54. இலியிச்


நாட்கள் கடந்து போய் கொண்டிருந்தன. வெயிலும் மழையும் குளிரும் வந்தன. போயின.

வாழ்க்கை அப்படித்தான் போகும். அதை நினைவுறுத்தவும் குறித்து கொள்ளவும் நான் என்ன இலியிச்சா?

அவன்தான் அதை கணித்து கொண்டிருப்பான். எந்த வேலையும் செய்வதற்கு இல்லாமல் இருக்கும் அவன், தன் மனதை கவனிக்கும் காட்சிகள் மிக நுட்பமானவை.

மனம் என்பது மெல்ல தத்துவத்தில் கால் நனைத்து காமத்தில் வசீகரித்து கோபத்தில் தள்ளாடி வன்முறையை கட்டவிழ்த்து மீண்டும் அவனிடம் அது நாய்குட்டி போல் வந்து சேரும் வரையிலும் அவன் காத்திருப்பான்.

அப்போது பசி அவனை கொல்லும். அப்போதும் வேலைக்கு செல்லலாம் என்று நினைக்கவே கூசுவான்.

இலியிச்சின் இன்னொரு தடம் வேறு எங்காவது ஆழமாக பதிந்து படிந்து இருக்கலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்ததில் வியப்பில்லை.

ஆனால் எங்கு சென்று தேட முடியும்? யாருக்கு அவனை பற்றி தெரியும்?

அவனோடு எவரேனும் இந்த கணம் இருக்கலாம். ஆனால் அவர்களுக்கும் அவன்தான் இலியிச் என்பது தெரிந்திருக்க வாய்ப்புகள் இருக்காது. அப்படி தெரிந்தாலும் அவர்களுக்கு அவனை வைத்துக்கொண்டு என்ன செய்யலாம் என்பதும் தெரியாது.

இப்படியாக நான் என்னுள் இலியிச் பற்றி மறக்கவே விரும்பினேன். இனி அவன் எனக்கு தேவை இல்லை என்பதே மிக தாமதமாக நான் புரிந்து கொண்டிருக்கும் உண்மை என்று மனம் சொல்லிக்கொண்டே இருந்தது.

மனம் அப்படி சொல்லி சொல்லியே அவனை எனக்குள் நினைவுறுத்தி கொண்டிருந்தது.

எனக்கு அந்த காலை நேரம் வேறு மாதிரியாக விடிந்தது.

நான் வாங்கி வந்த அரைக்கிலோ வெண்டைக்காயில் பாதியும் முற்றல் காய்கள் என்று தெரிந்ததால் மீண்டும் அதை மாற்றி கொண்டு வர கடைக்கு புறப்பட்டேன்.

வாசலில் ஒரு பெண் நின்றிருந்தாள்.

நான் இலியிச்சின் தூரத்து சொந்தம். இலியிச்சின் தங்கை பார்வதிதான் உங்கள் முகவரி கொடுத்து உதவினார் என்றாள்.

அவள் பெயர் நளினி.

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.