25. அவளுடன் பேசும்போது


மழை வருவது போல் தெரிகிறது ஸ்பரி… இனி நான் என்ன செய்ய வேண்டும்? எனக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தியை அவள் அனுப்பி இருந்தாள்.

எனக்கும் யோசனைகள் வந்தன.

என்ன செய்ய வேண்டும்? என்ன செய்ய கூடாது? யார் சொல்லி செய்ய வேண்டும்? யார் சொல்லி செய்ய கூடாது?

நெருப்பை போல் இருந்தன எனக்கு அந்த கணங்கள்…

மனம் செயல்களில் துல்லியம் அடைந்து பின் அதே செயல்கள் காரணமாகவே மீண்டும் தங்களின்  துல்லியத்தை இழக்கின்றன. தனது துல்லியத்தை இழக்கும் மனம் நீதி நேர்மை சத்தியம் ஒழுக்கம் மீது நாளடைவில் மழுங்கியதோர் கவனத்துடன் அக்கரையின்றி இயங்குகிறது.

ஆழப்புலையில் பெய்யும் மழை என் மனதை நிறைத்து கொண்டிருக்க அவள் என்ன செய்ய வேண்டும் என்பதை சொல்ல தெரியவில்லை.

என்ன செய்ய சொன்னாலும் அது அவளை தூண்டி விடுவதுதான். மிருகம் சக மிருகத்தை தூண்டி விடுவதும் கிடையாது. பறவைகள் போட்டி போட்டுக்கொண்டு பறப்பது இல்லை. தாவரங்கள் தங்களுக்குள் கொலை செய்வது இல்லை.
மனிதனோ இவை அனைத்தையும் வெறும் சொற்களால் வர்ணித்து கொண்டிருக்கிறான்.

கேள்விகள் மட்டும் மனிதனுக்குள் நிரம்பி வழிகின்றன.
அவன் உருக்குலைந்து போகும் வரை கேள்விகளால் மட்டுமே தன்னை துளைத்து கொள்கிறான்.

அப்போது அவளிடமிருந்து இன்னொரு குறுஞ்செய்தி வந்தது.

ஸ்பரி…
மழை இயல்பை தாண்டி அதிகம் பொழிகிறது. ஹோட்டல் அறையின் கண்ணாடி தடுப்பில் தூறல்கள் வைரம் போல் மின்னுகின்றன. இதை நான் நீரின் சிலிர்ப்பாகவே என் மனதில் உணர்கிறேன்.

நீங்கள் தூங்கும் நேரம் இது. தூங்குங்கள்.

______________________________________

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.