81. இலியிச்


ஒவ்வொருவருக்கும் நிலைமைகள் என்பது தீவிரமான அச்சத்தை மட்டுமே குறிக்கிறது.

உறுதி அற்ற மனமும், சகல பாவங்களையும் செய்து முடித்த அசதியும் இன்னும் செய்ய வேண்டியதற்கு கூடிய ஆர்வமும் கொண்டிருக்கும் ஒரு மிதமான நாள்தான் இது என்பது விடிந்து முடித்திருந்த பொழுதில் எனக்கு புரிந்தது.

நான் ரஞ்சனா. ரெஞ்செனதிலக் என்பதுதான் என் பெயர். அகதியாக புலம் பெயர்ந்தவன். நாடு நாடாக செல்லும் மனிதன்.

அகதி என்பவன் வானத்திலிருந்து திசைகளை புழுக்கமூட்டும் அதிதி.

என்னையே எனக்குள் அதிதியாக தரிசிக்க முடிந்த பக்குவம் வந்தபோது என் வயதை தற்செயலாக மறந்து போனேன். அதுதான் எனக்கு வீர்யம் அளித்தது.

இதை நீங்கள் வாசிக்கும் போது இதற்காக யோசிக்கும்போது ஒரு முடிவற்ற தளத்தில் நிற்க நேரிடும்.

நான் தளும்பி நிற்கும் தரிசனமென்று எதையும் காண கிடைக்காது இருந்த ஒருநாளில்தான் மனதுக்குள் முண்டி நெருக்கிய வார்த்தைகளில் இருந்து அவ்வப்போது புலப்படும் ஒன்றை கண்டறிய விரும்பி தொலைவுகள் நீள பயணிக்க ஆரம்பித்தேன்.

நான் நின்ற இடத்திலெல்லாம் அமர்ந்து கொண்ட என் மனதுக்கும் எனக்கும் கிளைத்த கலகம் அது. கலகம் என்றால் அது எதிரியாக இருக்கும் இன்னொரு நண்பனிடம் இருந்துதான்.

அதை இன்னும் விளக்கினால் சமூகம் என்ற சொல் வரும்.  நீங்கள் என் சக பயணி அல்ல. உங்களை அழைத்து செல்லும் பக்குவமும் பண்பும் என்னிடம் இப்போதும் எப்போதும் இல்லை.

நான் கண்டுணர்ந்த நரகத்தின் தலைவாசல் முதல் கொல்லைப்புற தென்னைகள் வரையிலும் உங்களின் அடையாளங்கள் சின்னங்கள் உரிமைகள் கடமைகள் என்று யாராலோ தீர்மானிக்கப்பட்டு அதை நீங்களும் சுமந்து நிற்கும் வாதை தரக்கூடிய காட்சிகள் காணக்கிடைக்கின்றன.

உலக சமூகமும் நீங்களும் சிற்சில காரியங்களுக்காக பரஸ்பரம் நம்புவது போல நடித்து கொண்டிருக்கும் அந்த ஆபாச காட்சியை நான் பார்த்த பிறகுதான் என் தனிமையின் உன்னதம் புரிந்தது.

என்னை அழித்து கொள்வதற்காக நான் பயணிக்கிறேன். அதை நீங்கள் கதை என்பீர்களா? ஆமெனில் நான் எப்படி மறுக்க முடியும்?

என்னால் மணல்கயிறு திரிக்க முடியாது. கனவுகளுக்கு வர்ணம் பூச இயலாது. என் காமம் தோட்டாவை போல் இயங்கும். அது மயிற்பீலி அல்ல. எல்லாவித மென்மையும் அரக்கனின் புருவமுடியில் கோர்த்த நீர்த்துளிகள் என்று மட்டுமே நம்புகிறேன்.

நம்புகிறேன் என்ற சொல்….

இதைத்தான் கவனமாக நான் முதலில் அழிக்க வேண்டும்.

அழித்த இடத்தில் மீண்டும் அதே போன்ற வேறொரு சொல்லை எழுத நினைக்கும் மனோபாவம் என்னிடம் இல்லை.  அங்கே என்ன சொல்லை இனிமேல் பொருத்த முடியும்?

தேடத்தான் வேண்டும்.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.