போறேன்னு அர்த்தம்?

ஸ்வேதா முதல்முறையாக அதிர்ந்தாள்.

நரேன் சொன்னான்.

“நானும் மல்ஹோத்ராவும் சின்ன சின்ன கனிஸ் லுபஸ். இது வெறும் ஆரம்பம். உனக்கு இன்னும் இது மாதிரி நிறைய இருக்கு ஸ்வேதா” என்றான். கழுத்து டையை லூஸ் செய்து கொண்டான்.

நரேனுக்கு இது பல் பிடித்து மாப்பிள்ளை பார்க்கும் ஃப்யூடலிச அப்பன்களுக்கும் கனவுலகில் ஜம்பம் பிடித்து அலையும் பெண்களுக்கும் அவனால் சொல்லி கொடுக்க முடிந்த பாடம்.

                〽️〽️〽️〽️〽️

விம்பெர்லி – மெக்லின்

                          (🔞)

                    ⭕⭕⭕⭕⭕

(கலிபோர்னியா 21.01.2006 மதியம் 3 மணி.)

“இந்த கதையில் இருந்து நான் விலகி செல்ல வேண்டிய நேரம் என்பதை உணர்கிறேன்.

அது முடிந்த சம்பவத்தில் இருந்து காட்சியாகவோ அல்லது காட்சியில் இருந்து சம்பவமாகவோ நிகழும் கணத்தில் புதிய ஒரு வாழ்க்கையை அந்த புதிய பாத்திரம் தனது விருப்பம்போல் மீண்டும் சார்ந்திருக்க முடியும்”.

               🔘🔘🔘🔘🔘

                       பிறகு….. படம், இந்த செய்தி கார்டுடன் முடிவடைந்து விடுமா மெக்லின்… சற்று புதிரான திரைக்கதை. மேலும் உனக்கு சவாலான பாத்திரம்.

இல்லை விம்பெர்லி… படத்தின் துவக்கமே அங்குதான். படத்தின் பெயர் இப்போது Benjamin’s blue pen என்று மாற்றி விட்டனர்.

இந்தப்படத்தில்  எனது காட்சிகள் அனைத்தும் படம் பிடிக்கப்பட்டு விட்டன. நீ இப்போது எங்கே இருக்கிறாய்? என்ன நேரம்…

                🔘🔘🔘🔘🔘

ஹெர்பர்ட் மெக்லினின் நெருங்கிய தோழிதான் விம்பெர்லி.

அவள் இப்போது கலிபோர்னியாவில் பள்ளி கல்வியை முடித்து விட்டு ஒரு ட்ராவல்ஸ் கம்பெனியில் பணி புரிகிறாள்.

மெக்லின் அட்லாண்டாவில் இருக்கும் பியூர் கலர்ஸ் நாடக கம்பெனியில்  ஒரு தியேட்டர் ஆர்ட்டிஸ்ட். சில படங்களில் துணை நடிகனாகவும் நடித்தவன்.

இப்போது வாய்ப்புகள் குவிய முழு நேர நடிகன். இந்த படத்தில் ஒரு மேதட் நடிகன். அவன் உழைப்பு அதி தீவிரமானது.

தி ப்ரஸ்டிஜ் படத்தில் நடித்த மைக்கேல் கேன் பாத்திரத்துக்கு இணையானது.

ஜூலையில் விம்பெர்லியை திருமணம் செய்ய காத்திருக்கிறான். அவளும் கூட.

              🔘🔘🔘🔘🔘

மெக்லின்… நான் இப்போது உனக்கு பிடித்த எல். கிரானடா கலிபோர்னியா பைலர் பாயிண்ட் துறைமுகத்தில் தனியே இருக்கிறேன் உன் நினைவுகளோடு…

ஆஹ்ஹ்…. நல்லது விம். நாம் அங்கே முத்தமிட்ட நினைவுகள் வருகின்றன.

நீ? இப்போது பாரிஸில் தானே இருக்கிறாய் மெக்?

விம்… அங்கிருந்து சில டிகிரிகள் தள்ளி. ஒரு மாறுபட்ட லாட்டிட்டுயூடில் போபிக்ணியில் பன்டின் நகர். நள்ளிரவு நேரம். பனி படர்ந்த நேரம். அறையெங்கும் பனியும் பனியின் நிழலும்…

உனக்குரிய இரவு மாத்திரைகளை எடுத்து கொண்டாயா மெக். இது குறித்து
டாக்டர். ப்ராங் என்னிடம் எப்போதும் நினைவுறுத்தி கொண்டே இருக்கிறார்.
உனக்கு தூக்கம் மிக அவசியம்.

அவை என்னை ஆழ்ந்து உறங்க வைத்து விடும் விம். என் நினைவுகள் அனைத்தும் நடிக்கும் பாத்திரத்தில் மட்டுமே இப்போது இருக்க வேண்டும்.

ஆனால் உன் சார்ந்த பகுதிகள் முழுவதும் எடுக்கப்பட்டு விட்டன.

ஆனால் அவை மீண்டும் திருத்தி எடுக்கப்பட வாய்ப்புகள் இருக்கிறது. இன்னும் முடியவில்லை.

மெக், உன் பிடிவாதங்களை தளர்த்தி கொள்ள வேண்டும். எனக்காக, நமக்காக.

நாம் காதலிக்கிறோமா விம்?

ஆம். எனினும் நிச்சயமாக அதை சொல்ல முடியாது. ஆனால் நான் உன்னோடு பயணித்திருப்பேன். காலம் முழுக்க.

நான் உன்னை சங்கமித்த அந்த மழை நேரம் போலவே இங்கே இப்போது குளிர்கிறது விம்.

மெக்லின், நீ நீல நிற மாத்திரையை நிச்சயம் தவிர்க்காது சாப்பிட வேண்டும்.

ஆஹ்.. சாப்பிடுகிறேன். வழக்கமான பிரா அணிந்திருக்கிறாயா?

ஆம். உனக்கு பிடித்த அதே கருப்பு நிறம்.

இரவில் அவிழ்த்து விடு. என் கதகதப்பை அவை மட்டுமே உணர்த்தும்.

மெக்… இது நள்ளிரவு அல்லவா உனக்கு?

ம்ம்ம்… ஒரே இருள்… அதிகாலையில் நான் விழிக்க வேண்டும். இந்த கொட்டும் பனியில் நீ அதுவரை என்னுடன் பேசு விம்பெர்லி…

மெக்லின்…

விம்…

என்னை உணர முடிகிறதா? என் அருகிருப்பை உனக்குள் புலப்படுத்தும் ஏதேனும் ஒன்றை உன்னால் நினைவில் கொண்டு வர முடிகிறதா? மெக்.

ஆம். ஆனால் அது நாம் சேர்ந்திருந்த அந்த கடற்கரை வீடு. உன் சிற்றப்பாவின் அடுக்கு வீட்டில்… உனக்கு நினைவு வருகிறதா?

நீ வலு மிகுந்த புணர்ச்சியில் அன்று செயல்பட்டாய். உன் நகத்தின் கீறல் என் நெஞ்செங்கும் வரிகளாக பதிந்த தினம்.

விம், அன்று நீ என் மீது துவண்டு கிடந்ததை இந்த பனி இப்போது எனக்கு சொல்கிறது. அன்று நீ என்னிடம் என்ன  கூறினாய்? நினைவிருக்கிறதா?

நீ காமம் சிலிர்த்த புயல் என்றேன்.

விம்பெர்லி…. விம்….

மெக்… நீ தூங்கு…

இல்லை. நீ இப்போது மனதில் என்னோடு இணங்கி இரு.

இது அர்த்தமற்றது மெக்லின்.

ஆனால் ஆழமானது விம். நீ பேசு. நான் சுய இன்பம் செய்து கொள்கிறேன்.

நோப்… இப்போது முடியாது விம்.

பயமா இல்லை தயக்கமா?

இரண்டும் இல்லை. நான் நிற்பது கடும் வெயிலில். நிலப்பரப்பில். அலைகளோடு.

விம்….

மெக்லின்… என்னை இப்போது  உன் அருகில் சலனமின்றி உணர்கிறாயா?

என் மனதில்… உணர்கிறேன்.

எப்படி?

என்னால் காற்றை கற்பனையில் பார்க்க முடியும். அது என் உடலில் சிலிர்த்து சுழல்வதை உணர்ந்து இருக்கிறேன்.

பின்…

ஒரு பழகிய உணவின் சுவையை கற்பனையில் என்னால் சுவைக்க முடியும்.

எந்த பூவின் மணத்தை நீ எளிதில் கண்டறிய முடியும் மெக்?


விம், பூக்களில் வாசனை இல்லை. பூக்களை சுற்றி வாசனை உண்டு.

விம் நீ ஒரு  கட்டுப்பாடற்ற மகரந்த தீவு. உன் நுனிகளில் நான் வழிந்து சிதறும் பண்டீன் நகரத்து பனித்துளி. என்னை இறுக்கி கட்டிக்கொள் விம்.

மெக்லின்…

அப்படியே தூங்கு. ஒரு நிழலாய் உனக்கு தெரிவதை நம்பி பயணிக்க துவங்கு.

               🔘🔘🔘🔘🔘

மெக்லின்…

விம்… இருக்கிறாயா?

நீ உடல் உறவுக்கு காரணமற்ற புராதனம் நோக்கி கற்பனை செய்கிறாய்… அது தவறு. காட்சிகளில் எதுவும் இல்லை மெக்.

நான் கலைஞன். நிகழ்காலம் ஜன்னி போல் என்னை வதைக்கும் விம். இன்றும் உன் வாடாத மார்புக்காம்புகள் முன் ரோமானிய ஈட்டிகள் கூர் இன்றி செயலிழந்து போகுமென நம்புகிறேன்.

அவைகளை இன்னும் நெருக்கமாக ஆழமாக வந்து பார் மெக்.

வேண்டாம். அதன் மீது ஒளி படரட்டும். நான் என் விரல்களால் தொடும் போது அதன் ஒளி குன்றி விடும்.

மெக்லின் உடல்களை நீ ஆராதிக்க வேண்டாம். ஆயினும் நீ பார்ப்பதை உணரும்பொழுதில் நான் தீவிர ஆழத்தில் சரிந்து செல்வதை உணர்கிறேன்.

ஆனால்…விம் நானோ, உடல்களை அல்ல அதில் ஈர்க்கும் காமத்தின் துருவங்கள் பற்றி புரிந்து கொள்ள விரும்புகிறேன்.

இந்தியா செல்வோம் மெக். அதுதான் காம சாஸ்திரம் தந்த நாடு அது.

நிச்சயம் செல்வோம். அங்கே எனக்கு தாஜ் மஹால் பார்க்க வேண்டும்.

நீ இப்போது தூங்கலாமே?

உன்னோடு புணர்ந்த பின்.

உடல் அசைவுகளால் நீ விழிப்புடன் மட்டுமே இருக்க முடியும். அது உன் மனதை பலம் இழக்க செய்யும். நிச்சயம் நரம்புகளில் கலவரத்தை தூண்டும்.

விம்… நான் மோகத்தில் மட்டுமே தீவிரமாக முளைக்க யோசிக்க முடிகிறது.

பாரிஸில் ஒரு நாள் சூரியன் பாஸ்டில் கோட்டைக்குள் அச்சமின்றி நகர்வதை பார்த்தேன். சில சுவர் ஓவியங்களில் மான்டேஸ்க்யூவின் படிமத்தை பார்த்தேன்.

இவை அனைத்தும் இப்போது என் நினைவில் காமத்தின் சின்னங்களாக மட்டுமே பொருந்தி இருக்கிறது.

மெக், கலைகள் மூலம் உன் மனதை நீ சலிக்கும் பொழுதெல்லாம் ஒரு பெண் தன் நிர்வாணத்துடன் முன் வருவாள்.

வீனஸ்…?

இல்லை. ஒரு பெண். அவள் தேவதை அல்ல. உலகில் எந்த ஒரு ஆணும் ஒரு பெண்ணிடம் இருந்துதான்  வெளியேறி
காலத்தை உடைக்கிறான். அவன் யோனி வழியே பூமியை பார்க்கிறான். யோனி அவனுக்கு முதலில் சப்தங்களை மட்டுமே பரிசளிக்கிறது.

விம்பெர்லி…

மெக்… என்னிடம் வா…

விம்…

என் கண்களை பார்க்க முடிகிறதா?

அவ்வளவு நிச்சயமாக இல்லை. ஆனால் ஒரு துளி நீலநிறம்… பெரிய கடலில் சிக்குண்ட ஆழ்ந்த கவனிக்கப்படாத நிறம்.

ஆஹ்… அதுதான். அங்கிருந்துதான் நான் உன்னை முதலில் பார்த்தேன்.
நீ உன் உடைகளை எந்த பதற்றமும் இன்றி அவிழ்த்து கொண்டிருக்கும் காட்சி அங்கு இன்னும் உறைந்து இருக்கிறது.

விம், என் மனம் உன் வாசனையை அறியும். உன் வாசனை பதிந்த எந்த உடையை நான் அணுகினாலும் என் செவிகள் அதிக கூர்மை கொள்வதை இப்போதும் கணிக்க முடியும் என்னால்.

விம்பெர்லியின் வாசனை என்ன மெக்?

அது தொல்லியல் வடிவம் கொண்டது. உலகின் எல்லா பெண்களுக்கும் அப்பாற்பட்டவள் நீ என்பதை எனக்கு மட்டும் சொல்லும் உனது அக்குளின் வாசனை.

அதை நான் நுகரும் பொழுதெல்லாம் பிரபஞ்சம் ஒளிரும். விலங்குகள் திடுக்கிடும் நொடிகள் போன்றது அது.

கவிஞர் வால்ட் விட்மன் சொல்வார் எனது அக்குளின் வாசனை பிரார்த்தனையை விட நேர்த்தியானது என்று…

மெக்லின்… என் இதழில் முத்தமிடு. உன் நாசிக்காற்றை சீற்றமின்றி என் முகத்தில் படர விடு.

விம்பெர்லி…

மெக்… உன் கால்களை சற்று இணைத்து கொள். என் கால்களால் உன்னை பற்றி கொள்கிறேன். ஈரமாகும் உன் உறுப்பு எங்கோ தவித்தபடி இருக்கட்டும். இப்போது எனக்குள் அதை செலுத்தி விடாதே.

விம்பெர்லி….

என்னை பார் மெக்லின்… இப்போதும் நீ தடுமாறுகிறாயா? சுதந்திரமற்று இருக்கிறாயா? ஆணின் அசைவுகள் உன்னை கொடுமைப்படுத்துகின்றதா?

இல்லை. நான் மீண்டும் மீண்டும் என்னை தொலைக்க விரும்புகிறேன்.

எப்படி?

இங்கிருந்து… அங்கிருக்கும் உன்னிடமிருக்கும்… என்னை நான்…

மெக்லின்… மிக அழகான வரிகள்.

இது சாத்தியமா விம்…?

காதல் காமத்தில் பதங்கமுறும்போது இது ஏன் சாத்தியமாகாது?

ஆனால்… எதுவும் மரணத்தில் மட்டுமே சாத்தியம். மரணம் எந்த தந்திரமும் இன்றி செயலூக்கம் மட்டுமே கொண்ட விடுதலை. அது எனக்கு இப்போது புரிகிறது.

நீ உறங்க வேண்டும் மெக்.

ஆம்… தூக்கம் வருகிறது.

தூங்கு…

விம்…. என்னை அணைத்துக்கொள்.

தூங்கு…மெக்லின். நாளை நாம் பேசலாம்.

                🔘🔘🔘🔘🔘

(பண்டீன். பிரான்ஸ். 23.01.2006 காலை 7 மணி.)

விம்பெர்லி தொலைபேசி அழைத்தது. அழைப்பு ஃப்ரான்ஸிலிருந்து என்பதால் அது மெக்லின் உதவியாளர் என்பதை தெளிவு செய்து கொண்டாள்.

என்ன விஷயம்? மெக்லின் நலமா?

Benjamin’s blue pen யூனிட்டில் இருந்து  வின்ஸ்டெர் பேசுகிறேன். அசிஸ்டெண்ட் இன் டெக்னிக்கல் யூனிட்.

விம்பெர்லி, செய்தி என்னவெனில்… மன்னிக்கவும். இன்று  அதிகாலையில் ஹெர்பர்ட் மெக்லின் இறந்து விட்டார். நீங்கள் இறுதியாக அவரிடம் பேசியது குறித்து ஏதேனும் சொல்ல இயலுமா. விசாரணைகள் துவங்கி விட்டன…

ஆனால்… நான் அவரோடு பேசியது மூன்று நாட்களுக்கு முன் அல்லவா?

விம்பெர்லி மயங்கி விழுந்தாள்.

                🔘🔘🔘🔘🔘

கதித்த மனத்தில் ஒருத்தி பதத்தை

(🔞).

                  ♥️♥️♥️♥️♥️

எகிப்து.

மகதி விரிகுடாவில் இருக்கும் கிபியூன் தீவு.

சிலிர்க்கும் செங்கடலை அதிர்வின்றி நோக்கியபடி ஜாஸ் மகாட்டி ஓயஸீஸ் ரிஸார்ட் அமைதியோடு நின்றது.

விடுதி மேலாளர் ஃபெகார்னோ இறுதி தீர்வாக ஜலியிடம் இப்போது பேசுகிறேன் என்று சபிக்கு உறுதி கொடுத்தார்.

ஜலி யார் என்பது சபிக்கு இப்போது முக்கியம் இல்லை. இந்த இரவில் தங்க அறை இப்போது மிக அவசியம். செங்கடலின் குளிர் வாதை இரவை கடுமையாக பாதிக்கும் என்று சுதிர் பலமுறை சபியிடம் கூறி இருக்கிறான்.

சில நிமிடங்கள் உதிர்ந்து போய் முடிய திரும்பி வந்த ஃபெகார்னோ புன்னகையுடன் சபியிடம் கூறினார்…

“ஜலிக்கு நீங்கள் உடன் தங்குவதில் எந்த மறுப்பும் இல்லை என்பதால் நீங்கள் இப்போதும் மிகுந்த அதிர்ஷ்டக்காரர்”.

சபி சற்று நிம்மதி ஆனாள்.

இருவரும் ஒரே அறையை அன்றைய இரவை பகிர்ந்து கொள்ள முடியும்.

               ♥️♥️♥️♥️♥️

நீங்கள் இந்தியாவா…

ஜலி கேட்டபோது சபி தான் ஒரு மராட்டி பெண் என்றாள். ஜலி குஜராத் சேர்ந்தவள். ஆனால் பிறந்து வளர்ந்தது எல்லாம் தமிழ்நாடு.

சபி, நீங்கள் வந்த நோக்கம்? டூரிசமா?

இல்லை ஜலி. இங்கே சில இடங்களில் போட்டோஷூட் சார்ந்த வேலைகள் இருக்கின்றன. அதற்கான இடங்களை தேர்வு செய்ய வந்தேன். என் கணவர் சுதிர் இந்தியாவில் பிரபலமான இரு விளம்பர நிறுவனங்களை நடத்துகிறார்….

ஜலி ஒரு சிறிய கோப்பையில் ஒயினை நிரப்பிக்கொண்டு கண்ணாடி சாளரம் நோக்கி சென்றாள். கடல் பார்த்தாள்.

உனக்கு திருமணம்… ஜலி?

இரண்டு முறை திருமணம் ஆயிற்று. இப்போது நான் யாருடனும் இல்லை..

ஒஹ்…. மன்னிக்கவும்.

பரவாயில்லை. ஒயின் சாப்பிடுகிறாயா?

நிச்சயம். வித் வோட்கா.

இருவரும் மத்தியமான தோழமைக்குள் சென்றபோது அந்தி மறைய ஆரம்பித்தது.

செங்கடலின் மீது தூறல் பதிவதை ஜலி ரசித்து கொண்டிருந்தாள்.

மிக்க நன்றி ஜலி. ஒருவேளை நீங்கள் இல்லையெனில் எனக்கு இந்த அறை கிடைக்காமல் போய் இருக்கும். மிகவும் கஷ்டம். இந்த தீவை விட்டு இப்போது வெளியேறவும் முடியாது. ஆகையால்…

சபி… எத்தனை முறை கூறுவாய்? நான் இன்னும் இரண்டு நாட்கள் இங்கேயே இருப்பேன். நீ விரும்பினால் என்னுடன் இருக்கலாம்.

அது சுதிர் என்னை வேலை சார்ந்து பணிப்பதை பொறுத்தது ஜலி.

சபி… உன்னுடையது காதல் திருமணமா? குழந்தைகள் எத்தனை?

இல்லை. நாங்கள் பிள்ளைப்பேற்றை சற்று தள்ளி வைத்திருக்கிறோம்.

சபியின் நாணத்தை ஜலி உணர்ந்தாள்.

சட்டென்று நினைவு வந்தது போல் நீங்கள்? உங்களுக்கு குழந்தைகள்? என்று சபி கேட்டு கொண்டிருக்கும்போதே ஜலி எழுந்து சென்று மீண்டும் ஆர்ப்பரிக்கும் கடலை பார்க்க ஆரம்பித்தாள்.

நிமிடங்கள் கழிகின்றன.

ஸ்பெயின் வோட்காவில் தன்னை வீழ்த்தி கொண்டிருக்கும் சபியின் கண்கள் வளைந்த தாமரை இதழ்கள் போன்று தெரிந்தன.

சபி?

சொல்லுங்கள் ஜலி?

ஜலி அவளை நெருங்கி அமர்ந்தாள்.

உன்னை எனக்கு பிடித்து இருக்கிறது.

எனக்கும். நீங்கள் மிகவும் அன்பானவர் என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

அன்பு?

ம்ம்ம்…

அன்பு எதன் மொழி? அது எதை எப்படி பேசும்?

அது பேசுவது இல்லை. மனதிலிருந்து காலங்களை விடுவிக்க செயல்படும்.

உண்மைதான்.

ஜலி எழுந்து சென்று இன்னும் இரு கோப்பைகளில் வோட்கா மட்டும் நிரப்பி கொண்டாள்.

இருவரும் அருந்த துவங்கியபோது இருள் கிபியூன் தீவை உள்ளிழுத்து கொண்டது.

சபி…

சொல்லுங்கள்.

உன் மார்புகள் மிக அழகாக இருக்கிறது.

ஜலி, இப்படி பேசி நீங்கள் எனக்கு அச்சம் தர வேண்டாம்.

இல்லை. உண்மைதான். அது ஆண்களின் மனதுக்கு வேண்டிய அளவு ஓப்பியம் தர தயாராக இருக்கிறது.

நான் வெட்கமுறுகிறேன் ஜலி.

ஜலி சபியின் மிக அருகில் அமர்ந்து கொண்டாள்.

உன்னிடம் நான் நிறைய பேசவேண்டும்.

இந்த இரவை நாம் அதற்காக்குவோம்.

இப்போது சபியின் போன் ஒலித்தது.

அவள் பேசி முடிக்கும்வரை ஜலி காத்திருக்க….

பேசிவிட்டு சுதிரிடம் இருந்துதான் இந்த அழைப்பு என்றாள்.

என்ன விஷயம்?

இறுதியில்… நாளை நான் இந்தியாவுக்கு செல்ல வேண்டும்.

அப்படி எனில்…

நாளை மாலை நான் கிளம்ப வேண்டும்.

ஆக நமக்கு இந்த ஒரு இரவு மட்டுமே.

ஏன்? நீங்கள் எப்போது இந்தியா வரப்போகிறீர்கள்?

அது இப்போது சொல்ல முடியாது. நான் இங்கிருந்து பத்து நாட்கள் கழிந்த பின்னர் எத்தியோப்பியா செல்ல வேண்டும். அங்கிருக்கும் ஒரு யூனிவேர்சிட்டியில் ஆங்கிலத்துறை பேராசிரியர் நான். நான் இறுதியாக இந்தியா வந்து ஆறு ஆண்டுகள் கூட முடிந்து இருக்கலாம்.

ஒஹ்…இது இப்போதுதான் எனக்கு தெரிகிறது. எனில், ஜலி உங்கள் கணவர்?

அவர் ஒரு ஆண்.

ஆண்களைத்தான் மணம் செய்வோம். சபி மெல்ல சிரித்தாள்.

ஆனால் அது எப்போதும் பெண்ணுக்கு உரிய உடல் அல்ல.

ம்ம்…கேள்விப்பட்டிருக்கிறேன்.

சபி, அதை நீ உணர்ந்திருக்கிறாயா?

இல்லை.

எப்போதும் வெகு நிச்சயமாக சில கணங்களில் பெண்களுக்கு வந்து போகும் எண்ணம் அது.

அப்படியெனில்?

ஜலி சபியின் தோள் மீது சரிந்து மெல்ல கூறினாள். இந்த மார்பின் உஷ்ணம் ஒரு பசித்த ராஜாளி பறவையை எனக்கு காட்டுகிறது.

ஜலி…சற்று விலகி இருங்கள். ஃப்ளீஸ்.

அறைக்குள் ஹீட்டர் ஒலி மட்டும் கேட்டு கொண்டிருந்தது.

அவர்கள் இருவரும் பெரிய வெல்வெட் மெத்தையில் இரண்டு கடினமான துருவ கரடிகள் போல் அமர்ந்து இருந்தனர்.

சபி.. நான் கல்லூரியில் படிக்கும் போது ஹாஸ்டலில் தங்கியவள். அங்கு மூன்று முறை இந்த நிகழ்வு எனக்கு நேர்ந்தது. அங்கு க்ரிஸ்ட்டினா என்னை துளைத்த நினைவை வெகுகாலம் என்னால் மறக்க முடியவில்லை.

பின் ஆண்கள்?

அவர்கள் நமக்கு விதைக்கும் இயந்திரம். போர்க்களம். உடலை கிழிக்கும் மருத்துவ அரக்கர். அவர்கள் நிரப்புவது எல்லாம் உடலின் மீது சில வரைபடங்களை மட்டும்.
உயிரில் இன்னொரு உயிர் கலந்து சிந்திக்க வேண்டுமென்றால் ஒரு பெண்ணுக்கு பெண் மட்டுமே பாதுகாப்பு என்றுதான் இப்போது நினைக்கிறேன்.

சுதிர் உறவு முடிந்து சபியின் மீதிருந்து எழுந்திருக்கும் போதே அவன் அலுப்புடன் பெரிய கொட்டாவியை விடுவதை பார்த்த நினைவு அவளுக்கு வந்தது.

ஜலி இப்போது என்ன சொல்கிறாள்?

             ♥️♥️♥️♥️♥️

நீ என்ன சொல்கிறாய் ஜலி?

ஜலி சபியின் மேலாடை பித்தான்களை கௌரவமாக விடுவித்தாள்.

இப்போது அந்த செயலை சபி எதிர்க்கும் மனம் இன்றி போனாள்.

உன்னை எளிமையாக்கு சபி.

இருந்தும்…நீ…பெண்…

பெண் மனதின் இன்னொரு வடிவமாய் இன்னொரு பெண் உடலை பார்த்தது உண்டா?

இல்லை ஜலி.

உலக புராதன ஓவியங்களில் கூட அது இருக்காது. வேட்டை மிருகங்களின் வாழ்க்கை வழியே தன்னை வடிவமைத்து கொண்ட ஆண் தன் புணர்ச்சியையும் அப்படியே கற்று கொண்டதன் விளைவு.

இப்போது சபி எந்த மேலாடையும் இன்றி இருந்தாள்.

பார்க்கிறாயா சபி….நீ?

எது?

உனது இந்த நிமிர்ந்த மார்புகள். தங்களுக்குள் எந்த இடைவெளியும் இன்றி கடலின் மேற்பரப்பை போல் மெல்ல வெப்பமாகி கொண்டிருக்கும் காட்சி…

ம்ம்ம்…

ஜலி மெல்ல முத்தமிட்டு சிவந்த ஒரு பால் சுரப்பியின் பாதியை தன் வாயினுள் செலுத்தி கொண்டாள்.

சபி தன்னிடம் தாங்க முடியாத அவமான உணர்ச்சி பெருகிக்கொண்டிருப்பதை உணர்ந்த அடுத்த கணம் ஜலியை பிடித்து ஓங்கி தள்ளினாள். விலகி கொண்டாள்.

போதும் விட்டுவிடு ஜலி. மிகுந்த அருவெறுப்பு இது. நான் செல்கிறேன்.

சற்று நேரம் அங்கே அமைதி மட்டும் இருந்தது. தொலைவில் கடல் ஆடி கொண்டிருந்தது.

பசிக்கிறது என்றாள் சபி.

ஜலி எதுவும் பேசாமல் இன்டெர்காமில் உணவுக்கு சொல்லிவிட்டு இன்னும் இரு கோப்பைகள் விஸ்கியை குடித்து முடித்திருந்தாள்.

கடல் தாவரங்களால் தயாரிக்கப்பட்ட உணவுகளை இருவரும் எதுவும் பேசி கொள்ளாமல் சாப்பிட்டு முடித்தனர்.

ஜான் லெஜெண்ட் பாடிய ஆல் ஆஃப் மீ பாப் தொகுப்பை இசைக்கவிட்டு சுருளும் கடலை பார்த்து கொண்டிருந்தாள் ஜலி.

               ♥️♥️♥️♥️♥️

சுதிர் என்னை அடித்திருக்கிறான். அவனுக்கு நான் பிடித்த மாதிரி இல்லை என்று நினைக்கும் போதெல்லாம்…

ஜலி சபி தனக்குள் பேசுவதை கேட்டு கொண்டிருந்தாள்.

சபி, ஆண்கள் தங்கள் அன்பை அப்படியும் காட்டுவர்கள் என்று உனக்கு சொல்லி தந்திருப்பார்களே… என் முதல் கணவன் சௌத்ரியும் அப்படித்தான்.

இவர்கள் உண்மையில் நம் உடல்களை மட்டுமே விரும்புகின்றனர்.

இல்லை சபி. நம் உடல் மூலம் அவர்கள் தந்திரமாக கடந்து செல்கின்றனர்.

எதை? யாரை?

அவர்களை விட்டு அவர்களை.

இறுதியில்…

நமது யோனி அவர்களை விழுங்கி விடுகிறது. ஜலி தன் நடுவிரலை உயர்த்தி பின் அப்படியே கவிழ்த்தாள்.

சபி தலையை குனிந்து கொண்டாள்.

ஆண்களிடம் ஏதேனும் வாசனை இருக்கிறதா அதை நீ என்றாவது உணர்ந்தது உண்டா சபி?

தெரியவில்லை எனக்கு.

நமக்கு தெரியாது மனதுக்குள் தென்படும்.
அகில் தாகூர் வேதியியல் பேராசிரியர்.

நாங்கள் இருவரும் பைசலாபாத் கல்லூரியில் பணியாற்றியபோது ஒரு மாலை நேரத்தில் கல்லூரி வேதியியல் ஆய்வகத்தில் நாங்கள் புணர துவங்கினோம். மழை எங்களை வியப்புடன் பார்த்த அந்தி நேரம் அது.

அவர் என்னை மிகவும் விரும்புவதாகவும் அதனாலேயே என் உடலில் எங்கெல்லாம் துளைகள் இருக்கிறதோ அங்கெல்லாம் நான் நிரம்பி வழிய வேண்டுமென்றும் கூறினார்.

நீ அவரை வெறுக்க இந்த ஒரு காரணம் போதும் என்றாள் சபி.

நான் அவரை நேசிக்க இந்த ஒரு காரணம் போதும் என்றாள் ஜலி.

பின் ஏன் பிரிந்தாய்?

அவர் இறந்து விட்டார். ஒரு விபத்தில்.

பின் ஆண்கள் பிடிக்காது நீ வேறு பெண்களை தேடி சென்று விட்டாயா ஜலி?

இல்லை. நான் எந்த பெண்ணுடனும் உறவு கொண்டது இல்லை.

ஆக என்னிடம்…இப்போது…

அது ஒருவேளை இன்ஸ்டிங்ன்ட் ஆக இருக்கலாம்.

என்ன அது ஜலி?

ஆழ்ந்து யோசிக்க என்ன இருக்கிறது. மனதுக்கு பிடிக்கவும் கவர்ந்து செல்லவும் உடல் ஒரு பொருள் அல்ல. சபிக்கு நான் சொல்வது புரிகிறதா?

உடல் மனதை மம்மியாக மட்டுமே மாற்றி கொண்டிருக்கிறது. இப்படி ஒருமுறை க்ரிஸ்ட்டினா என்னிடம் சொல்லி இருக்கிறாள். பின் வந்த நாளில் அவளை நான் தோத்தரித்து தோற்று போனவள் என்றாள்.

சபி அமைதியாக ஜலியை பார்த்து கொண்டிருந்தாள்.

சுதிர் உன்னை நன்றாக கவனித்து கொள்கிறார் என்பது எனக்கு புரிகிறது என்றாள்.

அப்படி அல்ல. ஆனால் அவருக்காக நான் நன்றாக இருக்க வேண்டும்.

சபி…

நிமிர்ந்து பார்த்தாள்.

உன் கண்கள் இப்போது கலங்குகின்றன.

தலையை குனிந்து கொண்டாள்.

சுதிர் இன்றுவரை என் விருப்பங்களை புரிந்து கொண்டவர் இல்லை.

ஆண்களின் ஆசைகள் விருப்பத்தில் இருந்து அல்ல, அதிகாரத்தில் இருந்து.

நான் ஈரமாகும்போது என்னை அவர் முத்தமிட வேண்டும் என்று விரும்புவேன். அவர் என் மீது வழி தெரியாத லாரியை போல் மோதி கொண்டிருப்பார்.

ஜலி சபியிடம் சென்று அமர்ந்தாள்.

சபி தன் கைகளை ஜலியின் கைகளோடு பிணைத்து கொண்டாள்.

சபி…என்னை முத்தமிடுங்கள்.

சபி ஜலியின் இதழ்கள் மீது  ஒற்றி எடுத்தாள்.

ஆண்கள் போல்… நரகத்தின் முன் நிற்பது போல்… செய்ய வேண்டாம் சபி. பட்டாம்பூச்சியின் சிறகு அசைவது போல் நீ உன்னை நேசிப்பது போல் முத்தமிடு.

அவர்களுக்கு இடையில் ஆஸ்திரேலிய யூலிசீஸ் பட்டாம்பூச்சிகள் காற்றை உண்டு மகரந்தம் சிதற பறந்து போகலாயின.

               ♥️♥️♥️♥️♥️

சபி ஜலியின் கைகளில் நெகிழ்ந்தாள்.
இருவருக்குமிடையில் காற்று அஞ்சி நடுங்கியது.

இரண்டு உடல்களின் ஓரங்களிலும் மின்சாரம் சீறியது. சபியின் உடலெங்கும் ஜலியின் விரல்கள் பூக்களின் நாக்குகளாக உரு மாறி பரவி ஊறின.

சபி…

ம்ம்ம்…

இது பார்…இவன் ஒரு ஆண்.

எங்கே? யார்?

ஜலி தன் நடுவிரலை காட்டினாள்.

என்ன ஜலி?

இதுதான் ஆண். எந்த வடிவமும் இல்லாது எந்த உணர்வும் இல்லாத தண்டு இது.
இதுதான் நம்மை பால் சுரக்க செய்கிறது.

சபி…

ஜலி அந்த விரலை சட்டென்று சபிக்குள் புகுத்தினாள். சின்ன நகமொன்று ஆவேசம் கொண்டு பின் வளைவான பாதையில் திருகும் நதிபோல் பயணிக்க ஆரம்பித்தபோது சபி கண்களை செருகி ஆழ்ந்து கொண்டிருந்தாள்.

ஜலி காட்டுத்தீயை போல் அந்த நதியை விழுங்க விழுங்க தொலைவில் கொதித்த செங்கடல் நிலவொளியில் தன் மேனியில் மீன்கள் துள்ளி துள்ளி சரிவதை பார்த்து கொண்டே இருந்தது.

சபி நிதானிக்கும்போது நள்ளிரவு மணி ஒன்றுக்கு மேல் ஆகி இருந்தது.

இருவரும் மீண்டும் ஒயின் எடுத்து பருகி கொள்ள துவங்கினர்.

               ♥️♥️♥️♥️♥️

என்ன உணர்ந்தாய் சபி.?

சுதிர்…

சுதிர் போன்றா இருந்தது இந்த அனுபவம்.

இல்லை. சுதிர்கிட்ட போகும்போது பெரிய சந்தைக்கு குறுக்கில் வழி விடாமல் சில மாடுகள் நின்று கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ அப்படி இருக்கும்.
ஆனால் ஜலி…நீ வேறு…

நான் பெண்.

நானும் பெண்.

அதனால்தான் நம் உடல்கள் தன்னுள் சிதிலமில்லாத மொழியை கற்று கொள்கிறது. பழகுகின்றது. ஆனால், ஆண்  என்பது பெண் உடலின் மீது வறுமையில் தவிக்கும் முரண் ஆயுதம்.

சபி மீண்டும் ஜலியை முத்தமிட்டாள்.

நான் காதல் என்ற ஒற்றை சொல்லில் மரக்கட்டையை போல் இத்தனை நாட்கள் இருந்திருக்கிறேன் என்றாள் சபி.

காதல் மனிதரிடமிருந்து இன்னொரு மனிதருக்கு அளிக்கப்படுகிறது என்றால் அது உண்மையில் இயல்பான ஒன்று அல்ல. வெறும் சிந்தனை பரிமாற்றம்.

எந்த பொக்கிஷமும் இன்னொரு பொக்கிஷத்தை தேடிக்கொண்டிருக்காது.
பெண்கள் கருவுற்று பிள்ளை பெறுவது என்பது சொத்துடமையின் மறைமுக கட்டளை என்றாள் ஜலி.

ஜலி, நான் உன்னை புணர விரும்புகிறேன். ஆனால் எனக்கு உண்மையில் அது எப்படி என்று தெரியவில்லை என்ற சபியை தன் மீது பரப்பிக்கொண்டாள் ஜலி.

பாஷை காமத்தை குருடாக்கி விடும். ஒரு ஆறு ஒரு கடலை குடிக்க விரும்புவதுதான் காமம். தெரிந்து புரிந்து புணர்வது என்பது மரணத்துக்கு நிறம் பூசி வலை வீசி கண்டறியும் முயற்சி.

சபி, உன்னை இந்த விஷயத்தில் எந்த நுனியிலும் சமாதானம் செய்து கொள்ள போராட வேண்டாம். என்னில் உன்னை தியாகம் செய்ய விரும்பு என்றாள்.

ஜலி, நீ நனைந்திருக்கிறாய். நீ இப்போது என்னுள் வழுக்கி செல்கிறாய் என்றாள்.

ஓடையின் பெரும் சப்தம் விலங்குகளுக்கு இடையில் எப்போதும் குறுக்கிடாது.

உனது நாக்கால் என்னை தொடு. உன் கண்களால் என் உடல் எங்கும் நீவு. உன் உடல் சூட்டில் மனம் தன் சோர்வை போக்குவதற்கு அனுமதி. குகைக்குள் பசித்த எந்த விலங்கும் இருக்க முடியாது.

சபி ஜலியின் உடலோடு உடலாக முறுகி இருவருமாக பிழிந்து முடித்தபோது நள்ளிரவுக்கு வியர்த்து மணி மூன்றை தாண்டி இருந்தது.

              ♥️♥️♥️♥️♥️

செங்கடல் மீது இரவு கனமின்றி பயணித்தது. அது தனக்குள் சொல்லி கொண்டது இப்போது இன்னும் இருவர் தூங்க ஆரம்பித்து விட்டனர் என்று.

பகல் வந்தும் ஜலி எழுந்தபோது மணி ஒன்பதை தாண்டி இருந்தது. பசித்தது.

சபியை எழுப்பினாள்.

குளிக்க வேண்டும் எழுந்திரு.

சபி நன்கு விழித்து கொண்டாள்.

இன்று கிளம்ப வேண்டும் என்ற எண்ணம் வந்தது. ஏன் போக வேண்டும் பேசாமல் ஜலியோடு எத்தியோப்பியா சென்று விட்டால் என்ன என்றும் தோன்றியது.

ஜலி…

ம்ம்.

வா. நாம் இன்று சேர்ந்து குளிக்கலாம்.

சரி வா…

இருவரும் குளிக்கும்போதும் உடலுறவு எண்ணம் தோன்றியது.

ஜலி, நாம் மீண்டும் இன்னொரு முறை…

இருவரும் ஷவரை உச்சத்தில் வைத்து கொண்டனர்.

பத்து மணிக்கு வெளியில் வந்த போது பசித்தது.

             ♥️♥️♥️♥️♥️

காளான் உணவுகள் வரச்சொல்லி விட்டு காத்திருக்கும் நேரத்தில்  ஸ்ட்ராபெரி ஜூஸ் பருகினர்.

ஜலி…

என்ன என்பதுபோல் பார்த்தாள்.

ஐ லவ் யூ.

இப்போது சிரித்தாள்…மீ டூ…

நீ பேசாம இந்தியா வந்துடு.

எதுக்கு சபி?

நாம் ஒண்ணா இருக்கலாம்.

இருந்தா…

சந்தோசமா இருக்கும்.

யாருக்கு?

எனக்கு..அப்பறம்…நமக்கும்..

எப்படி?

நாம்…நாம் தீரத்தீர முத்தமிடுவோம்.

முத்தமிட்டால்?

சபி ஜலியை புரியாமல் பார்த்தாள்.

ஜலி எழுந்து வந்து சபியின் தலையை தன் மீது சார்த்தி கொண்டாள்.

சபி… காமம் ஆண்களின் சிந்தனை. அவர்களுக்கு அது போதை மருந்து. நமக்கு அப்படி அல்ல.

புரியலை ஜலி…

சபி…நேற்று போல் நான் இன்னொரு பெண்ணிடம் இப்படி சென்றது இல்லை. இனி அப்படி செல்லவும் மாட்டேன்.

நேற்று என்னை நான் வரைந்து கொண்டேன். இன்று குளியல் அறையில் அதை அழித்தும் விட்டேன் என்றாள்.

முற்றிலும் புரியலை ஜலி நீ சொல்வது.

எனக்கும் கூட சபி. ஆனால் புரிந்துகொள்ள நாம் ஏன் முயற்சிக்க வேண்டும். மனதுக்கு புரிந்து விட்டால் அது பிதற்றிக்கொண்டே இருக்கும்.

சம்பவங்களின் உதடுகள் மிக பெரியது. வலியின்றி பேசும். காயங்களை விரும்பும் மனம்தான் உடலை ஆட்சி செய்கிறது. நாம் ஒருவருக்கொருவர் நேற்றும் இன்றும் அதை வீழ்த்தி கொண்டோம்.

ஜலி, நாம் ஆண்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறோம். அவர்களுக்கு அது புரியவில்லை. நாம் அப்படித்தான் இருப்போமா ஜலி…

போன் ஒலித்தது.

சுதிர் சபியை அங்கிருந்து புறப்பட்டு உடனே மும்பை வர வேண்டும் என்றும் பின் இரண்டு நாட்கள் கழித்து டோக்கியோ செல்ல வேண்டும் என்று கூறி விட்டு போனை வைத்து விட்டான்.

சபிக்கு தன்னை சுதிர் சாப்பிட்டாயா என்று கூட கேட்காததுதான் கொன்றது. ஜலியை ஆதுரமாக பார்த்தாள்.

நாம் ஆண்களுக்கு வெகு தொலைவில் இருக்கிறோம். அவர்களுக்கு அது எப்போதும் புரியாது சபி. என் சௌத்ரியும் உன் சுதிரும் கணவர்கள். எப்போதும் அதிகார போட்டியை நிறுத்த மாட்டார்கள்.
பெண்ணின் உடல்கள் யாராலும் வரைய முடியாத சித்திரம்.

இரண்டு பெண்களும் தங்களை மறந்து அழுது கொண்டிருக்கும் போது மேசையில் உணவு ஆறிக்கொண்டிருந்தது.

             ♥️♥️♥️♥️♥️

ப்ரா

சீ…போடா…

அப்படியொன்றும் இது குற்றமான கேள்வி அல்ல என்பதுதான் என் எண்ணம்.

சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அது அன்றும் சரி நினைத்துப்பார்க்கும்போது இன்றும் சரி கண்ணியமான உடைதான்.

பார்க்க பனியன் போலவே இருக்கும் அந்த வெள்ளை நிற அகலமான முண்டா பாடியை விசாலம் பாட்டி கொடியில் உலர்த்தி இருப்பாள்.

குளிக்கும் முன்பு ஒரு குச்சியில் புடவை ரவிக்கையோடு இதுவும் சர்வ மடியாய் குளியலறைக்கு செல்லும்.

ஸ்வீதாவிடம் எனக்கு கொஞ்சம் அதீத உரிமை உண்டு. அசடுக்கு அதற்கு மேல் நகரத்தெரியாது என்றும் என்னை அவள் செய்து வைத்திருந்த முடிவுக்கு பங்கம் வராமல்தான் நானும் நடந்து கொள்வேன்.

நாம் நிற்கும் இடத்துக்கு மேல் சரியாய் தலைக்கு உச்சியில் உயரமான இடத்தில் யாரேனும் கருவியுடன் வேலை செய்து கொண்டிருந்தால் உருவாகும் ஒரு மன அவஸ்தையை அடைந்தது உண்டா?

எனக்கு உண்டு. அதுதான் இந்த ப்ராவின் நிறம். அதன் நிறம் பற்றிய என் மனதில் எப்போதும் இருக்கும் தடுக்கல்.

பொதுவான வெண்மை நிறம் எனக்கு சற்றும் ஆகாது. சிகப்பு நிறம் பெரும் அச்சத்தை மனதுக்குள் உருவாக்கும். அது காளி தேவியை நினைவுறுத்தும்.

இப்போது என்னென்னவோ நிறங்கள் வந்துவிட்டன. பெயிண்ட் கடைக்காரர்கள் போல்… அதிலும் வினோதமான வடிவங்கள், விகற்பமில்லாத சௌகர்யங்கள்… அறிவியல் வாழ்க.

ஸ்வீதாவிடம் அதிகமாய் ஒன்றும் கேட்கவில்லை. தினமும் கேட்பது போலவே இன்னிக்கு என்ன கலர் ப்ராடி நீ? என்று கேட்டவுடன் சிக்கும் இடத்தில் ஒரு சின்ன அறையோ கிள்ளி வைப்பதோ நிகழ்ந்து சட்டென்று அம்மா இங்கே பாருங்க என்று அடுக்களை பார்த்து கத்துவாள்.

எனக்குள் அமைதி சூழ்ந்துவிடும்.

போடா..ஃபெட்டிஸ்ட் கடங்காரா என்பாள்.

நான் சிரிப்பேன். அவள் சிவப்பாள்.

செல்ஃபி எடுப்பியாடி…டிக் டாக் போட்டுக்கறையே அது என்ன ? நார்ஸீசம் இல்லையா என்றேன் நண்பர் கவினை நினைத்துக்கொண்டு…

சனியனே அதை டெலெண்டா பாக்கணும். நீ இந்த பாடி பிரான்னு…என்று என்னவோ சொல்ல வந்தும் அவள் தனக்குள் சிவந்து போவாள்.

முகத்தில் மூளும் நாணத்தின் சிகப்பை பார்க்க பார்க்க நான் எந்த நாட்டையும் சமர்ப்பிக்க தயார்.

நேத்தே உன்கிட்ட கேட்டேன்….

என்ன ஸ்வீதா…?

எனக்கொரு Pen name வேணும்.

எதுக்கு அது? இப்பவே உன் பெயரே ரொம்ப அழகா இருக்கே.

இல்ல…கொஞ்சம் ரெவல்யூசனா எழுதணும். அதுக்குத்தான்.

புனைபெயருக்கு எங்கே போவேன்? எல்லா தலைவர்களின் பெயர்களையும் புள்ளிங்கோத்தனமாக இன்றைய சினிமா ஆக்கி விட்டது.

இரண்டு தலைமுறைக்கு முன்னரே புரட்சி என்ற சொல்லுடன் எல்லா வினை சொல்லையும் இணைத்து சூடிக்கொண்டு விட்டார்கள். போயும் சேர்ந்தார்கள்.

பழகுதமிழ் கைவிட்டு செந்தமிழில் ஆராய்ந்து எடுக்க விரும்பினால் நாக்கு சுளுக்கி கொள்கிறது.

ஏதேனும் மன்னர் பெயரை போட்டு கொண்டால் சுற்றி வளைத்து ஜாதியை தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறார்கள்.

ரோபோ, நானோ, டைட்டன், மியூட்டன் என்றெல்லாம் வைத்துக்கொள்ள அந்த அறிவியல் இன்னும் பரவவும் இல்லை. காப்பிரைட் சார்ந்த அவஸ்தைகள் வேறு.

ஸ்வீதா… உனக்கு எந்த மாதிரி பெயர் வைக்கலாம்?

நீயே சொல்லேன்…

ஆங் சென்…

வேண்டாம். அந்த அம்மா இப்போ பிரச்சனையில் இருக்கா…

அம்மாவா…? பெருமூச்சு விட்டேன்.

முன்பு மிக அழகான அரசியல் பெண் தலைவர்கள் யார் யார் என்ற போட்டியில் மியன்மர் ஆங் சான் சூகியும் பங்களாதேஷ் கலேதா ஜியா சிலோன் சந்திரிக்கா குமாரதுங்க பாகிஸ்தான் பெனாசிர் ஆகியோர் ஆசிய அளவில் கடும் போட்டியில் இருந்தார்கள்.

போட்டி என்றால்… அது அந்த காலத்தில் எனக்கும் காமாட்சிக்கும் இடையில் மட்டும்தான்.

வேற எப்படி எதிர்பார்க்கிறே? மெல்ல அவள் தொடையில் கையை வைத்தேன். “இவ்ளோ கனமாவாக பெட்டிகோட் போடுவே..இப்படி போட்டா”…

பேச்சை மாத்தாதே சனியனே…கையை சுண்டி விட்டாள். நல்ல பலசாலி.

கடுப்புடன் என்ன மாதிரி பேர் என்றேன்.

பெயரில் ஒரு கரிஷ்மா வேணும்.

அப்போ காந்த கண்ணழகி னு வச்சுக்க. இப்படித்தான் டிக் டாக் ல ஒருத்தி நேத்து ஒரு பாட்டுக்கு தன்னோட ரெண்டு…

வேண்டாம். அந்த பேர் பிடிக்கலை.

சரி…உன் அப்பா அண்ணா தாத்தா பேர் எல்லாம் ஒண்ணா கலக்கி அதில் நாலே நாலு எழுத்தை அதில் உருவி ஒன்றை உருவாக்கி விடலாம் என்ற யோசனையை உடனே நிராகரித்தாள்…காரணம் அதில் நியூமராலஜி இல்லையாம். இது வேறு.

அப்போ ஆண் பெயர் வைக்கலாமா? சொல்லும்போது ஒலியில் சங்கீதம் மிளிர ஒன்று இருக்கிறது என்றேன்.

என்ன பேர்..?

அழகான மலையாள பெயர் குஞ்சுண்ணி. பிடிச்சிருக்கா? பெரிய கவிஞரும் கூட.

அர்த்தம் என்ன என்றாள் முறைத்தபடி.

சரி வேற முயற்சி செய்யலாம். ஏதாச்சும் நதி, ராகம் இப்படி முயற்சி பண்ணுவோம்.
கங்கைமறத்தி, காவிரிகொண்டாள்…

புடிக்கலை.

புனைபெயர் வைப்பதன் மூலம் வரும் பல சிக்கல்களை அவளுக்கு சொல்ல ஆரம்பித்தேன்.

ஒரு பெயருக்குள் நாம் நுழைந்து அல்லது ஒளிந்து கொள்ளும் போது அதன் மூலமாகவே , அல்லது அதற்காகவே சிந்திக்க வேண்டும். அதாவது அந்த பெயருக்கு சிக்கல், துயரம் என்று எதுவும் வராத வண்ணம். பங்கம் வராதவண்ணம்.

பெண்டாட்டிக்கும் எலிக்கும் பயந்து சாகிறவன் அரசர் பெயரில் நீண்ட நாள் ஒளிந்து கொள்ள முடியாது. புனைபெயர் சிலருக்கு அமைந்து விடும். சிலருக்கு சுமை. உனக்கு அது சுமை என்றேன்.

நீ மட்டும் புனைபெயரில் இருக்க?

புழக்கத்தில் எங்கோ அந்த பெயரை இன்று சந்திக்க முடிகிறது. ஸ்வீதா என்பது உண்மையில் மிக அழகான பெயர் என்றாள்.

அவள் எழுந்து கொண்டாள். ஒரு திருப்தி அவளிடம் இருந்தது.

சரி… நீ என்ன எழுதி இருக்க ஸ்வீதா?

ஒரு சிறுகதை.

முடிச்சிட்டியா…

நாளைக்கு கொண்டு வந்து தரேன்.

சென்றுவிட்டாள்.

மறுநாள்…

***********

ஒரு பத்திரிகையில் வெளி வந்திருந்த கேள்வி பதில் படித்து கொண்டிருந்தேன். நாள் தவறாது எல்லா கேள்விகளுக்கும் பதில் அளிக்கும் சிலரை உன்னிப்பாக கவனித்து அவர்களின் மனநிலை குறித்து கவனமாக ஆராய வேண்டும்.

முக்கியமாக பாஸு, மச்சான், மாப்பு, குருவே என்றெல்லாம் கேள்வி கேட்பவர் நோக்கி இடுகுறி வைப்பார் மனதில் தேங்கி நிற்கும் அவநம்பிக்கை, வழிபாட்டு புத்தி, அடிமைத்தனம், தோல்வி உணர்வுகளை சிந்திக்கவே வினோதமாக இருக்கும்.

அதை நான் படித்து கொண்டிருந்த போது ஸ்வீதா வந்தாள்.

எழுதிட்டேன். இந்தா கதை…

இன்னிக்காவது சொல்லேன். என்ன கலர்?

இதை படி முதலில்… கதை கொடைக்கானலில் நடக்குது.

“மலையின் மீது ஆங்காங்கே பனி போர்த்தி இருந்தது”.

நல்ல ஆரம்பம்டி. கதைக்கு என்ன தலைப்பு வச்சிருக்கே. சொல்லேன்…

கறுப்பு ப்ரா.

பழைய அறையில் வெயில்

நான் அசந்தர்ப்பமாய் விழித்தபோது நடுஇரவு தாண்டி இருக்கும். படுத்திருந்த இடம் கடைவீதியில் இருக்கும் சின்ன செட்டியாரின் மூடிய பலசரக்கு கடையின் திண்ணையில். ரோட்டில்தான்…

அந்த மார்க்கெட் தெருவில் என்னுடன் மூன்று பிச்சைக்காரர்களும் ஓரிரு விலைமாதுக்களும் இருந்தனர். பழக்கப்பட்ட ரோந்து போலீஸ் முருகானந்தம் அப்போது அங்கு இல்லை.

தரை வெளுக்கவும் வீடு போக சரியாக இருக்கும். குளிர் இன்பமாக இருந்தது.

ஒளி கசிய ஆரம்பிக்கும்போது துண்டை உதறிக்கொண்டு படுக்க போட்டுக்கொண்ட பழைய பேப்பரை மடித்து விசிறி விட்டு வீட்டை நோக்கி கிளம்பினேன்.

தெருவில் தூங்குவது வெகு சமீபத்தில் வந்த பழக்கம். வீடு ஒரு நிம்மதியற்ற நிலையை கொடுத்தது.

என் அம்மாவால் தம்பியால் எந்த தொந்தரவும் இல்லை எனினும் இப்போது அந்த வீடு என் வீடாக இல்லை.

பிச்சைக்காரர்கள் என்னை பார்த்து சாவகாசமாக புன்னகைத்தனர். அவர்கள் மீது மரணம் என்ற சொல் கீழ்ப்படிந்து நின்றது. அவர்களிடம் இயந்திரமென்றும் உலோகமென்றும் எதுவும் இல்லை.

இயந்திரம் மனித உறுப்பாய் புழங்க துவங்கியபின் அவன் கோமாளி போல் மாறி விட்டான். இளிப்பை உலறலை தன்னுள் தக்க வைத்து கொண்டிருந்த அவன் அதையே மற்றவரிடம் பிரதிபளிக்கலானான்.

கார்லோஸ் வில்லியம்ஸின் This Is Just to Say கவிதையை நினைத்துக்கொண்டே நடந்தேன். இப்போது இரவு மிகுந்த அலுப்பை தந்தது.

இருட்டு அந்நியோந்நியமான கதகதப்பை கொடுத்து கொண்டிருந்தாலும் உறங்கி கிறங்கி தவித்த விழிகளில் கவனங்களை சிந்திக்கும் திறன் குன்றி போய் இருந்தது.

வீட்டுக்குள் நுழைந்து கட்டிலில் சாய்ந்து கொண்டேன். அம்மா என்னை புரிந்து கொண்டிருந்தாள். இரவுகள் மீது அவள் சாபம் தெளித்து கொண்டே இருந்தது கொஞ்சம் வேதனை தந்தது.

எனக்கு இரவு ஒரு அபத்தமான பகலாய் மாறி விட்டபின் சில கூச்செறியும் நிகழ்வுகளை தவிர்க்க முடியாமல் போனதுதான் சிக்கல்.

*************

அந்த நிகழ்வுகள் என் அறையில் இருந்தன. இல்லை…இருந்தான்…

இருந்தவன் என்பவன் வேறு யாரும் இல்லை.

என்னை போலவே இருக்கும் இன்னொரு மனிதன். ஆம் மனிதன்.

நீங்கள் எங்கிருந்தோ படிக்கும் இதை நம்ப முடியாது என்று எனக்கு தெரியும். நான் உங்களை தொல்லை செய்ய மாட்டேன்.

***********

பெரிய இரு புற வாசல் கொண்ட அந்த விஸ்தாரமான மாடி அறைதான் என் இடம்.
முன்பு அதை நான் ஆக்கிரமிக்க என் மாமாவிடம் சண்டை போட வேண்டி வந்தது. மூப்பில் அவர் தளர்ந்ததும் விட்டு கொடுத்து விட்டார்.

இருபுற வாசல் வழியே காற்று கூவி திரியும். வெயில் பூனை போல் சாளரம் வழியே ஓய்ந்து செல்லும். அழகான அறைதான் அது.

சங்கரன் அந்த அறைக்குள் நுழைந்த போது ஒரு உடலுறவின் அத்தனை கிளர்ச்சியும் நிரம்பி வழிவதை உணர முடிகிறது என்றான்.

உண்மையில் அங்கே நான் காற்றோட்டமாக படிக்கவே விரும்பினேன்.

படிப்பு என்றால் அது மனதில் ஓசையை நிறுத்தும்படியாகவோ அல்லது கலவரத்தை தூண்டும் ஒன்றாகவோ இருக்க வேண்டும் என்ற நம்பிக்கை என்னிடம் இருந்தது.

தேர்ந்தெடுத்த புத்தகங்கள் வாசிப்பு அனுபவம் நிறைய இருந்ததால் கண் கொண்டு பார்க்க முடியாத சில சகதியில் கால் வைக்கும் முன்பே தாவி விடும் பக்குவம் இருந்தது. தவறி மிதித்து விட்டால் அதை கறையின்றி கழுவும் வாசகம் கொண்ட புத்தகங்கள் இருந்தன.

இப்படித்தான் இந்திய கோடை குளிர் காலங்களை தமிழ்நாட்டிலிருந்து நான் கழித்து கொண்டிருந்தேன். அந்த சம்பவம் நடக்கும் வரை.

சம்பவம் கூட அல்ல… சந்திப்பு.

*************

ஒரு நடு இரவில் சில வால் முளைத்த கொசுக்களின் ரீங்கார சப்தம் கடூரமாக கேட்டது. அயற்சியுடன் விழித்து கொண்டேன்.

மொபைலை கொளுத்தி கொண்டு வாகாய் அறைவதற்கு கையை குவித்து காத்து கொண்டிருந்தபோதுதான்
சலனம் இன்றி என் முன்னால் அவன் நின்றான்.

அந்த காட்சியை இன்னும் சொல்ல வேண்டுமென்றால் நான் குறிப்புகள் தவற விட்ட பண்பாட்டு அறிஞனை போல் நின்று கொண்டிருந்தேன் அவன் உருவத்தில். என் முன்னால்…

இப்போது எங்கள் இடையே எந்த இடைவெளிகளும் இல்லை. பேசாத அவனிடம் நானும் பேச ஒன்றும் இல்லை.
தூக்கம் போயே விட்டது. பகல் முளைத்த போது அவன் இல்லை.

நான் நிறைய பரிசோதனை செய்திருக்க வேண்டும். தொட்டு பார்த்து இருக்கலாம். பேசி இருக்கலாம். கூச்சல் போட்டு மக்களை எழுப்பி இருக்கலாம்.

ஒன்றும் செய்யவில்லை. கீழே இறங்கி வேலைகளில் கவனம் கொண்டேன். சிலிர்ப்பூட்டும் நேற்றைய இரவு எனக்கு சொல்லொண்ணா அனுபவத்தை கொடுத்து இருந்தது.

***********

அன்று மதியம் கொரியரில் உதரிங் ஹேய்ட்ஸ் எமிலி ப்ரோன்ட் எழுதிய நாவல் வந்து சேர்ந்தது. அறைக்கு சென்றேன்.

அவன் எதிர்பாரா விதமாய் அங்கிருந்தான்…

பகல் உசிதமான தைரியத்தை எனக்குள் தொடுத்து கொண்டிருந்தது. கேள்விகளை கேட்க ஆரம்பித்தேன்.

என்னை போலவே இருந்தான் என்பதை விடவும் அப்போது எங்களை பார்க்கும் யாருமே நான்தான் அவன் என்று யாருமே மறுமொழி இன்றி சொல்வார்கள்.

பேர் என்ன? யார் நீ? என்று கேட்டேன்.

பதில் இல்லை.

அம்மா என்று கத்திவிடலாம் என்று நினைத்த போதும் மனம் வரவில்லை.
கையில் பயங்கர ஆயுதம் இல்லை என்றாலும் என்னைப்போலவே சற்று மெலிந்து பக்குவமின்றி இருந்தான்.

மீசையை மெல்ல உருவிக்கொண்டேன். அவன் எதுவும் செய்யாது என்னையும் அந்த அறையையும் சுற்றி சுற்றி விழித்து பார்த்து கொண்டே நின்றான்.

கையில் இருந்த புத்தகத்தை அவனிடம் நீட்டினேன். வாங்கி பார்த்து விட்டு பின் கீழே தவறவிட்டான்.

ஏலியன் என்று நினைக்க முடியவில்லை.
வழக்கமான முட்டை கண்களும் உணர் கொம்பு இழைகளும் அவனிடம் இல்லை.

நான் அவன் பேசட்டும் என்றும் அவன் என்ன செய்ய விரும்புகிறான் என்பதை அறியவும் தெரிந்து கொள்ள வேண்டி அவன் எதிரில் அமர்த்தலாய் நாற்காலி மீது உட்கார்ந்து கொண்டேன்.

பெரிதாய் ஒன்றும் செய்யவில்லை. மீண்டும் அறையை நோட்டமிட ஆரம்பித்தான். நான் அவன் பார்வைகள் செல்லும் இடங்களை பார்க்க ஆரம்பித்தேன். சுவரில் ஒன்றும் தெரியவில்லை. நேரம் கடந்து கொண்டே இருந்தது. தொட்டு பார்க்கவும் கொஞ்சம் பயமாய் இருந்தது.

கீழே இறங்கி விட்டேன்.

**************

அந்த மாடி அறை இப்போது எங்கள் இருவருக்கும் என்று மாறிப்போனது. நான் அவன் இருப்பு குறித்து யாரிடமும் சொல்லவும் விரும்பவும் இல்லை.

ஒருமுறை இதை நினைத்து பார்க்க சற்று நிம்மதியாக இருந்தது. யாரோ எனக்கு துணை நிற்பது போலவும் இருந்தது.

நாளடைவில் இந்த உறவு இறுகும் பட்சத்தில் அவனிடமிருந்து என்ன விலக்கி கொள்ளவும் முடியும் என்று நம்பினேன்.

அவன் மனிதனாக இல்லாதபோது ஏதேனும் கால இயந்திரம் வைத்திருந்தால் அதை திருடி விட வேண்டும் என்று முடிவு செய்தேன்.
பழைய காலம் சென்று சில உறவுகளில் கேட்க வேண்டிய கேள்விகள் என்னிடம் நிறைய உண்டு.

நாட்கள் சென்றன. மாதங்கள் உதிர்ந்தன.

அவன் அறைக்குள் மட்டுமே இருந்தான். எந்த ஒரு மாற்றமும் இன்றி என் இயல்புகளில் குறிக்கிடாதவாறு வாழ்ந்து வந்தான். பசி தாகம் எதுவுமில்லை.

நான் எழுதிய சில கவிதைகளை அவனிடம் காட்டினேன். அதற்கு அவனிடம் எந்த முகக்குறிப்பும் தெரியவில்லை.
நாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொண்டதாக நான் நினைத்தேன்.

அப்போது அது நடந்தது.

*************

அவன் அறைச்சுவர் மீது தவழ ஆரம்பித்தான். அது எனக்கு வியப்பை அதிர்ச்சியை கொடுத்தது. ஒரு குச்சியை கொண்டு அவன் முதுகில் தடவும்போதும் குச்சி காற்றுக்குள் பைத்தியம் போல் அரை வட்டம் போட்டு நின்றது.

சுவரில் தவழ்தல் என்பது எனக்கு விருப்பமற்ற செயல். அவன் மொழி எனக்கு தெரியவில்லை. ஒருவேளை அவன் எனக்கு குறிப்புணர்த்தி ஏதேனும் செய்கிறானோ என்று ஆவலுடன் கவனிக்க ஆரம்பித்தேன்.

ஒருவேளை அவன் என் மனம்தானோ என்ற அச்சமும் வந்தது. ஸ்பைடர்மேன் பார்த்த காலத்தில் நான் சுவரில் தவழும் விருப்பம் கொண்டவனாக இருந்தேன்.

அப்போது வீட்டின் மையத்தில் கை கால்களை பரப்பி சுவரில் பயணிக்க ஆவலுடன் பரிதவிப்பேன்.

மனதின் அந்த ஆவலும் அதைப்போன்ற எண்ணற்ற ஆவல்களும் இப்படி கிளம்பி பூரிக்கின்றனவோ என்ற எண்ணம் வந்தது.

அது மனம் என்றால் நான் எங்கிருந்து யோசிக்க முடிகிறது என்றும் கேட்டு கொண்டேன்.

இனி வீட்டில் முக்கியமாக அறையில் இருப்பது நல்லதல்ல என்று முடிவு செய்து தெருவில் இறங்கினேன்.

வெயில் சுட்டது. அலைந்தேன்.

இந்நேரம் அவன் அறைக்குள் என்ன செய்வான் என்று நினைக்கவே கடினமாக இருந்தது.

அது என் மனம்தான். எப்படியோ உருவம் எடுத்து வந்து விட்டது என்று நினைக்க பின் நான் யாரிடம் இப்போது மனமாக மாறி இருக்கிறேன் என்று யோசிக்க யோசிக்க குழப்பம் கூடியது.

மனதை எப்படி வெயில் சுடும்? அதற்கு எப்படி ஐஸ் கிரீம் இனிக்கும்?

************
சின்ன செட்டியாரிடம் போய் நான் இரவில் இனி இங்குதான் தூங்குவேன். அனுமதிக்க வேண்டும் என்று கேட்டேன்.

அவர் தலை சாய்த்து பார்த்து இது உங்கள் கடை என்றார். பின் பில் புத்தகத்தை கவனிக்க ஆரம்பித்து விட்டார்.

எதிர்ச்சாரியில் இருந்த அந்த மூன்று பிச்சைக்காரர்கள் என்னை பார்த்து சின்ன முறுவல் இட்டனர். அது புதுமையாக இருந்தது.

இப்போது தெருவில் படுப்பதும் பசிக்கு வீடு செல்வதுமாக இருக்கிறேன். வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் ஆச்சர்யம் கொள்ளும்படி கனவில் படிக்க முடிகிறது. அதனை ஆக்கியவர்கள் சில விசித்திர சம்பவங்களை அதே கனவில் பகிர்ந்து கொள்கிறார்கள்.

ஒரு நாவலின் கடைசி பக்கத்தின் நுண் துளை மூலம் என் அறிவு மனதுடன் கலவி மேற்கொள்ளும்போது மாடி அறையில் இருந்து யாரோ என்னை அழைத்து பேசுவது போல் உணர்கிறேன்.

கலவி என்றால் அது சுய புணர்ச்சிதான்.
அது எங்கள் இருவருக்கும் இடையில் ஒரு நாவலின் மூலமாகவோ கவிதை வரிகள் மூலமாகவோ நிகழ்ந்தேறி விடுகிறது.

மதியம் பகல் கசங்கி மேகம் திமிறி மழைக்கு ஆராவாரமிடும் தருணத்தில் கூட நான் வீடு செல்வது இல்லை.

அப்போது என்னை யாரோ புணர்கின்றனர்.

************


மலர் மேகங்கள்

போதும். நாம் பிரிந்து விடலாம்.

கீதா இப்படி சொன்னபோது இன்னும் அதிக அமைதியோடு இருந்தேன். அவளும் அதிக ஆழத்துடன் இருந்தாள்.

நான் காரணங்களை கேட்கவில்லை. அவள் கூர்த்த நுட்பம் கொண்டவள்.
அவள் வாழ்க்கையை கேள்விகளில் இருந்து பிரித்து அதன் வெளியே வாழ்பவள்.

நீங்கள் இன்னும் பேசவில்லை ஸ்ரீ.

கீதுவின் விருப்பம் போல செய்யலாம்.

காரணங்கள் கூட வேண்டாமா?

நாம் நமது மனதையும் ஆசைகளையும் ஆராய்ந்து காதலிக்கவில்லை என்று நினைக்கிறேன்.

உண்மைதான் ஸ்ரீ. என் பதற்றங்கள் உங்களை விலக்கி விட வேண்டும் என்னும்போது மனம் மட்டும் தவிக்கிறது.

அவள் பொருளாதாரம் கனவுகள் என்பது பற்றி எல்லாம் பேசக்கூடியவள் அல்ல. அது வாழ்க்கை அல்ல என்பதை புத்தருக்கு முன்பே தெரிந்துகொண்டது போல்தான் நடப்பாள்.

ஏதோ ஒரு தினத்தில் சாயங்கால வேளையில் நான் அவளை பார்த்தபோது அவளிடம் சொன்னது இதுதான்.

உன்னை பிடித்திருக்கிறது.

உங்களையும். எனக்கும்….

இன்று வரை அந்த நிகழ்வை நாங்கள்
விரித்து பேசியதில்லை.

திருப்பி உலர்த்தப்பட்ட மனமாய் இருந்தது இந்த அந்தி. மீண்டும் அமைதியாக இருந்தேன். அவள் எதிரே மட்டும் பார்த்து கொண்டே இருந்தாள்.

ஒவ்வொரு முறையும் நாங்கள் சந்திக்கும் போது அதிக பேச்சின்றி அமைதி மட்டும் அதிகமாய் நிரம்பி இருக்கும். அது எங்களிடையே ஒரு நாய்குட்டியை போல் படுத்திருக்கும்.

பேசிக்கொள்வதை விடவும் ஒருவருக்கொருவர் சுட்டி காட்டிக்கொண்ட காட்சிகள் மிக அதிகம்.

கொதிப்பின்றி மறையும் சூரியனின் விளிம்பின் நேர்த்திகளில் அவள் லயித்திருப்பாள். அவளை நான் பார்த்துக்கொண்டிருப்பேன்.

“அத்தனை பெரிய கோளத்தில் எந்த ஒலியும் இல்லை ஸ்ரீ”.

அது நம்மிடம் பெற்றுக்கொள்ள யாசிக்க நிரூபிக்க எதுவும் கிடையாது கீதா…

சில சமயங்களில் அவளாக என்னிடம் கேட்பது ஒன்றுதான்.

நாம் காதலிக்கிறோமா? அல்லது பொறுப்பை பகிர்கிறோமா?

காதல் என்ற வார்த்தையில் இருந்த அர்த்தங்களில் அனைத்து பொருள் தவறிய சொற்களையும் நாங்கள் நீக்கிக்கொண்டே வந்தோம். பாசப்புலம்பல், பிரிவின் வாட்டம், உருகி தவித்தல் என்பதெல்லாம் எங்களுக்கு கனவிலும் நிறைவேறியது அல்ல.

பரஸ்பரம் தூளியில் படுத்துக்கொண்டு லட்டு ஊட்டி அம்புலி பார்த்து அரவணைத்து கொள்ளும் காதல் பற்றி அவள் ஒருநாள் சிரிப்பாய் சிரித்து கொண்டிருந்தாள்.

“அந்த காட்சியை வடித்து எழுதியவருக்கு நான் கோவை சரளாவின் பெயரில் விருது இருந்தால் கண்ணை மூடிக்கொண்டு வழங்கி விடுவேன் ஸ்ரீ”. சிரித்தாள்.


அவளாகவே சொல்லி கொள்வாள்…
நாம் நம்புகிறோம். நம்மிடம் பொறாமை அழுத்தவில்லை. நாம் தவறி விழுந்தால் உடைந்து போகும் ஆசைகளோடு பயணிக்கவில்லை.

தனியான பாதைகள்தான் நம்முடையது. அதில் பளு மிக்க கடமைகள் உண்டு. இவை அனைத்திலும் நாம் நம்மை மட்டும் உணர்கிறோம். காதல் அல்ல அதன் பெயர்.

அவள் இன்றும் அந்தியின் அஸ்தமனம்
பார்த்துக்கொண்டிருந்தாள்.

நாம் பிரிவதில் உங்களுக்கு வருத்தமா ஸ்ரீ

அப்படி எதுவும் இல்லை. ஆனால் ஆளுக்கொரு பதிலுடன் பிரிவதில் எனக்கு உடன்பாடில்லை.

பதில்களும் கேள்விகளும் காதலுக்குள் ஊற்றைப்போல் பெருகுகிறது. வெகுதொலைவில் ஆகாயம் கடலை குடிப்பது போல் மனதை குடிக்கும் காதல் நமக்குள் செத்து போக வேண்டும் ஸ்ரீ.
நாம் எல்லா பெருமைகளுக்கும் இந்த காதலை காரணமாகவோ க்ரீடமாகவோ காட்டிக்கொள்ள கூடாது.

நான் வழக்கத்தை விடவும் அமைதியாக இருந்தேன். கீதாவை நான் சந்தித்து பழகி இரண்டு வருடங்கள் கூட இருக்கும்.

நாம் திருமணம் செய்துதான் சேர்ந்தும் வாழ வேண்டுமா என்றுதான் கேட்டுக்கொண்டிருப்பாள்.
சில சட்ட ப்ரச்னைகளை சொன்னவுடன் புரிந்து கொள்ள ஆரம்பித்தாள்.

பிரிவு என்பது வெறுக்கிறோம் என்று ஆகாது அல்லவா?

நம் காதலில் கூட அன்பு என்பது வெறும் சொல்தான். நாம் எந்த தவிப்பிலும் இளகிய உணர்வுடன் வாழவில்லை.

நாம் பிரிந்த பின் நம்மை முழுக்க நிறைப்பது எதுவாக இருக்கும் ஸ்ரீ?

அன்புதான்.

அப்படியா…

நாம் முழு மனிதர்களையும் நேசிக்க முடியாது. அது சாத்தியமும் அல்ல. ஆனால் பிரிவுக்கு அப்பால் எதுவும் அற்ற மனதில் அன்பை காண முடியும். அதற்காகவே அது அங்கு தோன்றுவது போல் நமக்கும் புரிய ஆரம்பிக்கும்.

நாம் பிரிதல் என்பதன் மூலம் நமக்கான கடமைகளில் எப்போதும் நாம் நாமாக இல்லை என்பதை மட்டும் தீவிரமான மனதில் நம்ப செய்கிறோம். அது வலி அல்ல. வெகுதொலைவில் இருப்பதை மனக்கண்ணால் உருப்பெருக்கி பார்ப்பது மட்டும்தான்.

அப்படி காண்பதால் ஸ்ரீ?

காண்பதில் சிந்தனை இல்லை. சிந்தனை இல்லாததுதான் அன்பும் கூட.

கீதா என் கைகளை பற்றிக்கொண்டாள்.

நாங்கள் எழுந்தோம்.

ஒரு வீதி ஒரு மனிதன்

“மனித குணங்களை மனிதர்கள் சிலாகித்துப் பேசுவதைவிட கேலிக்கூத்து கிடையாது. ஏனெனில், சிந்திக்கும் நாய்கள் நாய் குணங்களையே உயர்வாகக் கருதுகின்றன.” 
                                               —-ஜி.நாகராஜன்.
                    
                        ✡️✡️✡️✡️✡️✡️

அவனை சில ரகசியங்கள் காப்பாற்றி கொண்டிருந்தன.

அப்படித்தான் எல்லோரும் அவனை பற்றி சொல்லி கொண்டிருந்தார்கள். அவர்கள் சொல்வதென்ன? ஏறத்தாழ அதுதான் உண்மை.

அந்த வீதிக்கு ஆழ்ந்த பைத்தியம் பிடித்து இருந்தது. அது பகலில் விழித்தும் இரவில் தூங்கியும் காலத்தை கழித்தது.

அங்கு இருப்போர் ஒருவரோடு ஒருவர் பகை கொள்ளாது இருக்க உடல் வியர்க்க பணி புரிந்தனர்.

பணி என்ற ஒன்று அமங்களமான  கருத்து. அது தேவையற்ற முறையில் மனிதனை பிணைத்து வைத்து இருந்தது.

வேலை என்பது பெருமை கொண்ட ஒன்றாக நம்பிய மனிதர்கள் வாழ்ந்து வந்த நெடிய பெரிய வீதி அது.

அவன் அந்த ஊர் திருவிழாவின் போது தன் ஆடைகளை முற்றிலும் களைந்து நின்று ஓடவும், பின் கூட்டம் அதிர்ந்து வெட்கமுற்று அங்கிருந்து பதைத்து விலகி ஓடுவதும் வாடிக்கை.

பெண்கள் இதனை அந்த வருடம் முழுக்க பேசி பேசி தங்களுக்குள் சிரிப்பார்கள்.

அடுத்த வருடம் திருவிழாவில் மீண்டும் இது நடக்கும். அப்போது ஜார்ஜியாவின் மாமன்னர் வர நேர்ந்தால் என்ன ஆகும்?
என்று சிரிப்பார்கள்.

ஜோத்சனா வந்தாலும் அவன் அப்படி செய்வான் என்று ஊர் சிரித்தது.

அந்த ஊரின் தென்கிழக்கே பற்பல ஓக் பைன் மரங்களுக்கு இடையில்தான் உன்மத்தம் பிடித்த அந்த வீதி இருந்தது.

அம்மனிதர்கள் பணியில் சிறப்புற்று பின் சீரழிந்தனர். எந்த உழைப்பையும் அவர்கள் கட்டும் வரி தீய்த்து கொண்டே போனது. வரி ஒரு மென்மையான யாரிடமும் பேசாத அரக்கன்.

பேதலித்த வீதிக்குள் நுழையும் மனிதரிடம் ஆவணமும் வரியும் கேட்க ஆரம்பித்தனர்.
பாதசாரிகள் அந்த புது நவீன வணிகம் கண்டு அதிசயித்து தங்களின் குடி இருப்புகளில் அதை நகலெடுக்கவும் விரும்பினர்.

அரசனுக்கு வேண்டிய பலியாடுகள் நிரம்ப பெற்ற அந்த கிறுக்கு பிடித்த வீதியில்தான் மிகப்பல ரகசியங்களுடன் வாழ்பவன் தன் மௌனத்தால்  சதா பட்ஷிகளை உறுத்தி கொண்டிருந்தான்.

நாய்களும் எருதுகளும் கால் கடுக்க நின்று அவன் அசைவுகளை பிரதி எடுத்து கொண்டிருந்தன.

குழப்ப வீதி தன் பணிகளை மேலும் முடுக்கி கொண்டே இருந்தது. அது உள்ளூர் ஷெரிஃபின் விருதுகளை அள்ளி குவிக்க வேண்டுமென்று விரும்பியது.

உழைப்புக்கு இனிய இரவை பலி கொடுத்தாலன்றி அந்த விருப்பம் சாத்தியமல்ல என்பதை ஷெரிஃப் தன் துப்பாக்கியால் வான் பார்த்து இரு முறை சுட்டு பிரகடனப்படுத்தினார்.

சஞ்சல வீதி இரவை உழைப்பால் நிரப்ப விரும்பி பணிகளை துவங்கியது.

அவன் தன்னந்தனியே அந்த வீதியில் தங்கி பிழைத்து மடிய ஆரம்பித்தான்.

சிந்திய உணவிலும் சிதறிய நீரிலும் மட்டுமே அவன் உயிர் உடலுக்குள் கிண்ணத்தில் தேன் அசைவது போல் அசைந்து கொண்டே இருந்தது.

அன்று பெய்த கடும் மழையில் அவன் தன் கையில் இருந்த அந்த பழைய ஓலையை நெற்றிக்கு அருகில் வைத்து கொண்டான்.

வீதி மழையில் சுகிக்க ஆரம்பித்தது. பூப்போன்ற அந்த இருள் இரு உடல்களை நீராய், ஆவியாய்,புகையாய்,ஒலியாய் மாற்றி மாற்றி ஆற்றலுடன் இயங்க வைத்தது.

தெருவை சுற்றி சூழ்ந்திருந்த ஓக், பைன் மரங்கள் மழை அருந்தி கூச்சல் கொண்ட பறவைகளுக்கு இலைகளின் காதுகளுக்குள் முணுமுணுப்பை காட்டி கொண்டிருந்தன.

                       ♻️♻️♻️♻️♻️♻️
வஸிலியெவ்னா தன் கணவன் பாலியேனோவ் புணர ஆரம்பிக்கும் முன் கேட்டாள்… “உண்மையில் அவன் ரகசியம்தான் என்னவாக இருக்கும்”?.

பாலியேனோவ் சொன்னான். “அவன் கையில் வைத்திருக்கும் ஓலையில் எதுவோ உண்டு. அது மன்னனின் காலாட்படை ஒற்றனின் தகவல்கள் கூட இருக்கலாம். இந்த புணர்ச்சிக்கும் நாம் அரசு கஜானாவில் வரி செலுத்துவோம்”.

புணர்ச்சி முடிந்த பின் கேட்டாள். “வரும் திருவிழாவில் அவன் நிர்வாணமாய் செல்வானா? கிரேக்க சிற்பம் போல் இருக்கும் திமிர்ந்த அந்த உடல் பார்க்க நாங்கள் மிக விரும்புகிறோம்.”

பாலியேனோவ் புறம் திரும்பி படுத்தான்.

மழை சொட்டு சொட்டாய் ஓய்ந்து முடிந்த காலத்தில் திருவிழா வந்தது.

பைத்தியம் பிடித்த அந்த வீதி தன்னை அலங்கரிக்க துவங்கியது. அது வீட்டுக்கு வீடு மரத்தால், பஞ்சால் வர்ணங்களால் அலங்கரித்து பருவம் கொண்டது.

அவன் தன் உடலுக்குள் உயிர் மட்டும் தவளையை போல் தாவிக்கொண்டு துள்ளுவதை அலைவதை உணர்ந்தான்.

அவன் ஓலையை கொண்டு தன் முதுகை சொறிந்து கொண்டான்.

வீதி, புதிய தோரண அழகில் , ஒளியில், பிரும்மாண்டத்தில், யௌவனத்தில் , பூரிப்பில்  மிளிர்ந்தன.

அவை எதனிலும் ஒட்டாத எதனோடும் பொருந்தாத அந்த ரகசியவாளி ஒரு காய்ந்து போகாத மான் விட்டையை போல் எதற்க்கோ காத்திருக்கிறான் என்றனர்.

கிறுக்கு பிடித்த வீதி அந்த திருவிழா துவங்கும் முன்பே அவன் சாக வேண்டும் என்று பிரார்த்தித்து கொண்டது.

பின் அவன் மீளாநித்திரை கொள்ள வேண்டும் என்று பிரார்த்தனையை திருத்தி சொல்லி கொண்டது.

எல்லா இரவுகளிலும் முதல் பிரார்த்தனை அந்த ரகசியனுக்கு மட்டுமே இருந்தது.

பனி கொண்ட இரவில் வஸிலியெவ்னா பாதி புணர்ச்சியில் கேட்டாள். “ஒருவேளை ரகசியவாளி இந்த திருவிழாவுக்கு முன் இறக்காது போனால் இம்முறையும்  அவன் நிர்வாணமாய் ஓடுவானா?”.

                   〽️〽️〽️〽️〽️〽️〽️

திருவிழா நாட்கள் வந்து சேர்ந்தன. வாரக்கணக்கில் நிகழும் அந்த கொண்டாட்டத்தில் வெளியூரிலிருந்தும் உறவும் நட்பும் வந்து கூடி களித்தன.

எல்லோரும் எதிர்பார்த்தது போலவும் அவனால் எந்த ஒன்றும் நிகழவில்லை.

மாறாக ஒன்று நடந்தது.

வாலெரி லெபெடெவ்வின் வளர்ப்பு கழுதை ஒன்று அந்த ரகசியவாளியோடு ஒன்றித்திரிந்தது.

இருவரும் உணவென்று கிடைத்ததை பங்கிட்டு உண்டனர். கிடைத்த இடத்தில் படுத்து கொண்டனர். மண்ணில் புரண்டனர். அது கனைத்தபோது அவனும் வாய்விட்டு சிரித்தான்.

ஒப்பனை கொண்ட கிலேச வீதி இந்த உறவை பார்த்து சிரித்து பின் மறந்து  பின் திருவிழா கேளிக்கையில் களித்தது.

அன்று மதியம் திருவிழா நிகழும் போது யாரும் எதிர்பாராவிதமாய் அவன் தன்னை நிர்வாணம் செய்து கொண்டான்.

அதற்கு இன்னும் இரு நாட்களேனும் இருக்கும் என்று பேசி சிரித்த கூட்டத்தில் யாவரும் அச்செயலால் அதிர்ச்சியாகினர்.

பதைத்து விழித்து தெருவை தாண்டி கூட்டம் அருவெறுத்து விலகி ஓடியது.

அவன் குலுங்க குலுங்க ஓடி கூட்டத்தை விரட்டி ஓடினான். தெருவுக்கு வெளியில் மக்கள் சிரித்து சிரித்து சிதறி ஓடினார்கள்.

மேகம் கறுத்து குவிந்திருந்தது.

அந்த கிறுக்கு வீதியில் சட்டென்று ஓர் பெரும் இடி விழ இன்னும் நான்கைந்து மின்னல்கள் கீசி கீசி தெறித்து ஓடுவோர் கண்களில் தெறித்து குத்தியது.

ஓடிய கூட்டம் ஓசை கேட்டு திரும்பிய அந்த ஒரு கணத்தில் தெரு மொத்தமும் தீக்குள் சுருண்டு போனது. எரிய எரிய கரும்புகை உமிழும் காடாய் மாறியது.

அவன் சிரித்தான்.

ஒரு பெரும் கூவலுடன் கை ஓலையை உயர்த்தியபடி கூட்டத்தில் இருந்து விலகி நெருப்புக்குள் பாய்ந்தான்.

அதைக்கண்டு கூட்டம் அதிர்ந்தது.

ரகசியவாளிக்காக தவித்து பதறியது.

அந்த பைத்தியக்கார வீதியின் ஓவ்வொருவருக்கும் அவன் ஏதோ ஒரு  விதத்தில் தங்களின் உறவுதான் அவன் என்பதை அந்த நொடிகள் அவர்களின் மனதுக்குள் படபடத்து சொன்னது.

நெருப்பு மெல்ல தணிய துவங்கியதும் கூட்டம் அவனை தேடி அலறியவண்ணம் உள்ளே விரைந்து சென்றது.

மிச்சம் என்று ஒன்றும் இல்லை.

ஒரு கை. அதில் அந்த பழைய ஓலை.

வேறு ஒன்றும் இல்லை.

ஸில்வியா டாண்டெ அந்த ஓலையை கையில் எடுத்து அதில் எழுதி இருப்பதை சத்தமாய் வாசித்தாள்.

“கடவுள் என்பது வெறும் பெயர்ச்சொல் அல்ல. வினைச்சொல்.”