64. இலியிச்


எழுந்து கொண்ட அவனுக்கு ஒன்றும் புரியவில்லை என்பது தெரிந்தது.
ஒரு விரலை எதிர் திசையை நோக்கி நீட்டினேன். அதுதான் சிவோக்கி அருவிக்கு செல்லும் பாதை. அவன் நடக்கும்போது நானும் துணைக்கு அவன் பின்னால் சென்றேன்.

அவன் அருவியில் குளித்தான். தன் உடைகளை வீசி நிர்வாணமாகி நன்கு குளித்து முடித்தான்.

பின் ஒரு பாறையில் காயாமல் இருந்த காட்டெருமையின் பால் துளிகளை நக்கி குடித்தான். சூரியனை பார்த்தபடி கீழே படுத்துக்கொண்டான்.

நெடுநேரம் அப்படியே இருந்தான்.

நான் அவனுக்கு இரண்டு இளநீர் கொடுத்து சிறிதளவு முயல் இறைச்சியை சாப்பிட கொடுத்தேன்.

நன்றாக சாப்பிட்டு தூங்கினான். மாலை நேரம் வந்ததும் போதை தரும் கொண்டோ செடியின் விதைகள்  இரண்டை தின்ன கொடுத்தேன். தன் கை கால்களை விரித்து வைத்தபடி அவன் நன்கு தூங்கினான்.

மறுநாள் இருவரும் அருவிக்கு சென்றோம். அவன் முகம் தெளிந்து இருந்தது. அவன் என் நெஞ்சில் ஒரு சுட்டு விரலை வைத்து பின் வானத்தை காட்டினான்.

பிரலோக் பறவைகள் முட்டை இடும் வேனிற்காலம் அது. பறவைகளை நாங்கள் உண்பது இல்லை. அவன் விரல் பறவைகள் போன பின்பும் வானத்தை சுட்டி காட்டியது.

அன்று முதல் என்னோடு இருந்தான். நாங்கள் வேட்டைக்கு செல்வோம். அருவியில் குளிப்போம். போதை விதைகளை சாப்பிட்டு தூங்குவோம்.

மங்கல் நிறத்தில் இருந்த அவன் ஒரு இரவில் மரங்களுக்குள் ஊடுருவி வெளியில் வந்தான். அதை நான் பார்த்தேன். ஒரு சிறுத்தையின் ஒரு ஜோடி கண்களை அவனுக்கு நான் கொடுத்தேன்.

அவனுக்கு ஒருநாள் உடல் அனலாக கொதித்தது. அப்போது அவன் வரைய ஆரம்பித்தான். நாட்கள் சென்றன.

குளிர் மிகுந்த பீடேங் நாளில் என் குடில் தீப்பிடித்து எரிந்தது. நாங்கள் அருவியை நோக்கி ஓடினோம்.

அவன் ஒரு மூட்டையை கையில் வைத்திருந்தான். அதில் என்னவோ இருந்தது. என்னிடம் அந்த மூட்டையை கொடுத்தான்.

பின் அவன் அருவிக்கு பின்னால் சென்று மறைந்து போனான். அந்த மூட்டையில் இருந்ததை நான் கிளர்நிக்கா மிருகத்தின் தோலை கொண்டு மூடி வைத்தேன். அதுதான் இது.

லிப்னி இவை அனைத்தையும் கிழவனாரோடு பேசி தெரிந்து கொண்டு எங்களிடம் சொல்லி முடித்தபோது இரவு வந்து விட்டது.

நளினி, அதை இப்போது உன்னால் படிக்க முடியுமா என்று கேட்டேன்.
லிப்னி தூங்க சென்றதும் நளினி அதை எடுத்து படிக்க ஆரம்பித்தாள்.

அது இலியிச் எழுதியது.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.